துணை அதிபரிடம் எகிப்திய ஆட்சி ஒப்படைப்பு: முபாரக் ஓட்டம்.
எகிப்திய மக்கள் ஆவலுடனும், பல கனவுகளுடனும் எதிர்பார்த்த அதிபர் முபாரக்கின் இரவு உரை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டரை வாங்கப்போவது யார்?
சமூக வலைப்பின்னல் தளமான டுவிட்டரை வாங்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நிறுவங்களின் அதிகாரிகளின் இடையே கீழ்மட்ட அளவில் இது தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய டுவிட்டரின் பெறுமதி 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் கடந்த வருட வருவாய் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.டுவிட்டருக்கு உலகம் பூராகவும் 190 மில்லியன் பாவனையாளர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.மேலும் தினசரி 65 மில்லியன் டுவிட்டர்கள் பரிமாறப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
ஈராக்கில் நிதமும் குண்டுகள் வெடிப்பது சகஜம். ஆனால் அதிலும் தற்போது.
எகிப்திய மக்கள் ஆவலுடனும், பல கனவுகளுடனும் எதிர்பார்த்த அதிபர் முபாரக்கின் இரவு உரை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் துறை மந்திரி அனாசல்-பிக்கி டி.வி.யில் தோன்றி பேசியதாவது: அதிபர் பதவியில் இருந்து முபாரக் பதவி விலக மாட்டார். அவர் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். இதனால் தக்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே ராணுவ கமாண்டர் ஜெனரல் ஹாசன் அல்-ரோயினி பேசினார். அதிபர் முபாரக் மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று மிரட்டல் விடுத்தார்.
இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியால் கரவொலி எழுப்பினார்கள். இன்று காலை முபாரக் டெலிவிஷனில் உரையாற்றினார். அப்போது,"நான் வெளிநாடுகளின் உத்தரவுக்கு(அமெரிக்காவுக்கு) கட்டுப்பட்டு உடனடியாக பதவி விலகமாட்டேன். வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தல் வரை பதவியில் நீடிப்பேன். அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
தேர்தலில் வெற்றி பெறுபவர்களிடம் எகிப்தை பாதுகாப்பாக ஒப்படைப்பேன். அரசியலமைப்பு சட்டப்படி துணை அதிபரிடம் அதிகாரத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். எனவே எனது உயிர் உள்ளவரை எகிப்தை விட்டு செல்ல மாட்டேன். எனது உடல் எகிப்து மண்ணில் தான் புதைக்கப்படும்" என்றார். அவரது பேச்சை தொடர்ந்து தக்ரிர் மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்கள் கொந்தளித்தனர். முபாரக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தங்களது ஷீக்களை தூக்கி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்கிடையே, அதிபரின் பேச்சை தொடர்ந்து துணை அதிபர் ஒமர் சுலைமான் போராட்டக்காரர்களிடம் பேசினர். அப்போது, “அனைவரும் வீடுகளுக்கு செல்லுங்கள், உங்களின் அன்றாட பணிகளை கவனியுங்கள். எகிப்தையும், மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அதிபர் என்னிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

எனவே அனைவரும் சமாதானம் அடைந்து தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள். இளைஞர்களின் எழுச்சியை தொடர்ந்து உங்களின் கோரிக்கைககள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் அரசுடன் கைகோர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதன் பிறகும் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. முபாரக்குக்கு எதிராக கோஷம் எழுப்பினர். வெள்ளிக் கிழமையான இன்று தொழுகை நடத்தி விட்டு அதிபர் அரண்மனைக்கு ஊர்வலமாக சென்று அதிரடி முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதனால் பயந்து போன முபாரக் எகிப்தை விட்டு ஓடிவிட்டதாக தகவல் பரவியுள்ளது. அவர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் அல்-ஹீரா என்ற டெலிவிஷன் தெரிவித்துள்ளது. ஈரான் பத்திரிகை ஒன்றும் முபாரக் ஓடி விட்டதாக செய்தி வெளியிட்டு உள்ளது. அவர் செங்கடலில் உள்ள சுற்றுலா பூங்கா ஒன்றில் தங்கி இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
டுவிட்டரை வாங்கப்போவது யார்?
சமூக வலைப்பின்னல் தளமான டுவிட்டரை வாங்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நிறுவங்களின் அதிகாரிகளின் இடையே கீழ்மட்ட அளவில் இது தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய டுவிட்டரின் பெறுமதி 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் கடந்த வருட வருவாய் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.டுவிட்டருக்கு உலகம் பூராகவும் 190 மில்லியன் பாவனையாளர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.மேலும் தினசரி 65 மில்லியன் டுவிட்டர்கள் பரிமாறப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
ஈராக்கில் நிதமும் குண்டுகள் வெடிப்பது சகஜம். ஆனால் அதிலும் தற்போது.
சுவிஸில் காந்தி மற்றும் ஐன்ஸ்டின் அருங்காட்சியகம்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பல்வேறு இடங்களில் மகாத்மா காந்தி மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் அருங்காட்சியகமும், நிரந்தர சிலைகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்ர்லாந்தின் டாவோஸ் நகரில் சமீபத்தில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் இந்திய தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தி 20-ம் நூற்றாண்டில் இணையற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக டாவோஸ் நகரில் அருங்காட்சியகமும், பல்வேறு இடங்களில் காந்தி, ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு நிரந்த சிலைகள் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக இந்திய சிற்ப கலைஞர்கள் ராம்சுதிர், அனில்சுதிர் ஆகியோர் சிலைகளை வடிவமைக்கவுள்ளனர். முன்னதாக டாவோஸ் நகர கவுன்சிலில் மகாத்மா காந்தி, ஆல்பர்ட ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு சிலைகள் வைக்க அனுமதி அளித்து தீர்பளிக்கப்பட்டது.
முன்னதாக ஐரோப்பிய பார்லிமென்ட் தலைநகரான பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசெல்ஸ் நகரிலும், பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற நகரமான ஸ்ட்ராஸ்பெர்க் நகரில் காந்திக்கு சிலைகள் உள்ளன. அந்த வரிசையில் சுவிட்சர்லாந்திலும் காந்தி அருங்காட்சியகம், சிலை வைக்கப்பட்டவுள்ளன.
அடுத்தாண்டிற்குள் மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் ஆகியோரின் சிலைகள் திறக்கப்படும் என டாவோஸ் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் முதுகெலும்பு அற்றவர்கள்: சாடுகின்றார் ரணில் விக்கிரமசிங்க.
இலங்கையின் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் முதுகெலும்பு அற்றவர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சாடியுள்ளார்அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதில் பல ஊடகவியலாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அதன் காரணமாக உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மறைந்த அமைச்சர் பெ. சந்திரசேகரனின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை மீது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.ஒரு காலத்தில் துணிச்சலாக செய்திகளை வெளியிட்டு வந்த டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்கா லியனாரச்சி கூட தற்போது கண்டபடி முதுகை வளைத்து அரச தரப்பினருக்கு கூழைக் கும்பிடு போடத் தொடங்கியுள்ளதாக அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
அவ்வாறான செயற்பாடுகள் மூலம் பத்திரிகையாளர்கள் பெரும் அநீதியிழைப்பதாக கண்டனம் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் கூட அவ்வாறான விடயங்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக் காட்டுகின்றார்.
அத்துடன் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் செய்திகளைப் பிரசுரிப்பதாகவும் விமர்சித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் சிறுபான்மை அரசியல் தலைவர்களுக்கு எதிராக பல ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் உள்ள எகிப்தியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!
எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்ததை கனடாவில் உள்ள எகிப்தியர்கள் கொண்டாடினர். ஹெலிபெக்ஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் கூடிய எகிப்தியர்கள் தமது நாட்டில் மக்கள் சக்திக்குக் கிடைத்துள்ள வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இங்கு கூடிய சிலர் தொலைக்காட்சிகளுக்குக் கருத்துக் கூறுகையில் தமது வாழ்நாளில் இது மறக்கமுடியாத மகிழ்ச்சிக்குரிய நாள் என்று கூறினர்.
தமது நெஞ்சில் நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு சுமை நீங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக இன்னும் சிலர் கூறினர். மொன்றியல் நகரிலும் எகிப்திய ராஜதந்திர நிலையத்துக்கருகில் கூடி மக்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது ஒரு மாபெரும் புரட்சி.

மீண்டும் நாம் பெருமைக்குரிய ஒரு தேசத்தின் மக்களாக மாறுவதற்கு இது வழிவகுத்துள்ளது என்று இங்கு திரண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தியச் சிறுவனுக்கு நெஞ்சில் கால்!
இந்த உலகைச்சுற்றி எத்தனை எத்தனை விசித்திரங்கள் தான் நடந்துகொண்டிருக்கின்றது. மனிதனாக பிறக்கும் போதே ஒரு விசித்திரமான அங்க அமைப்பை கொண்டு பிறந்தவர் பற்றி இன்று பார்க்க இருக்கிறோம்.
அவ்வாறான இன்னுமொரு சம்பவத்தினை இன்றும் உங்களுக்கு தருகின்றோம். இந்தியாவின் Buxar, Bihar என்ற இடத்தில் வாழும் 8வயது நிரம்பிய தீபக் குமார் பஸவான் என்ற சிறுவனுக்கே இந்த விசித்திரமான உடல் காணப்படுகிறது. சிறுவனின் நெஞ்சுப்பகுதியில் இருந்து மேலதிகமாக இரு கால்கள் வெளியே வந்துகாணப்படுகிறது. அதனுடன் சிறியதாக இரு கைகளும் காணப்படுவது இன்னும் அதிர்ச்சியை தோற்றுவிக்கின்றது.

நெஞ்சில் காணப்படும் மேலதிகமான அந்த உடல் சிறுவன் நடக்கின்ற போழுதெல்லாம் பெரும் சுமையை தோற்றுவிக்கின்றது. இந்த சிறுவனின் இந்நிலமை தொடர்பில் வைத்திய ரீதியாக அதனை அகற்ற பெற்றோர் பெரும் விருப்பப்பட்ட போதிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அது எட்டாக்கனியாகவே காணப்படுகிறது. நாளாந்த வருமானமாக வெறும் 200ரூபாய்கள் மட்டுமே பெறக்கூடிய எம்மால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் மேலதிக உடலை அகற்ற எவ்வாறு வைத்தியரை நாடுவது என கவலை தெரிவித்துள்ளனர்.