2ஆவது சுற்றின் போது, இத்தாலி வீரரான ஹோண்டா அணியின் சைமன்செல்லி, யமஹா அணியின் காலின் எட்வர்ட்ஸ், வலன்டினோ ரோஸி ஆகியோரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில், கீழே விழுந்த சைமன்செல்லி மீது கார் ஏறி ஹெல்மட் உடைந்தது. தலை, கழுத்து பகுதியில் பலத்த காயமேற்பட்டது.
அதே போல், எட்வர்சும் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதை நேரில் பார்த்த ரசிகர்களும், டிவியில் ரேஸ் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக போட்டி ரத்து செய்யப்பட்டு, 2 வீரர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சைமன்செல்லி உயிரிழந்தார். எட்வர்ட்ஸ் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். 24 வயதாகும் சைமன்செல்லி 2008ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இதற்கு முன், கடந்த 2003இல் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ் நடந்த போது, டைஜிரோ கடோவும், கடந்த ஆண்டு சோயா தோமிஜவாவும் விபத்தில் சிக்கிய பலியாகியமை குறிப்பிடத்தக்கது.