Saturday, October 8, 2011

MTA பற்றிய சில தகவல்கள்...


Mail Transfer Agent என்பதை சுருக்கமாக MTA என அழைக்கின்றனர். மின்னஞ்சல் அனுப்புவதில் முக்கியமாக இது பயன்படுகிறது.நாம் நம்முடைய மின்னஞ்சல் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது.
MTA என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங்களுடைய கணணியிலிருந்து மின்னஞ்சல் உங்கள் நண்பரின் கணணிக்கு அனுப்பப்படுகையில் பல கணணிகளை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது.இந்த பயணத்தை இந்த MTA தான் கவனித்துக் கொள்கிறது. இது Mail Submission Agent மற்றும் Mail User Agent என்பவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் தயார் செய்திடும் மின்னஞ்சல்களை வகைப்படுத்தி அனுப்புவது இதுதான். மின்னஞ்சல் வகைப்படுத்தப்பட்டவுடன் அவற்றிற்கு ஒரு ஹெடர் கொடுத்து Mail Delivery Agent(MDA) க்கு அனுப்புகிறது. இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் சரியாக உரிய கணணிக்கு செல்கின்றனவா என்பதனை இந்த Mail Delivery Agent தான் பார்த்துக் கொள்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF