Sunday, February 27, 2011

நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்.


ஒளிக்கதிர்கள் விழியின் முன் பகுதியான கார்னியா எனப்படும் விழி வெண்படலம், விழி ஆடி ஆகியவை மூலம் விழித்திரையில் குவிக்கப்படுகிறது.
விழித்திரை ஒளி சக்தியை மின் சக்தியாக மாற்றி உணர்வலைகளை பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு செலுத்துகிறது. எனவே விழித்திரையின்றி பார்வை சாத்தியமாகாது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழித்திரையினை நீரிழிவு நோய் அதிகம் பாதிக்கிறது.
நீரிழிவு நோயால் கண்களில் கண்புரை, கண்நீர் அழுத்த நோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. விழித்திரை பல்வேறு ரத்த குழாய்களின் மூலம் ஊட்டச் சத்தை பெறுகிறது. நீரிழிவு நோயால் ரத்த நாளங்கள் பலவீனமடைகின்றன. பலவீனமடைந்த ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட்டு விழித்திரையும், அதன் மூலம் பார்வையும் வெகுவாக பாதிப்படைகிறது.
விழித்திரையின் குழிவான பகுதி மையப்பகுதி மேக்குலா எனப்படும். இந்த பகுதியில் ஏற்படும் ரத்த கசிவு முழுமையான பார்வை இழப்பை கூட ஏற்படுத்தலாம். விழித்திரையில் ஏற்படும் ரத்த கசிவினால் ஊட்டச்சத்துக்கள் விழித்திரையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையாது.
எனவே விழித்திரையானது தானே சில புதிய ரத்த நாளங்களை உருவாக்கும். இவை மிகவும் பலவீனமானதாக இருக்கும். அதோடு அதிகப்படியான ரத்த கசிவுக்கும் வழிவகுக்கும். இந்நிலை ப்ரோலிபரேட்டிவ் டயபடிக் ரெட்டினோபதி எனப்படும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை விட பார்வையிழப்பு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 25 மடங்கு அதிகம் உள்ளது. 
அறிகுறிகள்: ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட தொடங்கும் போது கண்முன்னே கரும்புள்ளிகள் மிதப்பது போன்று தோன்றும். மேக்குலா பாதிப்படையும் போது பார்வைத் திறனில் மாற்றங்கள் தெரியும். எனவே நீரிழிவு நோயாளிகள் கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இன்றியமையாதது.
பாதிப்பை கண்டறியும் முறைகள்: பார்வை திறன் பரிசோதனை மற்றும் முழுமையான விழித்திரை பரிசோதனை(ப்ளோரசின் ஆஞ்சியோகிராபி) என்ற இருவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று லேசர் சிகிச்சை, மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. இந்த இரு முறைகளும் பார்வையிழப்பை தடுக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF