Sunday, February 13, 2011

இன்றைய செய்திகள் 13/02/2011


Mp3 தொலைபேசிகளால் கேட்கும் திறனுக்கு பேராபத்து! இலங்கை நிபுணர்கள் எச்சரிக்கை.

நவீன MP3 கைத்தொலைபேசிகளால் கேட்கும் திறன் குறைவு அடைகின்ற பேரபாயம் காணப்படுகின்றது என இலங்கையின் தொழிநுட்ப அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்து உள்ளது. 

இக்கைத்தொலைபேசிகளை தொடர்ந்து உபயோகிக்கின்றமையால் கேட்கும் திறன் குறைவடைந்து செல்கின்றது என அமைச்சைச் சேர்ந்த துறை சார் நிபுணர்கள் எச்சரித்து உள்ளார்கள். 

இவ்வாறான மின்னியல் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றமை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது என்றும் சுட்டிக் காட்டி உள்ளார்கள். 

குறிப்பாக மலிவு விலையில் உள்ள இவ்வாறான உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றமைக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன என்பது குறித்து பொதுமக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்கள். 

இலங்கையில் 14 மில்லியன் மக்கள் கைத்தொலைபேசிகளை உபயோகிக்கின்றனர். 

இவ்வாறான மின்னியல் உபகரணங்களை உபயோகிக்கும் போது ஒலியின் அளவை 50 சதவீதத்தை விட குறைத்து கேட்கும்படியும் பரிந்துரை செய்துள்ளார்கள்.

மன்னாரில் எண்ணெய் அகழ்வு: சீனா, இந்தியா, ரஷியா கடும் போட்டி!

மன்னார் கடல் பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்தில் இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி தொடர்கின்றது. மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளது என அறியப்பட்டுள்ள பகுதிகளை அரசு எட்டுத் துண்டங்களாகப் பிரித்து உள்ளது. 
இவற்றில் ஒவ்வொரு தனித் தனி துண்டங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. 

இந்திய அரச நிறுவனமான ‘கெய்ன் இந்தியா‘ என்கிற நிறுவனத்துக்கு ஒரு துண்டம் வழங்கப்பட்டது என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது என தற்போது வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. ஏனைய துண்டங்களை விரைவில் அனைத்து உலக மட்டத்தில் ஏலத்தில் விற்க அரசு திட்டம் இட்டு உள்ளது. 

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ரஷியா சென்றிருந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில் மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு ரஷியா விருப்பம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மன்னார் கடல் படுக்கையில் எஞ்சியுள்ள எண்ணெய் அகழ்வுத் துண்டங்களுக்கு அனைத்துலக அளவில் கேள்வி பத்திரம் கோரப்படும்போது இந்தியா, சீனா, ரசியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் போட்டியில் இறங்க உள்ளன. 

இவை ஒரு புறம் இருக்க இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட துண்டத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபட உள்ளன. இப்பணிகளுக்காக ஆழ் துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து உள்ளது.

சுவிஸில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து பேர் பலி.
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தென் சுவிட்சர்லாந்தின் மலைப் பகுதிகளில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், தனியார் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது எனவும் குறிப்பிடப்படுகிறது.ஜெனீவாவிலிருந்து புறப்பட்ட குறித்த விமானம், Lausanne சென்று பின்னர் Sion நோக்கிப் பயணித்த போது விபத்துக்குள்ளானது.விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஹொஸ்னி முபாரக்கின் சொத்துக்களை முடக்குவதற்கு தீர்மானம்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் சொத்துக்களை முடக்குவதற்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஹொஸ்னி முபாரக் சுவிட்சர்லாந்தில் ஏதேனும் சொத்துக்களைப் பேணியிருந்தால் அவற்றை முடக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹொஸ்னி முபாரக் அல்லது அவரின் உறவினர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் சொத்துக்களைப் பேணி வருகின்றனரா என்பது தெடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்தின் பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை சுவிட்சர்லாந்து ஏற்றுக் கொள்ளாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாக்., மாஜி அதிபர் முஷாரப்புக்கு கைது வாரண்ட் : பெனசிர் கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு.

பாகிஸ்தானில் எல்லாமே முஷாரப்தான் என்ற யுகத்தில் இருந்த போது எதிர்கட்சியாக இருந்து செயல்பட்ட பெனசிர் பூட்டோ கொல்லப்பட்ட வழக்கில் இவருக்கும் உரிய பொறுப்பும், தொடர்பும் இருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டின்படி இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். 


கடந்த 2007 ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தல் பிரசாரத்தில் பெனசிர்பூட்டோ தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலை உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலையை திக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பினர் செய்தனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. ஐ.நா., மேற்பார்வையில் நடந்து வரும் விசாரணையில் முஷாரப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் இவரது ஆட்சிக்காலத்தில் இவர் முறையான பாதுகாப்பை செய்யவில்லை என்றும், இதனால் பயங்கரவாத அமைப்பினருடன் மறைமுக தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் முஷாரப் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்து. 


ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை அதிகாரிகள் கோர்ட்டில் முறையிடுகையில், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முஷாரப் முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை, இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் பிப்., மாதம் 19 ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்டார். முஷாரப் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது: ஆராய்சித் தகவல்.
உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர்.
நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.
இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு   கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகுதிகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தையும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரிகள் கூறியதாவது: மரப் பெருஞ்சுவர் பற்றி சீன வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. அது உண்மைதான் என தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவின் வடகிழக்கில் லயோனிங் மாகாணத்தில் டாண்டோங் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஓக் மரத்தை பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில்(கி.பி. 1368 – 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டது. பின்னர் மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடங்களில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

செருப்புகளில் இந்து கடவுள் படம் : மலேசியாவில் கடும் கொந்தளிப்பு.

செருப்புகளில் இந்து கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு, மலேசியாவில் உள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மலேசியாவில் உள்ள சில கடைகளில், இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட செருப்புகள் விற்பனை செய்யப்படுவதாக, அங்கு வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இதனால், அங்குள்ள இந்து அமைப்புகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன. 


இதுகுறித்து மலேசிய இந்து சங்க தலைவர் மோகன் ஷான் கூறுகையில், 


"இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளது. இதுபோன்ற செருப்புகள் இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என, வர்த்தக அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளோம்' என்றார்.மலேசியாவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலின் தலைவர் நடராஜா கூறுகையில், "இந்து கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட செருப்புகள், உடனடியாக கடைகளில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராணுவத்தினரின் புதுவகை லேசர் தொழினுட்பம்.
அமெரிக்க இராணுவத்தினரின் புதிய லேசர் தொழினுட்பதால் விண்ணில் பறந்தது கொண்டிருக்கும் விமானத்தை தாக்க வரும் ஏவுகணையை விண்ணிலேயே தாக்கியளிகலாம்.
இதை அந்த விமானத்தில் பணிபுரியும் பொறியியலாளரால் தாக்க வரும் ஏவுகணையின் தரவுகள் கணிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கருவியினால் அலைகள் பாய்ச்சப்பட்டு அதை தகர்க்கலாம். இது தற்போதைய சர்வதேச நெருக்கடிக்கு தீர்வாக அமையலமேன்று கூறபடுகிறது.


விண்டோஸ் சிஸ்டத்தில் புதிய போன் தயாரிப்பு.


கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவன ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட போன்கள் அதிகரித்து வரும் நிலையில்,  அவற்றுடன் போட்டியிடும் வகையில் மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் நோக்கியா சேர்ந்துள்ளது.இன்டர்நெட் பிரவுசிங், சமூக இணையதள தொடர்பு உட்பட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட போன்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
மேலும் ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து வருவதாலும் இதன் விற்பனை உயர்ந்துள்ளது. அதை பயன்படுத்தி கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. பெரும்பாலான நிறுவனங்கள் இதை பயன்படுத்தி செல்போன்கள் தயாரித்து வருகின்றன.எனவே இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் செல்போன்களை தயாரிக்க நோக்கியா முடிவு செய்துள்ளது.
நோக்கியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீபன் எலோப் பொறுப்பேற்றுள்ள  நிலையில், மைக்ரோசாப்டுடன் இணைவது நிறுவனத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது சமீபத்தில்தான் செல்போன் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் கூகுளின் ஆண்ட்ராய்டு உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF