இன்று நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பிரதான உள்ளூராட்சி சபைகள் பலவற்றை தன் வசப்படுத்தியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. 23 சபைகளுக்காக நடைபெற்ற தேர்தலில் இதுவரை மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருணாகல், நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, கம்பஹா ஆகியவை ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளன. கல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட மாநகர சபைகள் சிலவும் ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்தவொரு சபையையும் ஐக்கிய தேசியக் கட்சியால் இத் தேர்தலில் கைப்பற்ற முடியவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் @பாட்டியிட்ட இரத்தினபுரி மாநகர சபையில் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட மாநகர சபைகள் சிலவும் ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்தவொரு சபையையும் ஐக்கிய தேசியக் கட்சியால் இத் தேர்தலில் கைப்பற்ற முடியவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் @பாட்டியிட்ட இரத்தினபுரி மாநகர சபையில் தோல்வியைத் தழுவியுள்ளது.
- கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 101,920 வாக்குகளையும் 24 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.ம.சு.கூ 16 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் மக்கள் ஐக்கிய முன்னணி 2 ஆசனங்களையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு 1 ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 101,920 வாக்குகள், 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 77,089 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 26,229 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 9,979 வாக்குகள், 2 ஆசனங்கள்
மக்கள் ஐக்கிய முன்னணி - 7830 வாக்குகள், 2 ஆசனங்கள்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 4,085 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 3,162 வாக்குகள், 1 ஆசனம்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 2,962 வாக்குகள், 1 ஆசனம் - தெஹிவளை-கல்கிசை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39,812 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 11 ஆசனங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 39,812 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 31,082 வாக்குகள், 11 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 2,168 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) - 1,568 வாக்குகள், 1 ஆசனம்; - மொரட்டுவ மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 45,286 வாக்குகளையும் 18 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 9 ஆசனங்களையும் முதலாம் இலக்க சுயேட்சை குழு ஓர் ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 45,286 வாக்குகள், 18 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 25,224 வாக்குகள், 9 ஆசனங்கள்
முதலாம் இலக்க சுயேட்சை குழு - 3,478 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 1,585 வாக்குகள், 1 ஆசனம் - ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26,723 வாக்குகளையும் 13 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும், மூன்றாம் இலக்க சுயேட்சைகுழு ஓர் ஆசனத்தையும் லங்கா சமசமாஜக் கட்சி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 26,723 வாக்குகள், 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 10,830 வாக்குகள், 3 ஆசனங்கள்
மூன்றாம் இலக்க சுயேட்சைகுழு - 2178 வாக்குகள், 1 ஆசனம்
லங்கா சமசமாஜக் கட்சி - 1291 வாக்குகள், 1 ஆசனம் - கொழும்பு, கொலன்னாவ நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,303 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,303 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 10,667 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 938 வாக்குகள், 1 ஆசனம் - கொழும்பு, கொட்டிகாவத்தை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37,998 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 37,998 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 12,239 வாக்குகள், 5 ஆசனங்கள் - அம்பாரை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூ 3 ஆசனங்களையும் ஐ.தே.க ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 22,356 வாக்குகள், 11 ஆசனங்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) - 9,911 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 8524 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 2,805 வாக்குகள், 1 ஆசனம் - கம்பஹா, நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37,232 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 9 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 37,232 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 24,712 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,588 வாக்குகள், 1 ஆசனம் - கம்பஹா மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22,679 வாக்குகளையும் 14 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும், மூன்றாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 22,679 வாக்குகள், 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 6,478 வாக்குகள், 3 ஆசனங்கள்
மூன்றாம் இலக்க சுயேட்சைக்குழு - 835 வாக்குகள், 1 ஆசனம் - இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15,626 வாக்குகளையும் 15 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 15,626 வாக்குகள், 15 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 6,820 வாக்குகள், 4 ஆசனங்கள் - மாத்தளை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,407 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும், ஐந்தாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,407 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 4,751 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஐந்தாம் இலக்க சுயேட்சைக்குழு - 552 வாக்குகள், 1 ஆசனம் - கண்டி குண்டகசாலை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 34,488 வாக்குகளையும் 14 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 6 ஆசனங்களையும், முதலாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 34,488 வாக்குகள், 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 16,934 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,128 வாக்குகள், 1 ஆசனம் - பதுளை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13,337 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 13,337 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 6,982 வாக்குகள், 5 ஆசனங்கள்
8,ஹம்பந்தோட்டை சூரியவெவ பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,279 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,279 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,388 வாக்குகள், 1 ஆசனங்கள் - கண்டி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,189 வாக்குகளையும் 13 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 10 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 23,189 வாக்குகள், 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 20,087 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1248 வாக்குகள், 1 ஆசனம் - நுவரெலியா மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6,275 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 6,275 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,781 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 1237 வாக்குகள், 1 ஆசனம் - காலி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,539 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 7 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 23,539 வாக்குகள், 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 16,137 வாக்குகள், 7 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,085 வாக்குகள், 1 ஆசனம் - ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,836 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 3,788 வாக்குகள், 1 ஆசனங்கள் - அநுராதபுரம் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,849 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,028 வாக்குகள், 3 ஆசனங்கள் - ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,836 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 3,788 வாக்குகள், 1 ஆசனங்கள் - அநுராதபுரம் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,849 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,028 வாக்குகள், 3 ஆசனங்கள்
- குருநாகல் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 4,838 வாக்குகள், 4 ஆசனங்கள் - மாத்தறை நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 12,619 வாக்குகள், 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449 வாக்குகள், 1 ஆசனம்
21 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது
23 உள்ளுராட்சி மன்றங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 21 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை அரசாங்கம் கைப்பற்றியுள்ளது.58 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக கண்டி மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.இரத்தினபுரி, பதுளை, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே போன்ற முக்கிய மாநகரசபைகளின் ஆட்சியையும் ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.
எனினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.இதேவேளை, கல்முனை மாநகரசபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு மாநகர சபை மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதன் மூலமே ஐதேகவினால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் மக்கள் ஐக்கிய முன்னணி 2 ஆசனங்களையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு 1 ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஆனாலும் 53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு ஐதேக மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறவேண்டிய நிலையில் உள்ளது.
சற்று முன் வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகரசபையில் ஐதேகவுக்கு 24 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 16 ஆசனங்களும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 6 ஆசனங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும், சுயேட்சைக்குழு-1, சுயேட்சைக்குழு- 2 மற்றும் ஜேவிபிக்கு தலா 1 ஆசனங்களும் கிடைத்துள்ளன. அறுதிப் பெரும்பான்மைக்கு 27 ஆசனங்களைப் பெறவேண்டியுள்ள நிலையில், ஐதேக 24 ஆசனங்களையே பெற்றுள்ளது.
இந்தநிலையில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதன் மூலமே ஐதேகவினால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இல்லையேல், இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவை ஐதேக பெற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று முன் வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகரசபையில் ஐதேகவுக்கு 24 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 16 ஆசனங்களும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 6 ஆசனங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும், சுயேட்சைக்குழு-1, சுயேட்சைக்குழு- 2 மற்றும் ஜேவிபிக்கு தலா 1 ஆசனங்களும் கிடைத்துள்ளன. அறுதிப் பெரும்பான்மைக்கு 27 ஆசனங்களைப் பெறவேண்டியுள்ள நிலையில், ஐதேக 24 ஆசனங்களையே பெற்றுள்ளது.
இந்தநிலையில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதன் மூலமே ஐதேகவினால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இல்லையேல், இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவை ஐதேக பெற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 101,920 வாக்குகள், 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 77,089 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 26,229 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 9,979 வாக்குகள், 2 ஆசனங்கள்
மக்கள் ஐக்கிய முன்னணி - 7830 வாக்குகள், 2 ஆசனங்கள்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 4,085 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 3,162 வாக்குகள், 1 ஆசனம்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 2,962 வாக்குகள், 1 ஆசனம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 77,089 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 26,229 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 9,979 வாக்குகள், 2 ஆசனங்கள்
மக்கள் ஐக்கிய முன்னணி - 7830 வாக்குகள், 2 ஆசனங்கள்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 4,085 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 3,162 வாக்குகள், 1 ஆசனம்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 2,962 வாக்குகள், 1 ஆசனம்.
இலங்கையில் 50,000 "வைற் கொலர்" மோசடிக்காரர்கள்! பெயர் விபரங்களை அம்பலப்படுத்த பொலிஸார் திட்ட்ம்.
இவ்வாறான சந்தேக நபர்கள் பற்றிய தரவுகள் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளது.வைற் கொலர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் பெயர் விபரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வைற் கொலர் குற்றவாளிகளின் சதித் திட்டங்களினால் நாட்டில் வருடாந்தம் 5 பில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லேரியா சம்பவத்தில் இதுவரை நால்வர் பலி! மேலும் 15 பேர் படுகாயம்! மூவர் கவலைக்கிடம்! பதற்றம் நிலவுகிறது.
இவர்களில் மூவரின்; நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.படுகாயமடைந்தவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிக்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபைக்கான வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இன்று மாலை 3.40 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நிலையத்துக்கு முன்பாக இருதரப்பினரும் நேருக்குநேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அங்கொடை மொரகஸ் சந்தியில் பொலிஸாரின் வாகனத்துடன் அரசியல் பிரமுகர் ஒருவரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
அவ்விடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். இளைஞர்கள் சிலர் அங்கிருந்த பொலிஸாரைத் தாக்குவதற்கு முயற்சித்த வேளை பொலிஸார் பின்வாங்கினர்.செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திலிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி வந்த சிலர் “எங்களுடைய அரசாங்கம், நாங்கள் நினைத்ததைச் செய்வோம். யார் எங்களைப் படம் எடுக்கச் சொன்னது” எனக் கேட்டுக்கொண்டே ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கு முயற்சித்தனர்.
ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்த வாகனத்தில் அங்கொடை பகுதியூடாக பயணித்த போது அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் வீடும், அலுவலகமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.உடனடியாக அவ்விடத்துக்கு வந்த அதிரடிப்படையினர் பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்நிலையில், அப்பகுதியெங்கும் பதற்றமாகக் காணப்படுவதுடன் மீண்டும் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸார் உட்பட விசேட இராணுவ படைப்பிரிவினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பத்திரிக்கை நிருபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை.
பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஜோஹர் நகரைச் சேர்ந்தவர் பைசல் குரேஷி(28). இவர் லாகூரில் இருந்து வெளியாகும் தி லண்டன் போஸ்ட் என்ற பத்திரிகையின் தலைமை நிருபராக இருந்தார்.
இவர் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கிடந்தது.இந்த கொலையை செய்தது யார்? என தெரியவில்லை. பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தாகிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்டாப் உசேன் குறித்து தி லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் போஸ்ட் குரேஷி கட்டுரை எழுதி இருந்தார்.இதை தொடர்ந்து அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார். எனவே அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் பைசலை கொலை செய்திருக்க வேண்டும் என பொலிசார் கருதுகின்றனர்.
சீனா என்னை பேயாக சித்தரிக்கின்றது: தலாய்லாமா.
திபெத்திய தலைவர் தலாய்லாமா சீனா அரசு பொய்களாலும், நயவஞ்கத்தினாலும் சூழப்பட்டு ஆட்சி நடத்தி வருகிறது என்றும், சீனா தன்னை பேயாக சித்தரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.தென் ஆப்ரிக்க ஆர்.சி. பிஷப் டெஸ்மாண்டு டுட்டு தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளில் பங்கேற்க அழைப்பு வந்த போதும் சீனாவின் நெருக்கடியால் தலாய்லாமாவுக்கு விசா வழங்க மறுக்கப்பட்டது.
இதனால் அவர் தர்மசாலாவில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேசினார். இந்நேரத்தில் இவர் கூறுகையில், சீனாவின் ஆட்சி அதிகாரம் பொய் மற்றும் வஞ்சனையால் சூழப்பட்டுள்ளது.மக்கள் உண்மையை பேச முடியவில்லை. உண்மையை சொன்னால் குரல்வளையை நெறிக்கும் போக்கை சீனா கடைபிடிக்கிறது. கம்யூனிஸ்ட் நாடான சீனா ஒரு சர்வாதிகார ஆட்சி செய்கிறது.தென்ஆப்ரிக்கா சீனாவுடன் மிக நெருங்கிய வர்த்தக நாடாக இருப்பதால் எனக்கு விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் பிஷப் டுட்டு மிக நேர்மையான மனிதர். நல்ல சேவகர்.
எனவே இவரது பிறந்த நாளில் பங்கேற்க நான் ஆசைப்பட்டேன். இன்னும் இவரது 90வது பிறந்த நாளில் அழைப்பு வரும்போது தென்ஆப்ரிக்கா அப்போதாவது சீனாவுக்கு அடிமையாகாமல் இருக்குமானால் நான் நிச்சயம் பங்கேற்பேன்.சீன அதிகாரிகள் என்னை பேயாக சித்தரித்து செய்தி பரப்பி வருகின்றனர் என்றார்.
மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த ஏமன் அதிபர்: பதவி விலகப் போவதாக அறிவிப்பு.
பொதுமக்கள் போராட்டத்துக்கு ஏமன் அதிபர் பணிந்தார். தனது பதவியை துறக்க முடிவு செய்துள்ளார்.ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கடந்த 6 மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். எனவே அதிபர் சலே பதவி விலக வேண்டும் என ஐ.நா.சபையும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் உலக அமைதிக்கான நோபல் பரிசு ஏமன் நாட்டை சேர்ந்த தவாக்குல் கர்மான் என்ற பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டது.
இவர் ஏமனில் நடைபெறும் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார். கர்மானுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிபர் சலே பொதுமக்கள் போராட்டத்துக்கு பணிந்தார். நேற்று அரசு டெலிவிஷனில் திடீரென தோன்றி பேசினார். அப்போது தான் அதிபர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.
அவர் பேசும்போது,“அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க நான் விரும்பவில்லை. எனவே இன்னும் சிறிது நாளில் பதவி விலகுவேன்” என்றார்.ஆனால் அவரது பேச்சை நோபல் பரிசு பெற்ற கர்மான் நம்பவில்லை. அதுபற்றி அவர் கூறும்போது, அவரது பேச்சில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதுபோன்று பலமுறை கூறியுள்ளார்.ஆனால் அவர் பதவி விலகவில்லை. தற்போது மக்கள் போராட்டத்தை திசை திருப்பவும், உலக நாடுகளின் கவனத்தை மாற்றவும் இந்த போலியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் பதவி விலகும் திகதியை அறிவிக்கவில்லை. இவரது இந்த அறிவிப்பு முதல் முறையல்ல. வழக்கமான ஒன்று தான். எனவே எங்களின் போராட்டம் அமைதியான முறையில் தொடரும் என்றார்.கடந்த ஜூன் மாதம் அதிபர் சலேவின் பங்களா மீது போராட்டக்காரர்கள் ராக்கெட் குண்டு வீசினார்கள். அதில் சலே உடல் கருகி படுகாயம் அடைந்தார். அதற்கான சிகிச்சை பெற சவுதி அரேபியா சென்ற அவர் கடந்த மாதம் தான் ஏமன் திரும்பினார்.
பாடசாலைகளில் மதிய உணவு கொடுக்க மறுக்கும் கனடிய அரசு.
கனடாவில் உள்ள பாடசாலைகளில் மதிய உணவுகளாக றோஸ்மேரியுடனான கோதுமைப் பாணும் முட்டை பாமேசன், உள்ளூர் தானியங்களுடன் பரிற்றோஸ், உள்ளி மற்றும் மிளகாயுடன் sauteed kale உணவுகளே கொடுக்கப்படுகின்றன.உலகளாவிய ரீதியில் பார்த்தால் கனடா தனது பள்ளி உணவுகளில் அதிகளவு அக்கறை காட்டுவதில்லையென்றே கூறப்படுகின்றது.
கனடா G8 நாடுகளிலேயே முழு நேர வகுப்புக்களைக் கொண்டிருந்தும் எந்தவிதமான தேசியப் பாடசாலை உணவுத்திட்டத்தினைக் கொண்டிராத ஒரேயொரு நாடாக உள்ளது.அமெரிக்கா மற்றும் யப்பான் நாடுகளில் ஏதோவொரு வகையில் ஒவ்வொரு நாளும் பகலில் காசிற்கோ அல்லது காசின்றியோ உணவு வழங்கப்படுகின்றது.கனடாவின் 90 வீதமான பள்ளிகளில் எந்தவிதமான ஊட்டச்சத்து முறைகளும் நடைமுறையில் இல்லை. மாணவர்கள் பெரும்பாலும் தமது வீடுகளிலிருந்தே உணவுகளைக் கொண்டுவருகின்றனர்.
உணவுத் திட்டங்களில் புதிய ஆய்வுகள் இடம்பெற்று பருமனடைதலையும் நோயையும் தவிர்க்கும் சுகாதாரமான உணவுகளை வழங்குவதற்கான முயற்சியில் புதிய ஆய்வுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கனடா பாடசாலை உணவுகளில் எந்தவிதமான முன்னேற்றங்களையும் காட்டாமலுள்ளதனால் பாடசாலைகளில் உள்ள உணவகங்களில் நொறுக்குத் தீனிகளையும் கொழுப்புள்ள உணவுகளையும் குறைக்கும்படி கூறிவருகின்றது.
பள்ளிக்கூட உணவுகளை அதிகரிக்கும்படி அழைப்புகள் வந்தபடியிருந்தாலும் Health Canada நிறுவனம் தமக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லையெனத் தெரிவித்திருந்தது.2009 இல் தேசிய பாடசாலைகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டத்திற்காக நிதியுதவியளிக்கும் கோரிக்கையை நிதியமைச்சர் மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக நீளமான பாதம் கொண்ட மனிதர்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவரது பாத அளவு 1 அடி 3 அங்குலம் ஆகும்.மொராக்கோ நாட்டின் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பிராஹிம் டகியுல்லா. சிறு வயதிலிருந்தே இவரது உடல் உறுப்புகள் வேகமாக வளர்ந்தன.
டீன் வயதில் ஒரே ஆண்டில் 3 அடி உயரம் வளர்ந்தார். 18 வயது வரை இவரது அபரிமிதமான வளர்ச்சியை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்கிறார் அவர்.நான் படித்த பள்ளியின் டாக்டர் ஒருவர் எனது அபரிமிதமான வளர்ச்சியை உணர்ந்தார். பரிசோதனைக்காக எனது ரத்த மாதிரியை கேட்டார்.
சோதனை முடிவில் பிட்யூட்டரி சுரபி கோளாறு ஏற்பட்டு அதிக அளவில் வளர்ச்சி ஹோர்மோனை உற்பத்தி செய்வதாலேயே அபரிமிதமான வளர்ச்சி இருப்பதாக கூறினார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் என்றார் பிராஹிம்.எனினும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். இப்போது சிகிச்சைக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றுள்ளார். 29 வயதான இவர் 8 அடி(246 செ.மீ) உயரம் உள்ளார். எனினும் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயரமான சுல்தான் கோசனைவிட(8 அடி 3 அங்குலம்) உயரம் குறைவுதான்.
அதேநேரம் இவரது இடது பாதத்தின் நீளம் 1 அடி 3 அங்குலம்(38.1 செ.மீ), வலது பாத நீளம் 1 அடி 2.76 அங்குலம் ஆகும். இதை கின்னஸ் அமைப்பு உறுதி செய்ததுடன் உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராகவும் அங்கீகரித்துள்ளது.இவரது வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் பிரான்ஸ் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். எனது நீளமான பாதத்தை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஏனெனில் இதன் மூலம் என்னுடைய பிரச்னைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என நம்புகிறேன் என பிராஹிம் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் 8 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு கொடூர தண்டனை.
எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொன்றதாக 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது.சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது.இந்த கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.இது தொடர்பாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு கோர்டில் உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகளான வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேருக்கும், கடந்த வெள்ளியன்று அந்நாட்டு சட்டத்தினைபடி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைவிதிக்கப்பட்டது.மேலும் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு துவங்கி இதுவரை 58 பேருக்கு இது போன்று கொடூர தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆப்கன் அரசும், நேட்டோ படைகளும் தோற்றுவிட்டன: ஹமீத் கர்சாய்.
ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் ஆப்கனில் அமைதியை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டன.பாகிஸ்தான் இல்லாமல் ஆப்கனில் தலிபான்கள் ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் அமெரிக்கப் படைகள் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அதிபர் ஹமீத் கர்சாய் இதுகுறித்து பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆப்கன் அரசும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் ஆப்கனில் அமைதியைக் கொண்டு வருவதில் தோல்வி அடைந்துவிட்டன.
ஆப்கன் மீதான பாகிஸ்தானின் கொள்கையும், தலிபான்கள் மீதான கொள்கையும் ஒன்று போலத் தான் இருக்கிறது. தலிபான்கள் பல்வேறு தாக்குதல்களை ஆப்கனில் நடத்தி வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கான மேலிட உத்தரவுகள் எல்லாம் வெளியில் இருந்து வருகின்றன. பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் தலிபான்களால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது.வரும் 2014க்குப் பின் நான் அதிபர் பதவியில் தொடரமாட்டேன். எனக்கு அடுத்து அப்பதவியில் அமரப் போகிறவரை நான் இப்போதே தேட ஆரம்பித்து விட்டேன்.
தன்னைப்பற்றி பரப்புரை செய்வதற்காக புரோக்கரை நியமனம் செய்த முஷரப்.
பர்வேஷ் முஷரப் அமெரிக்காவில் தன்னைப் பற்றி நல்லவிதமாக பரப்புரை செய்ய புரோக்கர் ஒருவரை 25,000 டொலர் மாத சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்த போது அந்நாட்டு அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷரப். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த முஷரப் பாகிஸ்தானிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டார். இப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள பல்கலைகழகங்களில் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் முஷரப்பை பற்றி அவ்வப்போது சில ருசிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் முஷரப் அங்கு தனக்கென ஒரு ஏஜன்ட் அல்லது புரோக்கரை 25,000 டொலர் மாதச் சம்பளத்துக்கு அமர்த்தியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 1ம் திகதி கையெழுத்தானது.
அமெரிக்க சட்டப்படி பதிவு எண் 6062ஐக் கொண்ட இந்த ஒப்பந்தம் 2012 மார்ச் 30ம் திகதி வரை செல்லுபடியாகும். இந்த புரோக்கர் பெயர் ராசா புக்காரி என பதிவாகியுள்ளது. இவர் அமெரிக்க காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்.25,000 டொலர் வீதம் அடுத்த 7 மாதங்களுக்கு புக்காரிக்கு சம்பளம் அளிக்கப்பட உள்ளது. அதன்பின் தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை நீட்டி கொள்ள முடியும்.
முதல் 2 மாதங்கள் மற்றும் கடைசி மாதத்தின் தொகை முன்தொகையாக வழங்க வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள எல்லா சட்டத் திட்டங்களுக்கும், முஷரப் மற்றும் ராச புக்காரி ஆகிய 2 பேரும் உட்பட்டு நடப்பதாகவும் கையெழுத்திட்டுள்ளனர்.பாகிஸ்தானில் முஷரப் செல்வாக்கிழந்த நிலையில் இருந்தாலும் உலக நாடுகளில் முஷரப் இன்னும் ஒரு அரசியல் தலைவராக நீடிப்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. இந்த நிலையைத் தக்க வைக்கவே இவ்வளவு சம்பளத்துக்கு ஆள் அமர்த்தியுள்ளார்.
ஜப்பானில் அணு மின் நிலைய ஊழியர் பலி.
ஜப்பான் கதிர்வீ்ச்சு ஏற்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஊழியர் ஒருவர் இறந்தார்.ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு மின் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் அணுகதிர்வீச்சு ஏற்பட்டு பலர் பலியாகினர்.
இந்நிலையில் நேற்று அணு மின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த 50வயது ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஆனால் இவர் அணு கதிர்வீச்சு தாக்கி பலியாகிவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் அணு உலை ஊழியர்கள் தொடர்ந்து பலியாகி வருவதும் உடல்நிலை பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டதாக ஜப்பானிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
ஹக்கானி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான் திட்டவட்டம்.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான உறவையே விரும்புவதாகவும், ஹக்கானி பயங்கரவாதிகள் மீது ராணுவ நடவடிக்கை இல்லை என்றும் பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான வட வஜ்ரிஸ்தானில் பழங்குடி அதிகம் வசித்து வருகின்றனர். அங்குதான் தலிபான்களின் தலைமையகம் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்த அவர்களுக்கு ஹக்கானி பயங்கரவாதிகள் உதவி வருகின்றனர் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.ஹக்கானி பயங்கரவாதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
ஹக்கானி பயங்கரவாதிகளுடனான உறவை பாகிஸ்தான் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று அண்மையில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ராவல்பிண்டியில் வெள்ளிக்கிழமை ராணுவ தளபதி ஜெனரல் அஸ்பாக் பர்வேஸ் கயானி தலைமையில் நடைபெற்றது.
அமெரிக்காவுடனான உறவை தொடர விரும்புவதாகவும் அதற்கு தடையாக உள்ள முட்டுக்கட்டைகள் படிப்படியாக அகற்றுவதும் என்றும் அக்கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது.ஹக்கானி பயங்கரவாதிகள் குறித்த அமெரிக்காவின் கவலையை போக்கும் வழியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
“ஹக்கானி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான உறவை விரும்புகிறோம். அதே சமயம் வட வஜ்ரிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவ தாக்குதலை நடத்த மாட்டோம்” என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அனைத்து பிரச்னைகளுக்கும் ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். சில தினங்களுக்கு முன் சௌதி அரேபியாவுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவ பயிற்சியை மேற்கொண்டது.
அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி பிரச்னைகளுக்கு தீர்வு காண ராணுவ நடவடிக்கை சிறந்த முறையாகாது என குறிப்பிட்டார். ஹக்கானி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் கயானியின் இக்கருத்து பாகிஸ்தான் அதன் நிலையில் உறுதியாக உள்ளது என்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஹக்கானி பயங்கரவாதிகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கைகக்கு பதிலாக என்ன மாற்றுவழிகள் உள்ளன என்பதை பாகிஸ்தான் தெளிவுபடுத்தவில்லை.எங்களுக்கென சில தேசிய நலன்கள் உள்ளன. சில வரம்புகள் உள்ளன. அவற்றில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந்தியாவும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தத்தினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விவாதித்தாக தெரிகிறது.ராணுவத்தினரின் திறமையை மேம்படுத்தும் முறைகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மாதந்தோறும் நடைபெறும் ஆய்வு கூட்டம்தான் என்று ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானுக்கான அமெரிக்கா தூதர் கெமரூன் முன்டர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி காரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.இரு தரப்பு உறவு குறித்தும், பிராந்திய பிரச்னைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடனட்டை மோசடி: 111 பேர் மீது வழக்கு.
அமெரிக்காவில் நிகழ்ந்த மிகப் பெரிய கடன் அட்டை மோசடி வழக்கில் 111 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவில் மிக அதிகபட்ச அளவுக்கு கடனட்டை மோசடி நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். வாடிக்கையாளர்களின் கடன் அட்டை விவரங்களைத் திருடி அதன் மூலம் விலை உயர்ந்த பொருள்களை வாங்கி பயன்படுத்தியுள்ளதாக பெடரல் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மட்டுமின்றி உலகிலேயே அதிக விலை கொண்ட ஜியுசிசிஐ நிறுவனத்தின் கைப்பைகளையும் கடனட்டை மூலம் இவர்கள் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.வாடிக்கையாளர்கள் பொருள் வாங்கும்போது கடன் அட்டைகளை அளிப்பது வழக்கம். கடன் அட்டை தகவல்களை பதிவு செய்யும் அதே நேரம் அவர்களது தனிப்பட்ட தகவல்களையும் அறிந்து அதன் மூலம் இத்தகைய மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கிகளில் கடன் அட்டைகளை ஸ்வைப் செய்யும் ஊழியர்கள், மிகப் பெரிய விற்பனையகங்களில் பணிபுரிவோர், ரெஸ்டாரண்ட் பணியாளர்கள் ஆகியோர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மோசடியில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து அதிக அளவில் கடன் அட்டைகளை பயன்படுத்துபவர்கள்தான். இவர்களில் பெரும்பாலானோர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குபவர்கள்.
கடந்த 16 மாதங்களில் மட்டும் சுமார் 1.30 கோடி டொலர் அளவுக்கு இவர்கள் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 111 பேரில் இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலியான கடன் அட்டைகளைத் தயார் செய்து நியூயார்க், புளோரிடா, மாசசூசெட்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்று அங்கு ஆப்பிள் ஐ-பாட், ஐ-போன், கணணி, கைக்கடிகாரங்கள், விலை உயர்ந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனர். இவற்றை சீனா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
மேலும் சொகுசு கார்களான லம்போர்கினி, போர்ஷே ஆகிய கார்களை வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.பிடிபட்டவர்களிடமிருந்து இதுவரை 6.50 லட்சம் டொலர் ரொக்கம் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 7 கைத்துப்பாக்கிகள், கணணிகள், கடன் அட்டைகளில் எண்களை பதிவு செய்யும் கருவிகள், வெற்று அட்டைகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டதாக பெடரல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு.
இரம் அப்பாஸி என்கிற அமெரிக்க முஸ்லிம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் தனது விமானத்திலிருந்து அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறக்கி விட்டது.இதனால் அவமானமடைந்த அப்பெண் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது சான் டியாகோ நீதிமன்றத்தில் வியாழனன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.தான் முக்காடு அணிந்திருந்த ஒரே காரணத்துக்காக அநியாயமாக நடத்தப்பட்டதாக அவர் வழக்கில் தெரிவித்துள்ளார். இச்செய்தியை வழக்கறிஞர் ஜேம்ஸ் மெக்எல்ராய் தெரிவித்தார்.
திருமதி.இரம் அப்பாஸி சான் ஜோஸ் மாநில பல்கலைகழகத்தில் சைக்காலஜி படிக்கும் அமெரிக்க மாணவியாவார். மூன்று பிள்ளைகளின் தாயான அவர் விமானத்தில் ஏறி அமர்ந்ததும் கைபேசியில் பேசியதைக் கேட்ட ஒரு விமானச் சிப்பந்தி, அவர் “போகலாம்” என்று சொன்னதைக் கேட்டு சந்தேகப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்க விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டு மூன்று நிமிட சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.
சோதனைக்குப் பின் அவரிடம் மன்னிப்பு கேட்டு பயணத்தைத் தொடருமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியபோதிலும் விமான இயக்குநர் “விமான ஊழியர்கள் விரும்பவில்லை” என்று கூறி அப்பாஸியை விமானம் ஏறவிடாமல் தடுத்தார்.இதனால் நிறுவனத்தின் பிறிதொரு விமானத்தில் செல்லும்படி வேறொரு இருக்கைச்சீட்டை(Boarding Pass) அவருக்கு விமான நிறுவனம் வழங்கியது.
ஆயினும் தன் படிப்பு சம்பந்தமான, தேர்வுக்குத் தேவையான முக்கியமான ஆராய்ச்சியை இதனால் தான் தவறவிட்டதாகக் கூறும் அப்பாஸி,“அந்த நிமிடங்கள் நான் அலைகழிக்கப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், வெறுப்புக்கும், குழப்பத்திற்கும் ஆளாக்கப்பட்டேன்” என்று காட்டம் தெரிவித்துள்ளார்.அந்த விமான நிறுவனத்தின் பிரதிநிதியான கிரிஸ் மெய்ன்ஸ் கூறுகையில், நன்னம்பிக்கையின் அடிப்படையில் தாங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இடம்பெற்ற வான்குதிப்பு பயிற்சி: 50 பேர் படுகாயம்.
ஜேர்மனியில் இடம்பெற்ற வான்குதிப்புப் பயிற்சியில் பங்குபற்றிய அமெரிக்க இராணுவத்தினர் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வான் குதிப்புப் பயிற்சியில் 1000 வீரர்கள் பங்குபற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இத்தாலியைத் தளமாகக் கொண்ட 173ஆவது வான் பிரிகேட்டும் ஸ்லோவாக்கிய மற்றும் அமெரிக்கத் துருப்புக்களுடம் இணைந்து பவேரியா பகுதியிலேயே இந்த பயிற்சிக் குதிப்பு மேற்கொள்ளப்பட்டது.இப்பயிற்சி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயற்படும் படைகளுக்கான பயிற்சித்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டதெனக் கூறப்படுகின்றது.
இதில் காயமடைந்தவர்களின் தலை, முள்ளந்தண்டு மற்றும் இடுப்புப் பகுதிகளில் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.இப்பயிற்சியில் அதிகளவில் வீரர்கள் காயமடைந்தது எவ்வாறென விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது.
சிரிய அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்: அமெரிக்கா.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை ராணுவம் மூலம் ஒடுக்க அதிபர் ஆசாத் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.எனவே இதுவரை 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐ.நா சபையும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் மக்கள் போராட்ட குழுவின் சிரியா தேசிய கவுன்சில் தலைவராக இருந்த தமோ(53) என்பவர் முகமுடி அணிந்த 4 துப்பாக்கி மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.இதில் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் காயம் அடைந்தனர். இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாய்கன்னே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது சிரியா மிக ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.எனவே மக்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிபர் பஷார் அல் ஆசாத் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.