ஆரோக்கியம் வேண்டுபவர்கள் சர்க்கரையை அறவே தவிர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இதற்கு பதிலாக கலோரிகள் குறைவாக கொண்ட மாற்று சர்க்கரையை பயன்படுத்தலாம் என்கிறார்கள் அவர்கள்.
மாற்று சர்க்கரை இனிப்பை வழங்கினாலும், சர்க்கரை அளவுக்கு கலோரியைத் தராது. ‘சுக்ரலோஸ்’ போன்ற மாற்று சர்க்கரைப் பொருள்கள் சர்க்கரையை விட 600 மடங்கு இனிப்பு உள்ளதாகும். சுத்திகரிக்கப்பட்ட, நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு ஸ்பூன் சர்க்கரையில் (3 கிராம்) 16 கலோரிகள் உள்ளது.
ஒரு நாளைக்கு மூன்று முறை சர்க்கரைக்கு பதிலாக ‘சுக்ரலோஸ்’ மாற்றுச் சர்க்கரையை உபயோகித்தால் 96 கலோரிகள் நம் உடம்பில் சேருவதை தவிர்க்கலாம். ஒரு வருடத்திற்கு 35040 கலோரிகள் (5 கிலோ) நம் உடம்பில் சேருவதை தவிர்க்க முடியும். இந்த கலோரிகள் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம். ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி, ஆண்களில் 32% பேர் அதிக எடையுடனும், பெண்களில் 50 % பேர் அதிக எடையுடனும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் உடற்பருமன், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்றவற்றை தவிர்க்கலாம்.உங்கள் கால் முட்டியை மடக்காமல் குனிந்து, கையால் உங்கள் காலைத் தொட முயற்சியுங்கள். முடியவில்லையா, உங்கள் சர்க்கரைப் பழக்கத்தை மாற்ற இதுவே சரியான தருணம்.