Friday, October 14, 2011

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்...


“இந்த காய் சாப்பிடு, அந்த காய் சாப்பிடு’’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் சாப்பிடும் அளவு குறைந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.சொக்லேட், ஐஸ்கிரீம் எவ்வளவு கொடுத்தாலும் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். சோறு என்றாலே எரிச்சலாவார்கள். நாலு வாய் சோற்றை அரை மணி நேரமாக சாப்பிடுவது இதன் வெளிப்பாடு.இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அப்பலேச்சியன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
4 வயது குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிக சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு.ஆனால் “இதை சாப்பிடு, அதை சாப்பிடு. இதில் நிறைய சத்து இருக்கிறது” என்று பெற்றோர் திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த உணவு மீது அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. அதை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு காய், பழம் அல்லது உணவு பொருளை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிடு, சாப்பிடு என்று பல முறை கட்டாயப்படுத்துவதைவிட அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது.இதில் ஏதோ சத்து அல்லது ருசி இருப்பது போல தெரிகிறது. சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்து அவர்களாகவே சாப்பிடுவார்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF