இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது.
ஆராய்ச்சியின் முடிவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருவார்களேயானால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அத்தகைய குழந்தைகளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.இந்தக் குறைபாடுகளைப் போக்க இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.