Friday, October 28, 2011

யூரோ மக்களின் மிதக்கும் வீடுகள்..

பேறு நாட்டில் உள்ள ஏரியில் யூரோ மக்கள் மிதக்கும் வீடுகளை உருவாக்கியுள்ளதால் இத்தீவு மிதக்கும் தீவுகள் என அழைக்கின்றனர். திதிகாக்கா என்றழைக்கப்படும் இவ்வேரி வணிக நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்படுகின்றது. தரைமட்டத்திலிருந்து அதிஉயர்ந்த இடத்தில் அமைந்திருக்கிற இவ்வேரி 3811 மீற்றர் உயரத்தில் உள்ளது.இங்கே வாழும் மக்கள் இவ்வேரியின் அருகே உள்ள மர இழைகளால் தமது வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். இத்தகைய மரநார்களை டொட்டாரா என்றழைக்கப்படும். இவை நீரில் மிதந்து கொண்டிருக்கும் போது இவை நகர்ந்து போகாமல் நிலத்துடன் தொடர்புடையவாறு பெரிய தடிகளால் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.


இவ்வேரியில் இத்தகைய மிதக்கும் வீடுகள் 42வரை காணப்படுகின்றன. இவை மக்களின் கைவண்ணத்தினால் கட்டப்படுகின்றன. இந்த மரநார்கள் விரைவில் நீரினால் பழுதடையக் கூடியதாக இருப்பதால் வருடத்துக்கு மூன்று தடவை புதிதாகக் கட்டப்படுகிறது. 






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF