Thursday, February 10, 2011

பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை.


கோலாலம்பூர்: கடந்த ஒரு மாதமாக விரக்தியில் இருந்த மாணவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். மலேசியாவின் மலாக்கா மாநிலம் அயர்லெலே பகுதியை சேர்ந்த மாணவி சல்லி லீ கியான் சுன் (17). அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். தனது தனிப்பட்ட விஷயங்களை பேஸ்புக் இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடையவள்.

கடந்த ஒரு மாதமாகவே விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இதுதான் தனக்கு கடைசி சீனப் புத்தாண்டு என்று சக தோழிகளிடம் கூறி வந்திருக்கிறாள். தனது அறை சுவரிலும் கிறுக்கி வைத்தாள். தான் மிகவும் சோகத்தில் இருப்பதாகவும் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு வேதனையில் இருப்பதாகவும் பேஸ்புக்கிலும் தெரிவித்திருக்கிறாள்.

இந்நிலையில், பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதியியல் செய்முறை வகுப்பு நடந்தது. அங்கிருந்து திடீரென வெளியேறிய மாணவி சுன் அழுதுகொண்டே 2வது மாடிக்கு ஓடினாள். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். ‘முடிவெடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடு’ என்று பேஸ்புக் மூலம் சிலர் வலியுறுத்தியதாலேயே இந்த முடிவை மாணவி எடுத்தார் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF