Monday, February 7, 2011

எகிப்து ஜனாதிபதி முபாரக்கை ஜெர்மனி கொண்டு வர திட்டம்.


எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை ஜெர்மனி கொண்டு வரும் திட்டமிருப்பதாக அமெரிக்காவில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 25-ம் திகதி முதல் எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் எகிப்தில் தடைசெய்யப்பட்ட சகோதரத்துவம் அமைப்பும் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
30 ஆண்டுகாலம் முபாரக் ஆட்சியில் நாடு எந்த வித சுபிட்மும் பெறவில்லை. வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி தலைதூக்கி இருக்கிறது என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
14 வது நாளாக எகிப்து தாகிர் சதுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். இந்த நிலையில் முபாரக் பதவியை விட்டு விலக வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் ஹோஸ்னி முபாரக்கை ஜெர்மனி கொண்டு வருவது என்றும், பின்னர் எகிப்தில் ஆட்சி மாற்றம் மேற்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என போலியான செய்திகள் வெளியாகி உள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF