Monday, October 24, 2011

உணர்ச்சி நிலையில் எடுக்கப்படும் முடிவுகள்.


அழகானபெண்ணைப்பார்த்தவுடன்அவனுக்குபிடித்துப்போய்விட்டது.எதைப்பற்றியும்விசாரிக்கவில்லை.திருமணம்செய்துகொள்வதாகமுடிவெடுத்துவிட்டான்.நிச்சயதார்த்தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது.சரியாக அவர்கள் குடும்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்திலும் நஷ்டம்.இரண்டு நண்பர்கள்.கிட்டத்தட்ட உயிர் நண்பர்கள்.ஒரு சண்டையில் வார்த்தை தடித்துவிட்டது.இரண்டு வீட்டிலும் அவர்களுடைய நட்பின் ஆழம் தெரியும்.இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டார்கள்.ஆனால் கொஞ்ச நாள்தான் .நண்பன் விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் சேர்ந்த செய்தி கேட்டு ,உடனே ஓடிப்போய் கண்ணீருடன் முன்னே நின்றான்.கல்யாணம் செய்து கொள்ளவோ,நண்பனுடன் பேசாமல்  இருக்கவோ எடுத்த முடிவு உணர்ச்சியின் தூண்டுதலால் எடுக்கப்பட்டது.


சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல! கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் நிலையானவை அல்ல!கணவன் ,மனைவி,பெற்றோர்கள் போன்றவர்களுடன் ஏற்படும் பிணக்குகள் பெரும்பாலும் நீடித்திருப்பதில்லை.நாட்கள் செல்ல செல்ல  கோபம் போன்ற உணர்ச்சிகள் குறைந்த பின்பு வருந்துவதும் ,ஒன்று சேர்வதும் நடக்கும்.கொஞ்ச நாள் பேசாமலிருந்து பிறகு ஒன்று சேர்ந்து விடும் பல உறவுகளை நீங்கள் பார்த்திருக்க முடியும்.இதெல்லாம் அப்போதிருக்கும் ஆத்திரத்தால் அந்த நிமிடத்தில் முடிவு செய்வதுதான்.பின்னர் நமக்கே ஒரு மாதிரியாக இருக்கும்.எப்போது அவர்களுடன் பேசலாம் என்றும் தோன்றும்.

ஆத்திரத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் அர்த்தமற்ற உளறல்களே இருக்கும்பிறர் சொல்லும்போது இதையெல்லாம் நாம் பேசினோமாஎன்றுதோன்றும்..சிந்தித்துஎடுக்கப்படும்முடிவுகள்வேறுவகையானவை.நீடித்திருக்கும்தன்மைஅதற்குஉண்டு.கணவன்.மனைவியாகஇருந்தாலும்கூட  நன்மையையும்,தீமையையும் சீர்தூக்கிப் பார்த்து எடுக்கப்படும் முடிவு நிலையானதாகஇருக்கும்முடிவெடுத்தல் ஒரு நல்ல தகுதியும்கூட! நல்லதோ ,கெட்டதோ சிலர் உடனே முடிவு செய்து விடுகிறார்கள்.சிலர் யாரையாவது யோசனை கேட்டுப் போவார்கள்.

சில நேரங்களில் முடிவெடுக்கத் தயங்கினால் வாய்ப்பு பறிபோகும் நிலையம் ஏற்படும்.மனித நேயமும்,சக மனிதன் மீது அக்கறையும் உள்ளவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் சரியானதாக இருக்கும்.ஒரு முடிவை மேற்கொள்ளும்போது நான் ஆத்திரத்தில் முடிவெடுக்கிறேனா என்று சிந்திப்பது சரியானது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF