Monday, October 24, 2011
கடாபி மூலம் 'மெல்வெயார்': அவதானம் தேவை மின்னஞ்சல் பாவனையாளர்களே!
கடாபி கொல்லப்பட்டுள்ள நிலையிலும் அவர் பற்றிய செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன.அவர் தொடர்பான செய்திகளின் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வமே அதற்கான காரணமாகும்.எனினும் இதனை நன்கு அறிந்து வைத்துள்ள விஷமிகள் அவரின் புகைப்படத்துடன் கூடிய செய்தியை கணனிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மெல்வெயார்களையும் சேர்த்து மின்னஞ்சல்கள் மூலம் அனுப்புவதாக இணைய பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் சோபொஸ் தெரிவிக்கின்றது.
நமது தகவல்களைத் திருடுதல், கணனியை முற்றிலுமாக செயலிழக்கச் செய்தல் ஆகிய பல தீங்கான நடவடிக்கைகள் இதன்மூலம் நடைபெறுவதாக சோபொஸ் எச்சரித்துள்ளது.நம்பகத்தன்மையுடன் கூடிய வகையில் அனுப்பப்படும் இம் மின்னஞ்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும் படி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கின்றது அந்நிறுவனம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF