கணித அடிப்படையே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் கூகிள் எர்த்(Google Earth) மூலம் கணித அடிப்படையை புரியும் விதத்தில் சொல்ல ஒரு தளம் உள்ளது.சாதாரண அடிப்படை கணித கேள்விகளுக்கு கூட கூகிள் எர்த்-ல் தெளிவாக அதுவும் வீடியோவுடன் பதில் சொல்லுவது கணிதம் பற்றியே அடிப்படை அறிவு இல்லாதவருக்கும் கணித அறிவை கொடுப்பதாக இருக்கிறது.
கூகிள் எர்த்-ஐ நாம் எப்படி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தளத்திற்கு சென்ற பின் தான் தெரிகிறது என்று சொல்லும் அளவிற்கு, கூகிள் எர்த் வழங்கும் அத்தனை விதமான சேவைகளையும் துல்லியமாக பட்டியலிடுகிறது.கணிதம் என்றால் கசக்கும் மாணவர்களுக்கு கணிதம் மேல் ஒரு தனிப்பிரியம் வைத்துவிடுகிறது, கூகிள் எர்த் அதுவும் முப்பரிமானத்தில் அல்ஜீப்ரா முதல் அனைத்து விதமான கணித அடிப்படையும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறது.
இத்தளத்திற்கு சென்று ஆரம்ப டூட்டோரியல் முதல் பாடங்கள் வரை தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு எது வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாக கூகிள் எர்த்-ல் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதற்கு கூகிள் எர்த் மென்பொருள் நம் கணணியில் நிறுவியிருக்க வேண்டும்.