Thursday, October 13, 2011

7 பில்லியனை (7000 மில்லியன்) எட்டுகிறது உலக சனத்தொகை - சிறிலங்காவுக்கும் சவால்கள் காத்திருப்பதாக ஐ.நா எச்சரிக்கை!!!!


எதிர்வரும் ஒக்ரோபர் 31ம் நாளுடன் உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டுவதாகவும், சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்காவும் பல சவால்களை சந்திக்கும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்கா சமூக, பொருளாதார ரீதியில் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. 

வேலையின்மை அதிகரிப்பதுடன், சுகாதார மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிரச்சினைகளையும் சிறிலங்கா சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடாக சிறிலங்கா மாறி வருவதாகவும், ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது.60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிறிலங்காவின் சனத்தொகையில் 10 வீதமாக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2025இல் 20 வீதமாக உயரும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எதிர்வு கூறியுள்ளது. 
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF