தூக்கமின்மை அதிகக் கொமுப்பு, உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு மற்றும் இறப்பு ஏற்படக் காரணமாக அமைவது போலவே கொலோன் புற்றுநோய்க்கு காரணியாக உள்ளது என கண்டறிந்துள்ளனர்.
யுனிவர்சிடி ஹாஸ்பிடல் கேஸ் மெடிக்கல் சென்டர் மற்றும் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிடி ஸ்கூல் ஆப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளில் இரவில் ஏழுமணி நேரம் உறங்குபவர்களைக் காட்டிலும் ஆறுமணி நேரம் உறங்குபவர்களுக்கே 50 சதவீதம் கொழுப்பு அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவை புற்று நோய்க்கு காரணிகள் ஆகும்.
இந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் முதன்மை ஆய்வாளரான மருத்துவர் லீ கூறுகையில்,"எங்களைப் பொறுத்தவரை தூக்கமின்மை இருப்பது பற்றிய அறியவந்திருக்கும் இந்த ஆய்வு முடிவு இதுவே முதன் முறை. இது புற்று நோய்க்கு காரணமாக அமைகிறது" என்றார்.
இந்த ஆய்வில் கொலோன் புற்று நோய் தாக்கப்பட்ட நபர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தூக்க நிலைப் பற்றியும், தூக்கத்திலுள்ள சிரமங்கள் பற்றியும், எவ்வளவு நேரம் இரவில் தூங்குகின்றனர் என்பது பற்றியும் கேட்கப்பட்டது. இதன் மூலம் புற்று நோய் உள்ளவர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகின்றனர் என தெரிய வந்துள்ளது. மேலும் ஆண்களுக்கே பெண்களைக் காட்டிலும் இக்குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கத்தை அதிகரிப்பது மற்றும் நன்றாக உறங்குவதற்கான முயற்சிகள் இந்த புற்று நோய்க்கு நல்லதல்ல என மருத்துவர் லீ கூறினார். மேலும் குறைவான தூக்கமின்மை எவ்விதத்தில் கொலோன் புற்று நோயை உருவாக்குகிறது என கண்டறியப்பட்டாலும், குறைவான தூக்கத்தால் மெலாடொனின் என்ற ஹார்மோன் உற்பத்திக் குறைபாடு ஏற்படுகிறது. இதுவே தூக்கமின்மைக்கும், புற்று நோய் வளர்ச்சிக்கும் காரணமாகிறது என்கிறார்.