லிபிய தலைவர் கேணல் மும்மர் கடாபி பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட முதல் செய்தியை "பிளக்பெறி' கையடக்க தொலைபேசியின் மூலம் அவதானித்த ஹிலாரி அதிர்ச்சியை முகத்தில் வெளிப்படையாக காண்பித்துள்ளார்.கடாபி கொல்லப்பட்ட செய்தி வெளியான போது ஹிலாரி ஆப்கான் தலைநகர் காபூலில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தார்.
இதன் போது அவரது உதவியாளரான ஹூமா அபெடின் "பிளக்பெறி' தொலைபேசியை ஹிலாரியிடம் கையளித்து அதில் வெளியாகியிருந்த கடாபி கொல்லப்பட்ட செய்தியை அவருக்கு காண்பித்துள்ளார். "வாவ்' என தன்னை மறந்து அதிர்ச்சியில் கூவிய ஹிலாரி கிளின்டன் உறுதிப்படுத்தப்படாத செய்திகளின் பிரகாரம் கடாபி பிடிக்கப்பட்டு விட்டார் என அச் செய்தியை சத்தமாக வாசித்துள்ளார்.