Sunday, February 20, 2011

சிட்டுக் குருவி வடிவில் உளவு விமானம்.


பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது.
நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.
இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. இந்தச் சிறு இயந்திரக் குருவி திறந்த சாளரங்களுடாகவும் நுழையக் கூடியது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும். சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF