Sunday, February 27, 2011

இன்றைய செய்திகள்.


கூலிப்படையை அழைத்து வந்து சொந்த மக்களை தாக்கிய கடாபி! அமெரிக்கப் பத்திரிகை அதிர்ச்சித் தகவல்.

லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க, அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார். 

அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை அடக்க, கடாபி வித்தியாசமான ஒரு வழியைக் கையாண்டார். அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களை வரவழைத்து, அவர்களின் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து, தன்னை எதிர்க்கும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும்படி கூறினார். இதற்கு லிபியா ராணுவமும் உதவியது. இந்த கூலிப்படையினரில் சிலர், அல்பைடா நகரில் மக்களுடன் மோதலில் ஈடுபட்ட போது, அவர்களில் 200 பேரை மக்கள் சிறைபிடித்தனர்.

சிறை பிடிக்கப்பட்ட அவர்கள், அல்பைடாவின் ஷெகட் பகுதியில் பள்ளி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து விடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "டைம்' நாளிதழ், இவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது:

மொத்தம் 325 பேர், அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து திரட்டப்பட்டு, லிபியாவின் தென் மேற்கில் உள்ள சபாநகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, கடாபி கட்சியின் இளைஞர் அணி பிரிவு தலைவர் அலி உஸ்மான் என்பவர், டிரிபோலியில் நடக்க உள்ள கடாபி ஆதரவு பேரணிக்கு அழைத்து செல்வதாக அவர்களிடம் கூறியுள்ளார். பின் அவர்கள் அனைவரும் ஒரு விமானம் மூலம் டிரிபோலிக்கு புறப்பட்டனர். 

விமானம் சென்ற இடமோ, லபார்க் என்ற நகரம். இது அல்பைடாவுக்கும், டெர்ணாவுக்கும் இடையில் உள்ளது. கடந்த 16ம் தேதி, அல்பைடாவில் நடந்த கடாபி ஆதரவு போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

அப்போது ராணுவம், ஆப்ரிக்கர்களின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து, "நீங்கள் அனைவரும் கூலிப்படையினர் என்று எதிர்ப்பாளர்கள் நினைத்து உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். தற்காப்புக்காக அவர்களை தாக்கி பிழைத்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டது.

இந்தச் சண்டை நடந்து இரு நாட்கள் கழித்து 18ம் தேதி ராணுவப் பிரிவு, பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டது. அப்போது, கூலிப்படையினரிடம் லிபியா ராணுவத்தினர், "உயிர் பிழைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து சென்றுவிட வேண்டும். 

இல்லையெனில், கொல்லப்படுவீர்கள்' என்று பீதியூட்டியது. ராணுவம் சொன்னபடி சிலர் தப்பித்தனர். 200 பேர் மாட்டிக் கொண்டனர். முதலில் பிடிப்பட்டவர்களில் 15 பேர் அல்பைடாவில், கோர்ட் வாசலில் பொதுமக்களால் தூக்கில் இடப்பட்டதாக, கடாபி அமைச்சரவையில் இருந்து வெளியேறிய முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமது அப்த் அல் ஜலீல் தெரிவித்தார். 

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம், சாட் மற்றும் நைஜர் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் சிலர் லிபியாவில் பிறந்து, சாட் மற்றும் நைஜரில் குடியேறியுள்ளனர்.பலர் அந்த நாடுகளை சேர்ந்தவர்கள். சிலர் கடாபி மகன் கமீசின் ராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள்.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

என்னை பின்பற்றாவிட்டால் முழு லிபியாவையும் எரித்துவிடுவேன்: கடாபி
போராட்டங்களை உடனே கைவிடாவிட்டால் லிபியா முழுவதையும் எரித்து அழித்து விடுவதாக லிபிய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.தொலைக்காட்சியொன்றில் திடீரென தோன்றிய கடாபி எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும் தன்னை பதவியிலிருந்து விலக வைக்க முடியாதெனவும், எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

தன்னோடு இணைந்து ஆர்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர ஒத்துழைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதேவேளை லி�பியா�வி�ல் இடம்பெற்றும் வரு�ம் �ஆர்ப்பாட்டங்களை வ�ன்முறையா�ல் ஒடுக்க முயல்வதை அந்நாட்டு அரசு கை�விட வே��ண்டு�ம் என கடாபியை ஐ�க்�கிய நாடுக�ள் சபை வ�லியுறு�த்�தியு�ள்ளது. �

�லி�பியா�வி�ல் ஏ�ற்ப�ட்டு�ள்ள �கிள�ர்�ச்�சியை அடு�த்து ஐ.நா. பாதுகா�ப்பு சபையின் கூ�ட்�ட�ம் நடைபெ�ற்றது. இ�க் கூ�ட்ட�த்த�ி�ல் பேச�ிய ஐ.நா. பொது�ச் செயல�ர் பா�ன் �கீ� மூ�ன், இதுவரை நடைப�ெ�ற்ற கலவர�த்த�ி�ல் 1000� பே�ர் கொ�ல்ல��ப்ப�ட்டு�ள்ளன�ர் எ�ன்றா�ர்.

இதுபோ�ன்று சொ�ந்த ம�க்களு�க்கு எ�திரான வன்முறையை �லி�பியா அரசு கை�விட வே�ண்டு��ம் எ�ன்று அவ�ர் வ�லியுறு�த்�தியு�ள்ளா�ர். மேலும் அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், உறுதியான நடவடிக்கைகள் அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.




பெண் விமானியைக் கண்டு அலறிய பயணிகள்!

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது. 

காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர். 

பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர். 

இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.

இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.


தொடர்ந்து 3 நாட்கள் இன்டர்நெட்டில் விளையாடியவர் பரிதாப மரணம்!

சீனாவில் இண்டர்நெட் மீது பைத்தியமாக இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டத் தட்ட 3 கோடி சீனர்கள் இந்த இண்டர்நெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர். 30 வயதான சீனர் ஒருவர் தொடர்ந்து 3 நாட்களாக இண்டர்நெட் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார். அவர் தூங்காமலும் சரியாக உண்ணாமலும், அந்த விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார். 


கடைசியில் அவர் மயங்கி விழுந்தார். அவர் கோமாவில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிறகு அவர் சுய நினைவு திரும்பாமலேயே இறந்து போனார். அவர் கடந்த ஒரு மாத காலத்தில் இண்டர்நெட் விளையாட்டில் ரூ.75 ஆயிரம் செலவிட்டார். பொலிஸார் அவர் பயன்படுத்திய கம்பியூட்டரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நைஜீரிய மதக் கலவரத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட 18 பேர்!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பெருமளவு வசிக்கின்றனர். 


இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பெல்லே என்ற கிராமத்துக்குள் ஒரு கும்பல் புகுந்து அங்குள்ள மக்களை சரமாரியாக வெட்டியது. 


இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் மீண்டும் பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கு ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கடாபியின் அடக்குமுறைக்கு விரைவில் பதிலடி! ஒபாமா.

லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள அதிபர் கடாபியின் அரசுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் அடக்கு முறைக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும், ஒருமித்த வகையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக, அதிபர் பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இதனால், லிபியா மக்கள் மீது அதிபர் கடாபியின் நிர்வாகம், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராணுவத்தினரும், கடாபியின் ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

விமானங்கள் மூலமும் குண்டு வீசப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சொந்த நாட்டு மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, ரத்த ஆறு ஓடச் செய்யும் அதிபர் கடாபிக்கும், அவரது நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடாபிக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

லிபியாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. 
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தண்டிக்கும் நடவடிக்கையில் அதிபர் கடாபியின் அரசு இறங்கியுள்ளது. இந்தச் செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. நாகரீகமற்ற செயலும் கூட. லிபியா அரசின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு,தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என, உலக நாடுகள் அனைத்தும் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். 

லிபியா மக்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். லிபியாபில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி எனது நிர்வாகத்தையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மற்ற கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து நல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற உலக நாடுகளைப் போல, லிபியா அரசும் வன்முறைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்க வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். 

இதுவரை கடமைகளைச் செய்யத் தவறியமைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இதற்கிடையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும்' என்ற தனது வேண்டுகோளை லிபியா அதிபர் கடாபி நிராகரித்ததற்கு ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய மூன் கூறியதாவது: 

லிபியா அதிபருடன் நான் நீண்ட நேரம், விரிவான விவாதம் நடத்தினேன். மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இருந்தும், எனது வேண்டுகோளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை. அவர் செய்யும் செயல்கள் எல்லாம் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. லிபியா நிலவரம் மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, நிலைமையை நாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், என்றார். 

கடாபி மகள் பதவி பறிப்பு: 

லிபியா அதிபர் கடாபியின் மகளுக்கு வழங்கப்பட்டிருந்த நல்லெண்ண தூதர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா., தகவல் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி கூறியதாவது: ஐ.நா., மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், லிபியா அதிபர் கடாபியின் மகள் ஆயிஷா அல்-கடாபி, கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி லிபியாவிற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். 

எய்ட்ஸ் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல், வறுமையை ஒழிப்பதற்கான லட்சியங்களை நிறைவேற்றுதல் போன்றவை தொடர்பான ஐ.நா., வின் பணிகளில் அதிக முக்கியத்துவம் காட்டுவதற்காக ஆயிஷா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

ஆனால், லிபியாவில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகள் காரணமாக ஆயிஷாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, என்றார். இவ்வாறு மார்ட்டின் கூறினார். மீட்புப்பணியில் இந்தியக்கப்பல்: வன்முறையால் பாதித்த லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் தற்போது, பெங்காசி துறைமுகத்தை எட்டியுள்ளது. 

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: லிபியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், பாதுகாப்பாகவும், எந்த விதமான செலவும் இல்லாமல் வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்தியர்களை அழைத்து வருவதற்காக லிபியாவின் பெங்காசி துறைமுகத்திற்கு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கப்பல் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. இந்தக் கப்பலில் 1,120 பேருக்கு மேல் பயணிக்க முடியும். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.


முடக்கப்பட்ட கடாபியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!

சுவிட்சர்லாந்து நாட்டில் நேற்று கூடிய ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு, லிபியா தலைவர் கடாபிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விவகாரத்தில் உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. 


கடாபியின் சொத்துக்களை சுவிஸ் வங்கி முடக்கியிருக்கிறது. லிபியாவில் தற்போது, தலைநகர் டிரிபோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே, கடாபியின் ராணுவம் வசம் உள்ளன. பெங்காசி உள்ளிட்ட முக்கிய நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். அங்கிருந்த ராணுவப் பிரிவுகளும் மக்களுடன் சேர்ந்து கொண்டன.இந்நிலையில் நேற்று, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு கூடி, லிபியா நிலவரம் குறித்து ஆலோசித்தது. 


47 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பில், லிபியாவும் உள்ளது.ஆலோசனைக்குப் பின், மனித உரிமைகள் அமைப்பின் கமிஷனர் நவி பிள்ளை வெளியிட்ட அறிக்கையில்,"லிபியாவில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


நிலைமை இப்படியே நீடித்தால் உலக நாடுகள் ஒன்றிணைந்து, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்' என்று எச்சரித்தார்."லிபியாவில் கலவரத்தால், உணவு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இறக்குமதிக்கு வழியில்லை; இதனால் நாட்டின் உணவு வினியோகம் முற்றிலும் செயலிழந்து விடும்' என்று, ஐ.நா., உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று "நேட்டோ' அமைப்பும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலும் லிபியா நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்தின. 


பாதுகாப்பு கவுன்சிலில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து, லிபியா மீது ராணுவ நடவடிக்கை, பொருளாதாரத் தடைகள், சர்வதேச கோர்ட்டில் லிபிய தலைவர்கள் மீதான விசாரணை இவற்றை வலியுறுத்தி, ஒரு தீர்மானம் கொண்டு வந்தன. 


ஆனால், இத்தீர்மானம் அடுத்த வாரம் தான் ஓட்டெடுப்புக்கு விடப்பட உள்ளது.கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் லிபியாவை விட்டு வெளியேற தடை விதிக்கும்படி, ஜெர்மனி கேட்டுக் கொண்டுள்ளது. முக்கிய நகரங்களான மிஸ்ரட்டா மற்றும் ஜுவரா இரண்டும், தற்போது எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டன. அஜ்தாபியா நகர ராணுவம், எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டது. 


சொத்து முடக்கம்: கடாபியின் சொத்துக்களை முடக்கியுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.ஆனால், கடாபிக்கு அந்நாட்டில் சொத்துக்களே இல்லை என்று மறுத்துள்ள லிபியா அரசு, சுவிட்சர்லாந்து மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளது. பிரிட்டன் அரசும், கடாபியின் லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.


ஒட்டு மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2 சதவீதம். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெய், "சுவீட் குரூட்' என்பதாகும். அதாவது கந்தகக்கலப்பு குறைவு. அதனால், சுத்திகரிப்பில் அதிக பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் என்பதால் விலையும் சற்று கூடுதலாகும். தற்போது, லிபியாவின் உற்பத்தி பாதிப்பை சவுதி அரேபியா பூர்த்தி செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜப்பானில் உற்பத்தியாகும் சதுரவடிவ தார்ப்பூசணிக்காய்கள்!


தர்ப்பூசணிகள் வழமையில் வட்ட வடிவிலேயே காணப்படும். ஆனால் ஜப்பான் நாட்டில் சதுர வடிவிலேயே தர்ப்பூசணிகளினை
உற்பத்திசெய்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்றால், சதுர வடிவிலான கண்ணாடி பெட்டிகளில் தர்ப்பூசணிகளினை வளர்ப்பதன் மூலமாகும். சதுர வடிவிலான தர்ப்பூசணிகளினை குளிர்சாதனப் பெட்டிகளில் இலகுவாக வைக்கக்கூடியதாக இருப்பதுடன், அவற்றுள் அதிக பொருட்களினையும் உள்ளடக்க முடியும். ஜப்பானில் சதுர வடிவ தர்ப்பூசணிகளின் விலையானது($82), வழமையான வட்ட வடிவிலான தர்ப்பூசணிகளின் விலையினை($15-20 ) விடவும் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூளையில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப செயற்படும் கை! அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.


மூளையில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப செயற்படக்கூடிய பலம் மிக்க செயற்கைக் கரங்கள் அமெரிக்காவில் நடக்கும் செயற்கை அவயவங்கள் சம்பந்தமான ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கரங்கள் அவற்றைச் செயற்படுத்துபவரின் எண்ணங்களுக்கு ஏற்ப செயற்படும். இவற்றுக்கு ஒரு வகையான சரும உணர்வும் உள்ளது.2002ம் ஆண்டில் அமெரிக்க டாக்டர் டொட் குயிக்கன் இந்த செயற்கைக் கரங்களை உருவாக்கினார். அன்று முதல் இதுவரை சுமார் 50 பேருக்கு இவை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
இவர்களுள் அநேகமானவர்கள் படைவீரர்கள். ரோபோக்களில் பயன்படுத்தப்படும் மூளை சைகைகளை நரம்புகள் மூலம் பெற்று இவை செயற்படுகின்றன.விஞ்ஞான முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் வருடாந்த மாநாட்டில் ஈராக்கில் தனது கையை இழந்த ஒரு படை வீரர் இந்த செயற்கைக் கரத்தின் பண்புகளை விளக்கவுள்ளார்.

ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை!


மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.
சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.
இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும்.இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும்.
குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது ‘ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்’ என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது.
இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இரு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.




வானில் வண்ணங்கள் தோன்றினால் பூமிக்கு ஆபத்தா? தப்பிக்க வழி என்ன?

சூரியவெப்பக் காற்றின் மூலம் வானில் தோன்றும் பல்வேறு வண்ணங்களால், பூமிக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க வழி என்ன என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சூரியனின் வெப்ப அளவு 1750 ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு வரைபடமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக, கணக்கெடுப்புகள் உறுதி செய்துள்ளன. தற்போது 23வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சூரியன் மிக அமைதியாக இருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன. 11 ஆண்டில் முதல் ஐந்தாண்டுகள் மிதமாகவும், ஆறாம் ஆண்டிலிருந்து வெப்பத்தால் ஏற்படும் சூரியகாற்றின் அளவு உச்சமாகவும் இருக்க வேண்டும். கடைசியாக 2001 ல் சூரியகாற்று அதிக உச்சத்தில் இருந்தது. தற்போது நடக்கும் 23வது சுற்றில் 2005 முதல் 2009ம் ஆண்டு வரை சூரியன் அமைதியாக இருக்கிறது. எனவே 24வது சுற்றில் சூரியன் மூலம் பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமானது பேராற்றலாக சூரியனிலிருந்து பொங்கி பரவும். இவை சிலநேரங்களில் 50ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு “பிளாஸ்மா’ எனும் எரிமலை குழம்பு போல பரவும். ஆனால், சூரியனிலிருந்து விடுபட முடியாமல் அதைச் சுற்றி வட்ட வளையமாக மாறி விடும். இதிலிருந்து வெளியேறும் வெப்பமான ஜூவாலை நிரம்பிய காற்று (சேலார் வின்ட்) பூமியை தாக்க முற்படும். பூமியின் அமைப்பே இயற்கையாக நம்மை பாதுகாக்கிறது. பூமியில் உள்ள மின்காந்த கோளம் (மாக்னடோ ஸ்பியர்) சூரியகாற்று பூமிக்குள் வராமல் தடுக்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் வலிமை 10 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் சூரியகாற்று பூமிக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஊடுருவினால், அவை மின்சாரத்தை நேரடியாக பாய்ச்சக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை. அவ்வாறு ஏற்படுவதற்கு முன், வானம் மிக வெளிச்சமாகவும், இரவில், அதிகாலையில் பச்சை, நீல வண்ணங்களும் தெளிவாக தெரியும்.
கடந்த 1989ல் கனடாவின் “கியூபெக்’ பகுதியில் இவ்வகை மின்சாரம் (ஜீரோ கரண்ட்) பாய்ந்து “டிரான்ஸ்பார்மர்’ செயலிழந்தது. அப்பகுதியில் பச்சை, நீல வண்ணங்கள் (ஆரோமா) காணப்பட்ட பிறகே, இச்சம்பவம் நிகழ்ந்தது. தற்போது புவியின் மின்காந்த கோளத்தின் பலவீனமடைந்த பகுதி வழியாக சூரியகாற்று ஊடுருவியுள்ளது. வரும் 2012, டிச., 21ம் தேதி, 24வது முறையாக 11ஆண்டு சுழற்சி ஆரம்பிக்கிறது. கடந்த செப்., 2010ல் எடுக்கப்பட்ட படங்களில், சூரியனின் பேராற்றல் அதிகமாகி உள்ளதாக தெரிகிறது. எனவே பூமிக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வானில் வெளிச்சம் அதிகமாகி, வண்ணங்கள் தோன்றினால் சூரிய சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளது. சூரியனின் வெப்பக்காற்று நேரடியாக பூமியை தாக்கும் போது முதலில் “டிரான்ஸ்பார்மர்கள்’ தான் பாதிக்கப்படும். இவற்றை சரிசெய்ய பல மாதங்களாகலாம். இதனால் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இரவில் இருளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முக்கியமாக மனிதநேயம் குறைந்து விடுவதால், சண்டை, சச்சரவுகளாலும் அழிவு ஏற்படும். கடலில் மீண்டும் சுனாமி உருவாகும். பூமியின் தட்டடுக்குகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் பூகம்பம் ஏற்படும். இவையெல்லாம் உறுதியாக வரும் என்று கூறமுடியவில்லை.
அழிவை தடுப்பதற்கு தற்போதைய ஒரே வழி, வானில் வண்ணம் தோன்றினால், அனைத்து டிரான்ஸ்பார்மர்கள், சாட்டிலைட் இணைப்புகளை நிறுத்திவிட வேண்டும். வெப்பக்காற்றின் தாக்கம் குறையும் வரை இவ்வாறு செய்தால் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். இதுகுறித்து காந்திகிராம் கிராமிய பல்கலை இயற்பியல் பேராசிரியர் சிவராமன் கருத்தரங்கில் கூறுகையில்,”" விஞ்ஞான ஆய்வுகளின் கூற்றும், புராணத்தில் கூறப்படும் கதைக்கூற்றும் ஒரே மாதிரியாக உள்ளது. இது அப்படியே நடக்கும் என்று கூறமுடியாது. சூரியனின் வெப்பக்கதிர்களை தொடர்ந்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், சூரியகாற்றின் பேராற்றலை கண்டுபிடித்துள்ளனர். 1989லிலேயே இப்பிரச்னை தோன்றியதால், அதை சமாளிக்கும் வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்து பயப்படவும் வேண்டாம்,” என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF