Tuesday, October 11, 2011

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!!


கை குலுக்கினால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் என நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இங்கிலாந்தில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் நாதன்வோல்பே தி வைரஸ் ஸ்ட்ராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அதில் வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவை தோல் மூலம் மற்றவர்களுக்கு பரவுகின்றன. அதை தடுக்க சில எளிய முறையை மேற்கொள்ளலாம்.
அன்பை பரிமாறிக் கொள்ள ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். மாறாக தங்களின் முழங்கைகளால் ஒருவருக்கொருவர் இடித்து கொள்ளலாம். அவை தவிர ஜப்பானியர்களை போன்று ஒருவரை சந்திக்கும் போது தலையை குனிந்து மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.இவை தவிர மாசுபட்ட சொதிகலன்கள், கதவு கைபிடி, பணிபுரியும் இடங்கள் ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றில் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கிருமிகள் 24 மணி நேரமும் காத்திருக்கும்.அவை மனிதர்களின் மூக்கு, நாக்கு போன்றவற்றின் மூலம் தொற்றிக் கொள்ளும். எனவே தினமும் கைகளை தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF