குடியிருப்பு பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகளால் மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான நகரங்களின் குடியிருப்புகள் அருகே சில பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. அவற்றால் மனிதர்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படும். குறிப்பாக புற்று நோய் உருவாகும் ஆபத்து உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள முர்சியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மார்தா டோவல் என்பவர் தலைமையிலான குழுவினர் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது பெட்ரோலில் உள்ள இரசாயன பொருட்களால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெட்ரோலில் உள்ள பென்சீன் இரசாயன மூலக்கூறினால், ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். பென்சீன் மூலக்கூறுகள் பெட்ரோல் பங்குகள் உள்ள இடத்தில் இருந்து 100 மீற்றர் சுற்றளவு பரவுகின்றன. எனவே குடியிருப்பு பகுதியில் இருந்து குறைந்தது 50 மீற்றர் தூரத்திலாவது பெட்ரோல் பங்க்குகள் இருப்பது அவசியம் என இந்த ஆய்வறிக்கை தெரிவித்தள்ளது.