Friday, October 7, 2011
அனைவருக்கும் டெப்லட் கணனி 35 அமெரிக்க டொலரில்: வெளியிட்டது இந்தியா..
உலகின் மிகவும் மலிவான டெப்லட் கணனியை உருவாக்கவுள்ளதாக இந்தியா கடந்த வருட ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. இதன் விலை 35 அமெரிக்க டொலர்களாகும். 'ஆகாஸ்' என இந்த டெப்லட் கணனிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இவை இந்திய தொழிநுட்ப இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology, IITs) மற்றும் பிரித்தானிய 'டேட்டா விண்ட்' நிறுவனமும் இணைந்தே இக் கணனியை உருவாக்கியுள்ளன. மேற்படி டெப்லட் கூகுளின் அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினைக் கொண்டியங்குகின்றதுடன், எல்.சீ.டி திரையையும் கொண்டுள்ளது.
இதன் முதல் 100,000 கணனிகளும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.சில மாதங்களுக்கு பின்னர் அனைவரும் விலைகொடுத்து வாங்கும் வண்ணம் விற்பனைக்கு வரவுள்ளது இதன் போது 3 ஜி தொழிநுட்பத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படவுள்ளதுடன் 60 அமெரிக்க டொலர்கள் வரை விலையிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது..
வறியவர்களுக்கு கணனி அறிவைப் பெற்றுக் கொடுக்கவும், இணைய உலகில் இணைவதற்கு வாய்ப்பளிக்கவுமே இதனை உருவாக்கியுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் கல்வி அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இத்தகைய மலிவு விலைகொண்ட டெப்லட் கணனியை உருவாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக இந்தியா கடந்த வருடம் அறிவித்திருந்தது.
எனினும் உற்பத்திச் செலவு மற்றும் சரியான நிறுவனத்தினை தெரிவு செய்வது என்பவற்றில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக இக் கணனி வெளியீட்டில் காலதாமதம் ஏற்பட்டது. இத்திட்டம் கைவிடப்படுமெனக் கருதப்பட்டு வந்த நிலையில் அது தற்போது சாத்தியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF