Monday, February 21, 2011

இன்றைய செய்திகள் 21/02/2011


உள்நாட்டுப் போர் வெடிக்கும்! எச்சரிக்கிறார் கடாபி மகன்.

லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிராக மக்கள் ‌போராட்டம் சில நாட்களாக ந‌டந்து வருகிறது. இந்நிலையில் லிபியா தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்த கடாபியின் மகன் செய்ப் அல்-இஸ்லாம் கடாபி லிபியாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக உள் நாட்டு போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.மேலும் அவர் எண்ணெய் கினறுகள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. சில ராணுவ முகாம்கள், டேங்குகள் மற்றும் ஆயுதங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். 

இப்போராட்டம் நடத்துவதற்கு துனீசியாவோ எகிப்தோ அல்ல. ராணுவம் இது போராட்டங்களை சந்திக்காததால் போராட்டத்தின்போது ராணுவம் தவறு செய்துவி்ட்டது என்று கூறினார்.


லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி!

லிபியாவில் கடாபிக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தில் கடந்த 3 நாட்களில் 84 பேர் ‌கொல்லப்பட்டுள்ளனர்.கிளர்சியுடன் பல்வேறு அரபுநாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர்.பக்ரைன், ஏமன் நாடுகளில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது .பக்ரைனில் இன்றுடன் 7 வது நாளாக மன்னருக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றாலும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். 


பக்ரைனில் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை வீசியும் , துப்பாக்கியால் சுட்டும் களைத்தனர். 5 பேர் பலியாகிவிட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு காரணமாக ஏமன், பக்ரைன், லிபியா போன்ற நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என தங்களது நாட்டவர்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியர்கள் பக்ரைனில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர்.


இவர்கள் நிலை குறித்து இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவு துறை அமைசசகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் எஸ்.எம்.., கிருஷ்ணா கூறுகையில்; அரபுநாடுகளின் உள்கட்ட விவகாரம் குறித்து கருத்து எதுவும் சொல்ல முடியாது .


அங்குள்ள தூதரக அதிகாரிகள் மூலம் கவனித்து வருகிறோம். தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். யாரும் கவலைப்பட வேண்டியதில்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ், மற்றும் செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் பக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டு வருகின்றனர். 


விரைவில் அங்கு அமைதி திரும்பும் சூழல் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். லிபியாவில் தொடர் கலவரத்தில் இது வரை 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது.


பிரிட்டன் அமைச்சர் இலங்கை விஜயம், யாழ்ப்பாணத்துக்கும் செல்வார்!

பிரித்தானியாவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்து உள்ளார். 

South Asia at Foreign and Commonwealth Office (FCO) அமைச்சரான Alistair Burt என்பவரே இந்த அமைச்சர்.தற்போதைய பிரிட்டன் அரசினால் இலங்கைக்கு அமைச்சர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவே ஆகும். 

இவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரை முக்கியமாக சந்தித்து உரையாட உள்ளார். யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று பிரிட்டன் தூதரகம் அறிவித்து உள்ளது.

எப்படி ஒரு அன்பான அம்மா தன் குழந்தையைக் குத்திக் கொன்றார்? குழப்பத்தில் பொலிஸார்.
தனது நான்கு வயதேயான மகளைக் குத்திக் கொன்ற பின் தானும் தற்கொலை செய்ய முயன்றதாக நம்பப்படும் பெண் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிரேட்டர் மன்செஸ்டர் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டோன்மெகின் என்ற 33 வயது மருத்துவ தாதியே இவ்வாறு ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் பொலிஸாரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது மகளை அளவுக்கு அதிகமாக நேசித்த ஒரு தாயே இவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவரோடு பல மணித்தியாலங்களாக தொடர்பு கொள்ள முயன்றும் அது முடியாமல் போகவே இவரின் தாய் பொலிஸாரின் உதவியோடு வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது டோன்மெகின்னும் அவரது மகள் சோலியும் கட்டிலில் அருகருகே இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

மகள் இறந்து கிடந்தார். அவரது உடம்பில் வெட்டுக்காயங்களும் கத்திக்குத்து காயங்களும் காணப்பட்டன. தாயின் மணிக்கட்டு வெட்டப்பட்டு மூர்ச்சையாகக் காணப்பட்டார். பின்னர் அவர் நஞ்சருந்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அவர் வேலை செய்யும் ஆஸபத்திரியிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர்க்காப்பு முறையின் கீழ் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது. இவரின் கணவர் மூன்று வருடங்களாக இவரைப் பிரிந்து வாழுகின்றார்.

நேற்று இவர் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து பூக்கொத்து மற்றும் அனுதாப அட்டை என்பனவற்றை வைத்து தனது மகளுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குடும்பத்தவர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கொலைக்கான காரணத்தை ஊகிக்க முடியாமல் பொலிஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF