Wednesday, October 26, 2011

இன்றைய செய்திகள்.

தலைமையிலிருந்து ரணிலை நீக்குங்கள்! கட்சியே அழிந்தே போகும்: ருக்மன் சேனநாயக்க எச்சரிக்கை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என கட்சியின் முன்னாள் உப தலைவரான ருக்மன் சேனநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்காவிட்டால் கட்சியைக் காப்பாற்ற முடியாது பதிலாக அந்தக் கட்சி அழிவுப் பாதைக்கே செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ருக்மன் சேனாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கட்சி ஆதரவாளர்கள் உட்பட சகலரும் கட்சியின் தலைவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தலைவராக ஒதுங்கிக் கொள்ளாது விட்டால் கட்சி சம்மேளனத்தைக் கூட்டியேனும் அவரை தலைவரை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ருக்மன் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கட்சியின் சம்மேளனத்தை கூட்டி இந்த தலைவரை நீக்குவதன் மூலம் கட்சியைக் காப்பாற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரிடம் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வதாக ருக்மன் சேனாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நாமல் ராஐபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கு, விசாரணை இன்றியே தள்ளுபடி செய்த நீதிமன்றம்.

சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையின் போது ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் பரீட்சையின் போது நாமல் ராஜபக்சவிற்கு காற்று சீராக்கியுடன் கூடிய விசேட அறை ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சட்டக் கல்லூரியின் வேந்தர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வழக்குத் தொடரும் அளவிற்கு போதியளவு காரணிகள் மனுவில் குறிப்பிடப்படவில்லை என நீதவான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நுகேகொட எதிரிசிங்க வீதியைச் சேர்ந்த டி.எம். துசார குமார என்பவரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் : ரணில்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களின் அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளது, இவற்றை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பதவிகளை வழங்கும் நிகழ்வு ஒன்று சிரிகொத்தவில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது அரசாங்கம் பல்வேறு வழிகளில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு நிகரான முக்கியத்துவத்துடன் நடைபெற்ற கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் கட்சியை வீழ்ச்சியடையச் செய்தது.
இதன்போது, காவல்துறை சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. 17ம் திருத்தச் சட்ட மூலத்தை ரத்து செய்ததன் மூலம் அரசாங்கம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கையகப்படுத்திக் கொண்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : மேர்வின் சில்வா.

களனி பிரதேசத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி போன்றவற்றை இல்லாதொழிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
களனி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
போதைப் பொருள், கஞ்சா மற்றும் கசிப்பு போன்றவற்றை தயாரிப்போர் மற்றும் விநியோகம் செய்வோருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஹிந்த சிந்தனைக்கு அமைய செயற்பட முடியாதவர்கள் களனியில் கடமையாற்ற முடியாது.
களனி பிரதேசத்திற்கு புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை தாம் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, களனி பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவதாகவும் பிரபல அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களே பிரதானமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சிங்கள ஊடகங்கள் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அமைச்சருக்கு நெருக்கமாக செயற்பட்ட பாதாள உலக குழுத் தலைவரும், போதைப் பொருள் வர்த்தகருமான நபர் ஒருவரின் பெயர் மற்றும் புகைப்பட விபரங்களும் கடந்த காலங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குல் சம்பவத்திற்கு குறித்த பாதாள உலகக் குழுத் தலைவர் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் : சரத் பொன்சேகா.

லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வாகனத் தொடரணிகளுக்கும் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.
அநீதிக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்காலிகமாக நிறுத்தம்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், தற்காலிகமாக தனது தளத்தின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகங்களுக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ்.
இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது.
இந்த நிலையில் தனது தளத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடை செய்துள்ளன. இதனால் எங்களது செயற்பாடுகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிபை எடுத்துள்ளோம் என்றார்.
இரண்டாம் இணைப்பு
விக்கிலீக்ஸ் இணையதளம் மூடப்படும் அபாயம்
விக்கிலீக்ஸ் நிறுவனத்துக்கு விசா, மாஸ்டர் கார்ட், பே பால் மற்றும் வெஸ்டன் யூனியன் வழியாக வரும் நன்கொடைகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதை தொடர்ந்து தற்காலிகமாக விக்கிலீக்ஸ்’ செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதேநிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் விக்கிலீக்ஸ் இழுத்து மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று ‘விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அந்தந்த நாடுகளின் இரகசியங்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இரகசிய கேபிள்கள் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தகவல்களை கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் என்ற இணையத்தள பத்திரிகை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது அமெரிக்க அரசுக்கு பெரும் தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. பல நாடுகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அசாஞ்ச் மீது சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலாத்கார புகார் கூறினர். இந்த வழக்கில் லண்டன் பொலிஸார் அசாஞ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது அவர் ஜாமீனில் வெளியில் இருக்கிறார். சுவீடன் நாட்டுக்கு அவரை நாடு கடத்த லண்டன் கீழ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அசாஞ்ச் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’வாடிக்கையாளர்கள் தரும் நன்கொடையில் விக்கிலீக்ஸ் இயங்கி வருகிறது.

பேங்க் ஆப் அமெரிக்கா விசா, மாஸ்டர்கார்டு, பே பால் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் வாயிலாக ஏராளமான வாசகர்கள் கிரடிட் கார்டு மூலம் நன்கொடை அனுப்பி வந்தனர்.
இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு 35 ஆயிரம் டாலர்கள் கிடைத்து வந்தன. தற்போது இந்த நன்கொடை வரும் வழிகள் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் நன்கொடை வருவது நின்றுவிட்டது.

இதனால் விக்கிலீக்சிற்கு வரும் வருவாய் கணிசமாக குறைந்து தற்போது மாதத்துக்கு 7ஆயிரம் யூரோக்கள் என்ற அளவில்தான் வருவாய் கிடைக்கிறது.
விக்கிலீக்சை தொடர்ந்து நடத்த அடுத்த ஆண்டில் 35 லட்சம் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். அடுத்த இரண்டு மாதத்துக்குள் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படாவிட்டால், புதிய தகவல்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டு நிதி ஆதாரங்களை தேடும் பணியில் விக்கிலீக்ஸ் இறங்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!

மன்னாரை அண்டிய கடற்படுகையில் காணப்படும் எரிவாயு வளத்தை வியட்நாமுக்கு விற்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கெய்ன்ஸ் லங்கா இந்திய நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம்முதல் அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்ததை அடுத்தே எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டது.
மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு மேற்கொள்வதற்கான பிரதேசம் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் இரு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் ரஷ்யா எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிதாக உருவாகியுள்ள எரிவாயு வளம் பெறுதல் தொடர்பான ஒப்பந்தமொன்று அண்மையில் வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வியட்நாமிய அரசின் கீழ் இயங்கும் பெற்றோ வியட்நாம் எக்ஸ்புளறேசன் புறடக்சன் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் குழுவொன்று இன்னும் சில நாள்களில் இதற்கென இலங்கைக்கு வரவிருக்கின்றது.
இந்தக்குழுவினர் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆய்வுப் பகுதியில் எரிவாயு வளம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதுடன் அகழ்வுப் பணிகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த நிறுவன உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதியின் அண்மைய இலங்கை விஜயம் குறித்து பிரபல்யப்படுத்திய இலங்கை அரசு எரிவாயு வளம் தொடர்பாக இரு நாடுகள் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தத் தவறியுள்ளது.
உலகின் 18 நாடுகளில் மொத்தமாக 23 எரிவாயு மற்றும் பெற்றோலிய எரிபொருள்கள் அகழ்வு நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் வியட்நாமிய அரசு தனது புதியதொரு திட்டமாக இலங்கையின் எரிவாயு வளத்தை கைப்பற்றிக் கொண்டுள்ளது.
சிறீலங்கா விமானசேவை ஐரோப்பாவில் தடை செய்யப்படும் அபாயம்.

சிறீலங்கா விமான சேவையான சிறீலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பாவிற்கு பறப்பை மேற்கொள்வதற்கான தடை வரும் அளவிற்கு அதன் சேவைகளில் குறைபாடு உள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சமீபத்தில் சிறீலங்கன் விமானம் எயர் பஸ் எ-340 விமானம் ஒன்று பரிசில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படுவதந்கு முன்னர் அதன் அதனுடைய இயந்திரப் பகுதிக்கு கீழே உள்ள பகுதி கழன்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அதனை பிரான்ஸ் விமானப் பொறியிலாளர்கள் திருத்திய பின், அவ் விமானத்தின் எண்ணெய் கொள்கலன் பகுதியில் கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவ்விமானம் 9 நாட்கள் பறப்பில் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தி தற்போது தான் கசிய ஆரம்பித்துள்ளது.
இச்சம்பவம் கடந்த மாதம் செப்டம்பர் 23ஆம் நாள் நடைபெற்றுள்ளது.
இதனால் திருத்த செலவு, பயணிக்க இருந்த பயணிகளை தங்கவைத்து வேறு விமானங்களில் அனுப்பிய செலவு, விமானம் பறப்பை தவிர்த்ததால் ஏற்பட்ட நஷ்டம் என பெரும் தொகைப் பணத்தை விமானசேவை இழந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
இவ்வாறான குறைபாடுகளுடன் விமானம் கொழும்பில் இருந்து பறப்பை மேற்கொள்ள அனுமதித்ததைத் தொடர்ந்து தற்போது சிறீலங்கா விமானங்கள் அனைத்தும் ஐரோப்பாவில் கட்டாய சோதனைக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் அத்தகைய சோதனைகள் எழுந்தமானமாகவே நடைபெற்றன. இவ்வாறு தரக்குறைவான நிலையில் பறந்த பல விமானசேவைகள் ஐரோப்பாவிற்கு பறப்பதில் இருந்து தடைசெய்யப்பட்டு
வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் வெளியில் தெரிந்தால் சிறீலங்கன் விமானத்தில் பயணம் செய்யும் மக்கள் அதில் பறப்பை தவிர்த்து விடுவார்கள் என்ற நிலையிலேயே இச்செய்தி குறித்த இரகசியம் பேணப்பட்டுவந்தது.
அது மட்டுமன்றி ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ச ஐ.நாவில் உரையாற்றிய அன்றே இச்சம்பவம் நடைபெற்றதால் இது ஒரு சிறீலங்காவிற்கு எதிரான ஐரோப்பிய சதி என்று கூட சொல்லப்பட்டு இவ்விடயம் முடக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விமானசேவை நிறுவனம், விமானத்தை பறக்க அனுமதித்த பொறியியலாளரை பணிநிறுத்தம் செய்ய பணித்துள்ள நிலையில், ஜானக டி சில்வா என்பவர் இவ்விடயத்தில் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்.
எனினும் உண்மையான பொறுப்பானவர்கள் தப்பித்துக் கொண்டுள்ள நிலையில், இத்தவறுகள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது என அச்சம் வெளியிடுகின்றனர்.
சிறிலங்கா விமானசேவை வட்டாரத்தை சேர்ந்தவர்கள். சிறீலங்காவில் தற்போது எதிலும் அரசியல் என்ற நிலையில் பல விடயங்களை வெளிப்படையாகப் பேசப் பலரும் பயப்படுகின்றனர்.
பொதுநலவாய அமைப்பில் மனித உரிமை ஆணையாளர் பதவியை உருவாக்க இலங்கை கடும் எதிர்ப்பு!

பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனையை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
 2009-ம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் அத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் தலைமையில் கானா, ஜமேக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்திரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய பதினொரு உறுப்பு நாடுகளின் நிபுணர்கள் குழுவினால் முன் வைக்கப்பட்டிருந்தது.
பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன் வைக்கப்பட்ட இப் பரிந்துரை குறித்து அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பொதுநலவாய அமைப்பில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவதற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய அமைப்பில் இத்தகையதொரு பதவியை உடனடியாக உருவாக்க வேண்டும் என பிரித்தானியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச ரீதியில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், பொதுநலவாய அமைப்பில் இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தமக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என இலங்கை கருதுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பரப்புரைகளுக்கு வலுச் சேர்க்கவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பயன்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள அரசாங்கம், இத்தகையதொரு பதவியும் அத்தகைய வழிமுறைகளுக்கே பயன்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைமை நீதிபதி மீது துப்பாக்கி சூடு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முஸாபராபாத்தின் தலைமை நீதிபதி மீது மர்ம மனிதன் துப்பாக்கிசூடு நடத்தினான். இச்சம்பவத்தில் தலைமை நீதிபதி காயமடைந்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலைநகராக விளங்கி வருகிறது முஸாபராபாத் நகரம். இப்பகுதியின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வருபவர் குலாம் முஸ்தபா முஹல்.
சம்பவத்தன்று இவர் தன்னுடைய பாதுகாவலர்கள் உதவியுடன் தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தலைமை நீதிபதியை நோக்கி சுட்டான்.
இச்சம்பவத்தில் நீதிபதியின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. தாக்குல் நடத்திய மர்ம மனிதன்ன உடனடியாக தப்பியோடி விட்டான். இதனையடுத்து காயமடைந்த நீதிபதி அருகில் இருந்த ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீதிபதியின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது என்றும், அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதி முஹம்மது ஆசம் கான் 24 மணி நேரத்திற்குள் மர்ம மனிதனை பிடிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த நீதிபதியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு என்ன காரணம் என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாஜிக்கள் திருடிய ஓவியம்: கேசினோவில் இருந்து மீட்பு.
1937ல் நாஜிகள் பல்லாயிரக்கணக்கான ஓவியங்களை வன்முறையின் மூலம் பெற்றனர். பின்னர் இந்த ஓவியங்களை மீட்கும் முயற்சியில் மேக்ஸ் ஸ்டெனின் கலைப்படைப்பு திட்டம் உருவாகியது.
மேக்ஸ் ஸ்டென் தான் சேகரித்த வைத்திருந்த கலைப்படைப்புகளை எல்லாம் மூன்று பள்ளிகளுக்கு வாரிசுரைமையாக்கினர். அவற்றில் ஒன்று மொன்றியலில் உள்ள கன்கார்டியா பல்கலைகழகம்.
அந்த பல்கலைகழகத்தின் சிறப்பு திட்ட இயக்குநர் கிளாரென்ஸ் எப்ஸ்டீன் 2002 முதல் இதுவரை நாஜிக்களிடம் தொலைந்து போன 400க்கும் மேற்பட்ட ஓவியங்களை மீட்டெடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
அப்போது ஒரு ஜேர்மன் காசினோவில் இருந்து 300 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியத்தை திரும்ப பெற்றனர். இது ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் தேடி அலைந்ததற்கு கிடைத்த வெற்றியாகும்.
மேக்ஸ் ஸ்டென் தான் சேகரித்து வைத்திருந்த கலைப்படைப்புகளை ஜேர்மனியில் உள்ள கண்கார்டியா, மொன்றியலில் உள்ள மெக்கில் பல்கலைகழகம் மற்றும் எருசலேத்தில் உள்ள எபிரேயப் பல்கலைகழகத்திற்கு சொந்தமாக்கினார்.
அரசவை ஒவியர் ஒருவர் தன்னை ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். அதனை 1937ல் கலைக்கூடத்திலிருந்து நாஜிக்கள் எடுத்து சென்று விட்டனர்.
அன்று முதல் இந்த ஓவியம் ஜேர்மன் தென் பகுதியில் உள்ள சூதாட்ட களம் ஒன்றில் இருந்தது. 2004ம் ஆண்டு முதல் தேடி இப்போது தான் இதனை கண்டுபிடித்தனர்.
ஆயினும் எப்ஸ்ட்டீன் அந்த இடத்தின் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டனர். மேக்ஸ் ஸ்டென் தன் கலைப்படைப்புகளின் வாரிச்சுரிமை குறித்து கடிதம் எழுதியிருந்தால் இந்த ஓவியத்தை மீட்டெடுக்க முடிந்தது.
இன்னும் 40 ஓவியங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் எப்ஸ்ட்டீன் ஈடுபட்டுள்ளார். இவை முன்னர் கனடாவின் கலைப்படைப்புகளை சேகரித்து விற்பவருமாகிய ஒருவர் தம் கலைக்கூடத்தில் வைத்திருந்தார்.
மீட்டெடுப்பு பணியில் தனியார் கலைக்கூடங்கள் மற்றும் ஏலம் விடும் இடங்களில் நிறைய பிரச்னைகளை இக்குழுவினர் சந்திக்கின்றனர்.
லிபியர்கள் தன்னை விரும்புவதாக கடைசி நிமிடம் வரை நம்பிய கடாபி.
திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட போதிலும் லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி நிமிடம் வரை கடாபி நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே மம்மர் கடாபி நம்பினார் என்றார் அவர்.
லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன. இருந்தபோதும் தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும் என்றார் தாவ்.
கடாபி, அவரது மகன் முஸ்ஸாடிம், அவரது பாதுகாப்பு அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை லிபிய பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடத்தில் புதைக்கப்பட்டனர்.
இருப்பினும் கடாபியின் உறவினர்கள், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் என ஒருசிலரை இஸ்லாமிய முறைப்படியான கடைசிக் கட்ட சடங்குகளைச் செய்ய அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சரியான இடத்தை மட்டும் காட்டிக் கொடுக்கவில்லை, அது தெரிந்தால் அந்த இடத்தை பின்னாளில் புனிதத் தலம் போல் மாற்றிவிடக்கூடும் என்ற அஞ்சியதால் அவ்வாறு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
கனடிய கோடீஸ்வரர் ஊழல் வழக்கில் பிரிட்டனில் கைது.
பில் கிளிண்டன் மற்றும் டோனி பிளேருடன் நெருங்கிய தொடர்புடைய மிகப்பெரிய தொழிலதிபரான 68 வயது மதிக்கத்தக்க விக்டர் டாடலே பிரிட்டனில் ஊழல், கூட்டுச்சதி போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.
இவர் ஜோர்டனில் பிறந்தவர். கனடாவிலும், பிரிட்டனிலும் வாழ்வதற்கு இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர். இவர் 2001 – 2005ம் ஆண்டுகளுக்கு இடையே பஹ்ரைனில் அலுமினியம் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள அல்கோவா இன்க் என்ற நிறுவனத்திடமிருந்து தனது நிறுவனத்திற்கு அலுமினிய தாதுவை இறக்குமதி செய்வதற்காக லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இவர் கடுமையாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து இவரது வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், தன் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடி தம் நற்பெயரை நிலைநாட்டுவார் என்றனர்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் ஊழல், கூட்டுச்சதி, குற்றப்பின்னணி உள்ள சொத்தை தனக்கு சொந்தமாக்கியது, பிறருக்கு மாற்றியது என்பனவற்றிற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள இவர் அக்டோபர் 31ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்தது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள விமான நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாங்காக்கில் டான் மூவாங் விமான நிலையம் உள்ளது. இதிலிருந்து தாய்லாந்தின் உள்ள பிற பகுதிகளுக்கு விமானங்கள் செல்கின்றன. மற்றொன்று சுவர்ணபூமி என்ற இடத்தில் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும்.
இந்நிலையில் டான் மூவாங் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. இதையடுத்து விமான சேவைகள் ஒருவாரத்துக்கு(நவம்பர் 1ம் திகதி வரை) ரத்து செய்யப்பட்டுள்ளாதாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அளித்துவரும் நோக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பட்டி சாராசின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மழை நீர் வடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்றார். இதனால் சர்வதேச விமான நிலையமான சுவர்ணபூமியிலிருந்து விமானங்கள் இயக்கப்படும் என்றார்.
டான் மூவாங் விமான நிலையத்தின் வடபகுதியிலிருந்து மழைநீர் புகுந்துள்ளதாகவும், ஆனால் விமான ஓடு பாதைகள் வெள்ளத்தால் சூழப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜுலை மாதத்திலிருந்து தாய்லாந்தில் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதுவரை 366 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடபகுதிகளில் வெள்ளம் வடிந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். தலைநகர் பாங்காக்கில் உள்ள 50 மாவட்டங்களில் 7ல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
15 ஆயிரம் மாணவர்களின் விசாக்கள் ரத்து.
கடந்த ஓராண்டில் மட்டும் அவுஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வில் தோல்வியடைந்தது அல்லது வகுப்பை புறக்கணித்த காரணத்தால் 3,624 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் படிப்பதாகக் கூறிக்கொண்டு சட்டவிரோதமாக வேலை செய்த அல்லது விபசாரத்தில் ஈடுபட்டது ஆகிய காரணங்களால் 2,235 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. இதுதவிர பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஓராண்டில் மொத்தம் 15,066 விசா ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆண்டைவிட இது 37 சதவீதம் அதிகம்.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்களைவிட சீன மாணவர்கள் அதிக அளவில் இருந்த போதிலும் அவர்களது விசா அதிக அளவில் ரத்து செய்யப்படவில்லை.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி 3,32,709 வெளிநாட்டு மாணவர்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் வசித்தனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக மாணவர்கள். மூன்றில் ஒரு பகுதியினர் தொழிற்கல்வி விசா பெற்று டிப்ளமோ படித்து வந்தனர்.
மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 6ல் ஒருவர் அதாவது 17 சதவீதம் பேர் இந்தியர்கள். தொழிற்பயிற்சி, பல்கலைக்கழக கல்வி, ஆங்கில கல்வி அல்லது பள்ளிக் கல்வி உட்பட மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் மாணவர் விசா வழங்குகிறது.
லிபிய பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: 100 பேர் பலி.
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர்.
சிர்டே நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்த டேங்க் வெடித்ததில் தீ வானளவு பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இடைக்கால அரசின் கமாண்டர் லெய்த் முகமது தெரிவித்தார்.
எண்ணெய் நிரப்பு நிலையத்துக்கு வெளியே பல பொதுமக்கள் தங்கள் கார்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காகக் காத்திருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்ததாக அவர் தெரிவித்தார். எண்ணெய் கிடங்கு அருகேயிருந்த ஜெனரேட்டரிலிருந்து கிளம்பிய நெருப்புப் பொறி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தீ பெருமளவு பரவியதால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்ததாக லெய்த் தெரிவித்தார்.
பக்கிங்காம் அரண்மனையை அரசு ஆடம்பர ஹொட்டலாக மாற்றுவேன்: இளவரசர் சார்லஸ்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சுயசரிதையை பி.பி.சி ஒளிபரப்பாளர் ஆண்ட்ரூமார் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார்.
அதில் இளவரசர் சார்லஸ் கடந்த 1982ம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் ராணி எலிசபெத்துக்கும், அவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து வருகிறது.
தற்போது 62 வயதாகும் இளவரசர் சார்லஸ் தான் மன்னராகும் போது பல திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக தற்போது தான் தங்கியிருக்கும் பக்கிங்காம் அரண்மனையில் பணிபுரியும் ஊழியர்களை மாற்றி விட்டு புதியவர்களை நியமிக்கிறார். மேலும் பக்கிங்காம் அரண்மனையை அரசு ஆடம்பர ஹொட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளார்.
எனவே அங்கிருந்து வெளியேறி விண்டர் கேஸ்டலில் தங்குகிறார். அது குறித்து தனது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த தகவல் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறி அதை ஹொட்டலாக மாற்றுவது குறித்து இளவரசர் சார்லஸ் விரும்பவில்லை. அது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர்கள் கைது.
சீனாவில் கடன் நெருக்கடி காரணமாக தொழிற்சாலைகளை மூடிவிட்டு தலைமறைவாகும் சிறு தொழில் அதிபர்களை பொலிசார் கைது செய்து வருகின்றனர். 
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி அளிப்பதற்கு சீன அரசு தடை விதித்தது. வட்டி விகிதங்களும் கடுமையாக உயர்த்தப்பட்டன. இதையடுத்து தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
நிதிப் பற்றாக்குறை, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடிய நிலை போன்ற காரணங்களால் சிறு மற்றும் நடுத்தர தொழில் அதிபர்கள் தொழில் சாலைகளை மூடி வருகின்றனர். சிலர் ஓடியும் விட்டனர். இதுபோன்ற தொழில் அதிபர்களை பொலிசார் தேடி தேடி கைது செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் முதல் வென்சௌ நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 90 சிறு தொழில் நிறுவன அதிபர்களை காணவில்லை. இவர் தலைமறைவாகி இருக்கலாம் அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது திவாலாகி இருக்கலாம் என்று பொலிசார் கூறினர்.
வங்கிகள் அல்லது தனிநபர்கள் அளித்த கடன்களில் நிலுவையில் சுமார் 7,800 கோடி(1000 யுவான்) வரை உள்ளதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் தொழில் அதிபர்களை கைது செய்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
நாட்டின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும், மூலப் பொருள்கள் போன்றவற்றை கொடுக்காதவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
முதலாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், தங்களுக்கு சேரவேண்டி சம்பள பாக்கி கிடைக்காது என்பதால், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வென்சௌ நகரில் 60 தொழிலாளர்களை கொண்ட ஷு தொழிற்சாலை அதிபர் ராவ் தாவி என்பவர்தான் இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட முதல் தொழில் அதிபர் ஆவார். தலைமறைவான 90 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியா விடுதலை அடைந்ததற்கு ஈரான் வாழ்த்து.
லிபிய நாடானது முழுமையான விடுதலை பெற்றதற்கு ஈரான் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
லிபிய இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீலுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கோ தலையீடோ இல்லாத சுதந்திரத்தை பாதுகாப்பதுடன், மதத்தன்மை வாய்ந்த ஜனநாயகம் கொண்ட லிபியாவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஜலீல், லிபியா ஒரு மிதவாத முஸ்லிம் நாடாக விளங்கும் என்று கூறினார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மன்பராஸ்ட், கடாபி கொல்லப்பட்டதை வரவேற்றதுடன் இனிமேல் நேசப் படைகளின் வான் தாக்குதல் இருக்காது என்று கூறினார்.
சிரியா மருத்துவமனைகள் நெருக்கடியில் சிக்கிதவிக்கிறது: சர்வதேச விடுதலை அமைப்பு தகவல்.
சிரியாவில், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகள், தங்களுக்கு வழங்கப்படும் தவறான மருத்துவ சிகிச்சையால் துன்பப்படுவதாக சர்வதேச விடுதலை அமைப்பு தெரிவிக்கிறது. இவ்வமைப்பானது 39 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளது.
அதில் 4 மாநிலத்திலுள்ள மருத்துவ மனைகளில் நோயாளிகள் துன்பப்படும் வகையில் தவறான சிகிச்சையானது, அங்குள்ள மருத்துவ உறுப்பினர்களாலேயே தரப்படுகிறது என தெரிவிக்கிறது. ஆதலால், காயம்பட்ட அந்நாட்டு மக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வது பாதுகாப்பாக இருக்காது என கருதுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. இதனை சிரியா நாட்டு அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர்.
அரசுக்கு எதிராக செயல்படும் போராட்டத்தை, மார்ச் மாதம் முறியடித்தனர். இச்செயல் அதிபர் பாசர்-அல்-அஸாத்தின் ஆட்சியிலேயே முயற்சி எடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஏழு மாதங்களில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக யு.என். கூறுகிறது. சிரியாவானது, தீவிரவாதிகளும், ஆயுதப்படை வீரர்களுமே இதற்குக் காரணம் என குறை கூறுகிறது.
சிரியாவில் கட்டுப்பாடுகள் அதிக அளவில் இருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய கடினமாக உள்ளது என சர்வதேச எழுத்தாளர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்கு வடக்கு ஆப்பிரிக்காவின் ஆராய்ச்சியாளர் க்லீனா நாசர், சிரிய அதிகாரிகள், தேவையான அளவு பாதுகாப்பு படைகளை பயன்படுத்தி மருத்துவமனைகளை கட்டுக்குள் கொண்டுவரலாம் என கூறினார். சிரிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதைக் காட்டிலும், பெரிய காயங்களுக்கு வெளியே சென்று தேவையான மருத்துவ வசதிகளைப் பெறலாம் என கருதுகின்றனர்.
மனித உரிமை அமைப்பு தந்த தகவலின் படி, அதிகமான நோயாளிகள் மருத்துவமனையை விட்டு தானாகவே வெளியேறியுள்ளனர். செப்டம்பரில், பாதுகாப்பு படைகள் மருத்துவமனையை சுற்றி வரும்போது, அரசுக்கு எதிராக செயல்படும் ஆயுதமேந்திய படைவீரன் ஒருவனைக் கண்டனர்.
ஆனால் அவனைப் பிடிக்கத் தவறவிட்டனர் இருந்த போதிலும் அங்கிருந்த காயம்பட்ட 18 பேரை கைது செய்தனர். மருத்துவ ஊழியர் ஒருவர் படைவீரனைப் பற்றி தெரிவிக்கையில், ஒரு மயக்கமடைந்திருக்கும் நோயாளியை அவரது செயற்கை சுவாசத்தை அகற்றிவிட்டு, அவனை கடத்திச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.
சர்வதேச விடுதலை அமைப்பிடம், தனியார் மருத்துவர் ஒருவர், நோயாளிகள் சிலருக்கு அதிக இரத்தம் தேவைப்படுகிறது. குறிப்பாக ஆயுதத்தால் காயம்பட்ட நோயாளிகளுக்கு இரத்தம் தேவை. இரத்த வங்கியானது பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
பாதுகாப்பு படை, இரத்தம் தேவைப்படும் நோயாளியை துன்பப்படுத்தி கைது செய்கிறது. சிலவேளைகளில் இறப்பு கூட நிகழலாம் என்று கூறினார். ப்னியாஸ், ஹோம்ஸ், டெல் கலாக் இவற்றில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற தகவல் சர்வதேச அமைப்பிற்கு கிடைத்துள்ளது.
அஹமது என்ற மருத்துவர் BBCக்கு அளித்த பேட்டியில், 14 வயது சிறுவன் குண்டு காயங்களால் அவதிப்பட்டான். அவனுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் அவனை அடித்தார். விசாரணையில் அச்சிறுவன் இஸ்லாமிய இயக்கத்தை நேர்ந்தவன் என்பது தெரியவந்தது, என்றார்.
சிரிய அதிபர் அஸாத் புதிய கவர்னர்களை அறிவித்தார்ஃ டமாஸ்கஸ் மாகாணத்திற்கு ஹீசைன் மகலூப், இட்லிப் மாகாணத்திற்கு யாசர் சௌஃபி என சானா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. முன்னதாக யு.எஸ்.தூதர் ராபர்ட் போர்டு வெளியேற்றப்பட்டதற்கு காரணம், அவருடைய பாதுகாப்பிற்கு இருந்த அச்சுறுத்தலே என்று யு.எஸ் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
சோமாலியா உடன் எந்த சண்டையும் இல்லை: பிரான்ஸ்.
சோமாலியாவின் கோட்டையாக விளங்கும் அல்ஷாபாப், பிரான்சின் கடற்படைக்கு வெடிகுண்டு வைத்த செய்தியை மறுத்தது. மேலும் கென்ய ராணுவப் படையினர், இஸ்லாமிய ராணுவப் படைக்கு எதிராக தாங்கள் வழங்கும் வான்வழி பொருட்களை குறைத்துள்ளனர் என அறிவித்தது.
 பிரான்ஸ் தூதரகம், பிரென்ஸின் கப்பல்தளம் சோமாலியாவால் தாக்கப்பட்டது என்பதை மறுத்தது. இராணுவப் பிரதிநிதி ஒருவர், பிரான்ஸ் விரைவில் கென்யப்படைகளை சோமாலியாவிலுள்ள அல்குவைதா தொடர்புடைய இயக்கத்திற்கு அனுப்பும் என்றார்.
பிரான்ஸ் விமானப் போக்குவரத்து அதிகாரி தெர்ரி பர்க்கார்டு கூறுகையில், நைரோபியிலிருந்து வடக்கு கென்யா வரை விமானப் போக்குவரத்து செயல்படப் போகிறது. ஆனால், இது குறைந்த அளவிலேயே இருக்கும் என்றார். மேலும், எந்தவொரு சண்டையும் சோமாலியாவில் பிரான்ஸ் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
கென்ய இராணுவமானது, தனது படைகளை பக்கத்து நாடான சோமாலியாவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து, கென்ய படைகள் தங்களது மண்ணை திருடிச் செல்வதாக சோமாலிய வீரர் குறை கூறினார். மேலும், அல் சாபாப், கென்யாவின் இச்செயலுக்கு பழிக்கு பழியாக வெடிகுண்டு வைக்கப் போவதாக பயமுறுத்தினான். யு.எஸ். தூதரகம் எப்போது வேண்டுமானலும் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதே மாதிரி கையெறி குண்டால் நைரோபி தாக்கப்பட்டது. மேலும், பொருட்கள் விற்கும் பெரிய கடைகள், இரவு நேர கிளப்புகள், வெளிநாட்டினர் குழுமியிருக்கும் பகுதிகள் இவற்றில் தாக்குதல் நடக்க திட்டமிட்டிருப்பதாக யு.எஸ். எச்சரிக்கை செய்தது. ஆனால் கையெறி குண்டு வெடித்த இடமானது மக்கள் குறைவாக பயன்படுத்தும் இடமாகும். பொலிஸ் அதிகாரி இட்டீரீ கூறுகையில், குண்டு 1.15 க்கு வெடித்தது. 20 பேர் அவ்விடத்தில் இருந்தனர், 3 பேருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டது.
மேலும், நாற்காலிகள், மேஜைகள் மற்றும் தரையில் இரத்தக்கரை படிந்திருந்தது. பொலிஸ் இதுவரை யாரையும் சந்தேகப்படவில்லை இட்டீரீ, இந்த வேளையில் தீர்மானமான முடிவு எதுவும் எடுக்க முடியாது என்றார். வெடிகுண்டு எறிந்த நபரை எவரும் பார்க்கவில்லை. பாலங்கள், உணவு விடுதிகள், எரிபொருள் கிடங்குகள் இவற்றில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தாக்குதலை ஏற்படுத்திய வெடிகுண்டானது, ரஷ்யாவின் F1 கையெறி வெடிகுண்டாகும். இதே மாதிரி வெடிகுண்டு, 2010ல் நைரோபியின் பேருந்து நிலையத்தை தாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். யூன் 2010ல் அரசியல் கட்சிகள் நடத்திய ஊர்வலத்தில், 3 பேர் இதே மாதிரி வெடிகுண்டால் கொல்லப்பட்டனர்.
கென்ய இராணுவம் புதுப்பிக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. அதற்கு புதிதாக ஜியுபாலாண்ட் படை என பெயரிடப்பட்டது. இப்படை, அல் சாபாப்பை, கிஸ்மாயோர நகரத்தில் வைத்து அவன் தோற்கும் வரை தாக்க திட்டமிருந்தது. சோமாலிய அதிபர் கூறுகையில், கென்ய இராணுவத்தின் படையெடுப்பு ஏற்கத்தக்கது அல்ல என்றார். மேலும், நாங்கள் கென்யாவுடனான ஹவை வரவேற்கிறோம், கென்யப்படைகள் எங்களுக்கு உதவ விரும்புகின்றன. ஆனால், அவை சோமாலியாவுக்குள் நுழைவதை விரும்பவில்லை என்றார். கென்யா நீண்டகாலமாக நல்ல அண்டை நாடாக இருந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாக கென்யாவின் தலையீடு எங்களுக்கு இருந்ததில்லை என்றும் சோமாலிய அதிபர் கெபிக் சாரிப் செயிக் அகமது கூறினார்.
ஜாக்சன் பயன்படுத்திய நரம்பு ஊசியின் மர்மம்.
டாக்டர் ஆலன் மெட்ஸ்சர் என்ற மருத்துவர், மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய நரம்பில் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்தைப் பற்றி எச்சரிக்கை செய்தார். பாடகரான மைக்கேல் ஜாக்சன் தூக்கமின்மைக்காக நரம்பில் ஊசிமூலம் செலுத்தும் மருந்தை உபயோகப்படுத்தினார்.
கடந்த 15 வருடமாக, ஜாக்சன் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக டாக்டர் ஆலன் அறிந்தார். சிகிச்சைக்காக வந்த ஜாக்சனிடம், வாய் வழியாக செல்லும் மருந்தின் மூலம் இதனை சரி செய்யலாம் என டாக்டர் மெட்ஸ்சர் கூறினார். ஆனால், ஜாக்சன் வாய்வழியாக உள்ளே செல்லும் மருந்தின் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என கூறினார்.
மேலும், ஜாக்சன் தனக்கு தரும் மருந்து உணர்வற்ற நிலையில் தன்னை இருக்கச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதாவது மயக்க நிலையில் இருப்பதற்கு மருந்து கேட்டார் என டாக்டர் மெட்ஸ்சர் கூறினார்.
டாக்டர் மெட்ஸ்சர், டாக்டர் முர்ரேயின் பாதுகாப்பு குழுவை அழைத்தார். ஜாக்சன் இறந்ததற்கு தான் தான் காரணம் என்று தன் மேல் வழக்கு தொடர்ந்தவர்களிடம் ஆதாரங்களை காண்பிக்க வலியுறுத்தினார். மெட்ஸ்கரின் மருந்துகளை ஜாக்சன் யூன் 2009ல் இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பயன்படுத்தி இருக்கிறார். வழக்கறிஞர்கள், டாக்டர் மெர்ட்சர் அளித்த ஜாக்சனின் மருத்துவ தகவல்களை மற்றொரு டாக்டரிடம் காட்டினர்.
குறுக்கு விசாரனையில், வழக்கறிஞர் டேவிட் வல்கிரன் என்பவர் டாக்டரிடம், நீங்கள் ஜாக்சனிடம் இந்த மருந்தை பயன்படுத்துவது ஆபத்தானது, என்று கூறினீர்களா என்றார். அதற்கு டாக்டர் ”ஆம்” என்றார். டாக்டர் மெட்ஸ்சர், ஜாக்சன் தன் கச்சேரியை யு.கே.வில் முடித்து விட்டு திரும்பி வரும் போதெல்லாம் கவலையில் இருப்பதாகவும், அதை மறப்பதற்கு மயக்கத்தை உண்டு பண்ணும் ப்ரோபோபால் மருந்தை கேட்பார் எனவும் கூறினார்.
மெட்ஸ்சருக்கு ஆதரவாக டாக்டர் முர்ரே, இது குற்றமல்ல. மனிதன் தானாகவே வந்து படுகொலையில் வீழ்வது என்று வாதாடினார். ஜாக்சனின் பாதுகாவலரான அல்வர்ஸ், கரோனர்ஸ் அதிகாரிகளிடம் தன் கதையை மாற்றிக் கூறினார். டாக்டர் முர்ரேயின் வழக்கறிஞர், செவிலிய பணிப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவள், ஜாக்சன் தன்னிடம் ப்ரோபோபால் மருந்தை கேட்டதாகவும், தான் கொடுக்க மறுத்ததாகவும் கூறினாள். டாக்டர் முர்ரேயின் பாதுகாப்பு குழுவானது, 15 சாட்சியாளர்களை தக்க சாட்சியங்களுடன் நிறுத்தியது. இந்த பஞ்சாயத்து, ஜாக்சனின் மறைவுக்குப் பின் 2 மணி நேர பொலிஸ் விசாரனையின் போது நடந்தது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF