Saturday, October 22, 2011
சிறிலங்காவில் சீனாவின் தலையீட்டை முறியடிக்க அமெரிக்கா வகுத்துள்ள திட்டம்..
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளது குறித்தும், சிறிலங்காவுடன் கொண்டுள்ள இராணுவ ரீதியான உறவுகள் குறித்தும் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், தனது பயணத்தின் முடிவில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
"முன்னர் சிறிலங்காவுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தது.சீனாவுடன் இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை சிறிலங்கா அதிகரித்துக் கொண்டதால், இந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்திருப்பது அதிகம் கவலையடைய வைத்துள்ளது.
சிறிலங்காவுடன் வர்த்தக, இராணுவ, அரசியல் ரீதியான உறவுகளை பலப்படுத்திக் கொள்வதன் மூலமே, சீனாவின் தலையீட்டை முறியடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.புவியியல் ரீதியாக சிறிலங்காவின் அமைவிடம் முக்கியமானது. எனவே அமெரிக்கா அதன் மீதான தனது கவனத்தை நிச்சயமாக இழக்கவில்லை" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF