Friday, October 28, 2011

பூமி சுழலுவதைப் போன்ற அபூர்வ காட்சிகள் வெளியீடு!!!!


சர்வதேச விண்வெளி மையம் வடக்கு அமெரிக்காவை குறி வைத்து எடுத்த புகைப்படத்தில் மெய்மறக்கச் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பூமி சுழலுவதைப் போன்ற காட்சியும் அதில் ஒன்றாகும்.


சுழற்சியானது நொடிக்கு 225 மைல்களுக்கு மேல் இருக்கிறது. இதுகுறித்து நாசா கூறுகையில், புகைப்படக் கருவியை வடக்கு நோக்கி வைத்து எடுத்த போது ஆச்சர்யமான வட துருவமானது மினுமினுவென்று மின்னுவதை வீடியோவில் காணலாம் என்றார். விண்வெளி மையமானது மத்திய வடக்கு அமெரிக்காவை நோக்கி படம் எடுத்த போது மேகங்களால் சூழ்ந்த பெனிசுலாவின் மெக்சிகனும் காணப்பட்டது. சிகாகோவும், தெற்கு முனையில் உள்ள லேக் மெக்சிகனும் பில்லியன் ஒளியால் ஒளிர்ந்து கொண்டிருந்ததை வீடியோவில் காணலாம்.

மின்னலும், புயல்காற்றும் மேகங்கிடையே பளீச் சென்று இருந்ததும் வீடியோவில் காணமுடிகிறது. இதே மாதிரி காட்சியானது அட்லாண்டா, ஜார்ஜியா மீது எடுத்த போதும் கிடைத்ததாக ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வீடியோவின் முடிவில் ப்ளோரிடா பெனிசுலாவைக் காண முடிந்தது. மேலும் பாஹாமஸ் முழுவதும் நீரின் நிழலால் சூழப்பட்டிருந்ததையும் காணலாம்.


சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது 100 பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 16 நாடுகள் இணைந்து இதனை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பத்து வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்பணியானது இந்த வருடம் முடிவடைந்து விடும். விண்வெளி மையத்தில் ஐந்து படுக்கை வசதி கொண்ட வீடுகளும், நிறைய ஆய்வு மையங்களும், தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF