எவராலும் நம்ப முடியாதவாறு ஒரு மலையின் பாறைப் பகுதி கடலுக்குள் விழும் காட்சி இங்கிலாந்தின் கோர்ண்வோல் பகுதியில் இடம்பெற்றது. இந்த மலையில் முதல் தூசுப்படலம் தோன்றி அடுத்த விநாடிகளில் அந்த மலையின் ஒரு பக்கத்தில் வெடிப்பேற்பட்டு கீழே கடலுக்குள் விழுந்தது.இந்த அரிப்பு இப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது நிகழ்வாக கருதப்படுகின்றது. இப்பாறைகள் விழுந்த பின்னும் பாரியளவில் தூசுப்படலங்கள் காற்றில் கலந்திருந்தன. கடந்த வாரமும் 20 தொன்கள் நிறையுள்ள பாறைகள் 20 மைல்கள் தொலைவிலிருந்த நியூகுவே கடற்கரையின் அரிப்பினால் விழுந்திருந்தன.இதன்போது கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த இரு பெண்கள் மயிரிழையில் உயிர்தப்பினர். இதனால் கடற்கரைகளில் நிற்கும் பொதுமக்கள் பாறைகளுக்கு அப்பால் தள்ளி நிற்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF