இரத்த அழுத்தத்தை அளவிடும் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் கருவி ஒன்றை லெய்செஸ்டர் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது உபயோகத்தில் இருக்கும் கருவிக்கு மாற்று கருவியாக இதை கண்டறிந்துள்ளனர். கடிகாரம் போன்ற இக்கருவியில் உள்ள சென்சார் இரத்த குழாயின் நாடித்துடிப்பு அலையை அளவிட்டு கணிக்கும் விபரங்களை பழைய தோள்பட்டை கருவி மூலம் அனுப்புகிறது.
இதன் மூலம் இதயத்துக்கு அருகிலுள்ள அழுத்தத்தை ஏயார்டா மூலம் அறியலாம். ஏயார்டா என்பது இதயத்திலிருந்து மில்லிமீட்டர் அளவு அருகில் இருப்பது. தோள்பட்டையை விட இவ்விடத்தில் அழுத்தம் அதிகம்.
ஏயார்ட்டாவின் அழுத்தத்தை அளவிட்டால் மாத்திரமே சிகிச்சை பூரணமாக இருக்கும் என்று பேராசிரியர் பிரையன் வில்லியம்ஸ் தெரிவித்தார். மூளை மற்றும் இதயத்திற்கு அருகில் உள்ள இரத்த அழுத்த அளவை அறிவது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு சிகிச்சைகளில் அவசியம்.
இது குறித்து மருத்துவர் சூன் மெங் டிங் கூறியதாவது: இந்த நோயாளிகளுக்கு தங்களின் சென்ட்ரல் ஏயார்டிக் சிஸ்டோலிக் பிரஷரை அளவிடவும், அதற்கான சிகிச்சைகளை வீட்டிலேயே செய்து கொள்ள முடியும் என்றார்.