1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம் ஒரு நொடியில் 650 கட்டளைகளை நிறைவேற்றக்கூடியது. EDSAC என்று இவை அழைக்கப்பட்டன. 1949ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேர்.மொரிஸ் வில்கீஸ் தலைமையிலான குழுவினரே இதை உருவாக்கினர்.
1949 மே மாதம் 6ம் திகதி இது முதற்தடவையாகப் பாவனைக்கு வந்தது. இன்றைய நவீன கம்பியூட்டர்கள் இவ்வாறான 30 மில்லியன் கட்டளைகளை நிறைவேற்றக்கூடியவை. இருப்பினும் இன்றைய கம்பியூட்டர்களுக்கு மூல காரணியாக அமைந்த அன்றைய கணினி இயந்திரம் அந்த கால கட்டத்தின் புரட்சிகரமான கணிப்பொறியாகும். இன்றைய கம்பியூட்டர்களை விட அன்றைய இயந்திரங்கள் 50000 மடங்கு மெதுவானவை.
அவற்றின் நினைவுப் பெட்டகப் பகுதியை மட்டும் வைத்திருப்பதற்கு தனியான அறையொன்று தேவைப்பட்டது. அவை 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவையாகக் காணப்பட்டன.
இருந்தாலும் அந்த கால கணிப்பொறி இயந்திரங்களை விட இவை 1500 மடங்கு வேகமானவை. பல வாரங்களுக்குத் தரவுகளைச் சேமித்து வைக்க்கூடியவை. அந்த கால கணினிகள் பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பாதுகாத்து வைக்கப்படடுள்ளன. நவீன கம்பியூட்டர்களின் வழித்தோன்றல் இங்கிருந்து தான் ஆரம்பமாகின்றது. இவை இன்றைய கம்பியூட்டர்களின் முப்பாட்டன்கள் என்று நூதனசாலை அதிகாரயொருவர் வர்ணித்துள்ளார்.
அந்தகால கணிப்பொறியொன்றை வைத்திருக்க 215 சதுர அடி நிலப்பரப்புத் தேவைப்பட்டது. 3000 வேல்வுகளை அது கொண்டிருந்தது. ஆனால் இன்றை நவீன மடிக் கணினி யொன்று இலட்சக்கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளது. கம்பியூட்டர் தலைமுறையின் நினைவாக இது பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பத்திரமாகப் பேணப்பட்டு வருகின்றது.