Wednesday, February 16, 2011

இன்றைய செய்திகள் 16/02/2011


மன்னார் குஞ்சன்குளம் தொங்கு பாலத்துக்கு பலத்த சேதம்!

மன்னார் மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குஞ்சன்குளம் கிராமம் அண்மையில் ஏற்பட்ட அடைமழை, மற்றும் வெள்ள அனர்த்தம் போன்றவற்றால் மிகவும் சீரழிந்து போய் விட்டது. 

குறிப்பாக குஞ்சன் குளம் தொங்கு பாலம் கடுமையாக சேதம் அடைந்து விட்டது.பாலத்துக்கு மேலாக மூன்று அடி உயரத்தில் தண்ணீர் பாய்ந்து இருந்ததால் இப்பலத்த சேதம் நேர்ந்து உள்ளது.தற்போது பாலத்தின் வழியாக ஒரே ஒருவர் மாத்திரம் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடிகின்றது.

கொக்கா-கோலா தயாரிப்பின் இரகசியம் அம்பலமாகியதா?
இதுவரை காலமும் பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் கொக்கா-கோலா பானத்தின் மூலப் பொருள்கள் எவையென்ற ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க வானொலி நிலையமொன்று தெரிவித்துள்ளது.

கொக்கா- கோலாவின் தயாரிப்பு மற்றும் அதன் மூலப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இரகசியமாக பேணப்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தின் தகவல்களின் படி 1979 பெப்ரவரி 8 ஆம் திகதி வெளியாகிய 'அட்லாண்டா ஜேர்னல் கொண்ஸ்டியுசன்' என்ற பத்திரிக்கையில் நபர் ஒருவர் புத்தகமொன்றினை திறந்தவாறு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அப்புத்தகத்தில் கொக்கா-கோலா தயாரிக்க தேவையான மூலப்பொருள் மற்றும் சரியான அளவீடுகள் ஆகியவை குறிப்படப்பட்டுள்ளதாக குறித்த ஊடக நிறுவனம் அப்படத்தினை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளதுடன் இது கொக்கா-கோலாவை உருவாக்கியவரான ஜோன் பெம்பர்டன்னினுடைய குறிப்பின் நகல் எனவும் கூறுகின்றது.

இந்த பானத்தின் தயாரிப்பில் "Merchandise 7X" எனப்படும் 7 வகை திரவியங்களின் பங்கே முக்கியமாக கருதப்படுவதாகவும் இவையே கொக்கா-கோலாவிற்கே உரிய சுவையைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை மஸிசிப்பியைச் சேர்ந்த நபர் ஒருவர் 1969 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கா-கோலா நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றினையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
அக் கடிதத்தில்கொக்கா-கோலாவின் தயாரிப்பு முறையை கண்டறிந்துள்ளதாகவும் அது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அந்த நபரின் கண்டுபிடிப்பிற்கும் பத்திரிகையில் வெளியாகிய தகவல்களும் பெரும்பாலும் ஒத்துப்போவதாக அந் நிறுவனம் குறிப்பிடுகின்றது. கொக்கா-கோலா தயாரிப்பு முறை மற்றும் மூலகங்கள் தொடர்பான தகவல்களானது அமெரிக்க வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே.

The secret recipe

Fluid extract of Coca 3 drams USP
Citric acid 3 oz
Caffeine 1oz
Sugar 30 (it is unclear from the markings what quantity is required)
Water 2.5 gal
Lime juice 2 pints 1 qrt
Vanilla 1oz
Caramel 1.5oz or more to colour

7X flavour (use 2oz of flavour to 5 gals syrup):

Alcohol 8oz
Orange oil 20 drops
Lemon oil 30 drops
Nutmeg oil 10 drops
Coriander 5 drops
Neroli 10 drops
Cinnamon 10 drops.


நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் 8-வது உலக அதிசயம்.

இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
 
இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
 
தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886-ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்த ஏரி நியூசிலாந்தின் ஜியோ தெர்மல் பகுதியில் உள்ள வடக்கு தீவில் அமைந்துள்ளது. இதை தண்ணீருக்குள் மூழ்கி பார்க்க அதி நவீன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் யு.எஸ் குடியேற்ற ஏஜென்ட் சுட்டுக் கொலை.
மெக்சிக்கோவில் யு.எஸ் குடியேற்றம் மற்றும் தங்க துறை ஏஜென்ட் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து மெக்சிக்கோ நிர்வாகத்துடன் அமெரிக்க அரசு விவாதித்து வருகிறது.
இரு சிறப்பு ஏஜென்டுகள் மெக்சிக்கோ சிட்டி மற்றும் மண்டேய்ரி இடையே பணி நிமித்தமாக பயணித்த போது சுடப்பட்டனர் என அதிகாரிகள் கூறினர். ராணுவ சோதனை மையத்தில் அவர்கள் நின்ற போது கடத்தப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.
மெக்சிக்கோ சிட்டிக்கு 2௦௦ மைல்(32௦ கி.மீ) தொலைவில் உள்ள சான் லூயிஸ் போஸ்டல் பகுதியில் யு.எஸ் ஏஜென்ட் மீது துப்பாக்கி தாக்குதல் நடந்தது. மெக்சிக்கோவின் வன்முறையை கட்டுப்படுத்த தனது எல்லையில் அமெரிக்கா உரிய ஆதரவு அளிப்பதாக யு.எஸ் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் ஜேனட் நாயோ லிட்டனோ கூறினார்.
மெக்சிக்கோவில் இரண்டு சிறப்பு ஏஜென்டுக்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடந்திருப்பது மிக வேதனையைத் தருவதாக தெரிவித்தார். துப்பாக்கி தாக்குதலில் ஒரு ஏஜென்ட் இரத்த வெள்ளத்தில் இறந்தார். மற்ற ஏஜென்டுக்கு கையில் குண்டு பாய்ந்தது. தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஈரான் அரசுக்கு எதிரான போராட்டம்: ஹிலாரி கிளிண்டன் ஆதரவு.
ஈரான் தலைநகர் டெகரானில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்  ஹிலாரி கிளிண்டன் ஆதரவு தெரிவித்துள்ளார். எகிப்தில் தங்களது உரிமைக்காக மக்கள் போராடி வெற்றி கண்டுள்ளனர். அதே போன்று ஈரானிலும் போராட்டம் வெடித்துள்ளது   என  ஹிலாரி  கிளிண்டன் தெரிவித்தார்.
தலைநகர் டெகரானில் போராட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையையும் மீறி போராட்டம் நடந்த மக்கள் திரண்டார்கள். இதனால் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து சென்றனர். எதிர்கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்கள். தலைநகரை தொடர்ந்து அரசுக்கு எதிராக ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்பகனன், மாஷ்ஹட், ஷிராஸ் நகரங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த 2009-ம் ஆண்டில், ஈரான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வளர்ச்சியில் ஐப்பான் இடத்தைக் கைப்பற்றியது சீனா.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் கடந்த 42 ஆண்டுகளாக 2 ம் இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சீனா 2 ம் இடத்தைப் பிடித்தது.
கடந்த 2010 ம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களை ஜப்பான் அரசு வெளியிட்டது. ஜப்பானில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மதிப்பு 251 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 3.9 சதவீத வளர்ச்சியாகும்.
குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதமாக சரிந்தது. 2008 ல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு முதன் முறையாக பொருளாதார வளர்ச்சி சரிவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது, கடன் சுமை அதிகரிப்பு, முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஜப்பான் நாணயமான யென் மதிப்பு உயர்ந்தது ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்தன.
இதனால் கடந்த 42 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ம் இடத்தில் இருந்த ஐப்பான் அந்த இடத்தை இழந்துள்ளது. இந்நிலையில் சீன பொருளாதாரம் கடந்த ஆண்டில் 10 சதவீதம் வளர்ந்து 270 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்துள்ளது.
இதனால் முதல் முறையாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ம் இடத்தைப் பிடித்தது. எனினும் ஜப்பானியர்களின் தனிநபர் சராசரி வருமானம் 19.3 லட்சமாக உள்ளது. இது சீனாவைவிட 10 மடங்கு அதிகம்.இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. எனினும் 2025 ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனில் 5 நாளாக போராட்டம்: ஈரான்,பஹ்ரைனில் பதற்றம்.
எகிப்தில் மக்கள் புரட்சி மூலம் அதிபர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ஈரான், பஹ்ரைன், அல்ஜீரியா மற்றும் ஏமன் நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்க எதிராக தலைநகர் சனாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பல்கலை மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை நோக்கிச் செல்லும் தெருக்களில் ஏகப்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கம்பி வலைகள் குறுக்காக போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரான் மற்றும் பஹ்ரைனிலும் அதிபர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எதிர் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். எகிப்து போராட்டத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நேற்று பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதில் கலவரம் ஏற்படும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மனாமாவில் நேற்று மூடப்பட்டிருந்தன.
அல்ஜீரியாவிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இங்கு ஏற்படும் பதற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அரசு விலக்கிக் கொண்டது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF