Sunday, February 27, 2011

ஸ்மார்ட் போனின் மூலம் மரபணு தொகுப்பை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்.


பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய மென்பொருளின் மூலம் மக்கள் தங்களது ஸ்மார்ட் போனில் அவர்களது மரபணு தொகுப்பு முழு நிலையை கண்டறிய முடியும்.இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு சட்டப்படி மரபணு நிலை குறித்த ஆய்வுக்கு கட்டுப்பாடு உள்ளது. மரபணு தொகுப்பு நிலையை கண்டறியும் மென்பொருளை மேற்கு பிரான்சின் போர்டாக்சின் 4 விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த மென்பொருள் மூலம் டி.என்.ஏ சோதனை தகவல்களை பெற முடியும்.
உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாய காரணிகளை கண்டறிய புதிய மென்பொருள் முறை உதவும். குறிப்பாக பாரம்பரிய குறைபாடு காரணமாக ஏற்படும் மார்பக புற்றுநோய் நிலையை முன்கூட்டியே அறியலாம். மரபணு தொகுப்பு நிலை குறித்த மென்பொருள் உருவாக்க திட்ட நிறுவனராக பாட்ரிக் மெரேல் உள்ளார்.
இவரும், இவரது சக நிபுணர்களும் கலிபோர்னியாவில் போர்ட்டபிள் ஜீனோ மிக்ஸ் நிறுவனத்தை துவக்கியுள்ளனர். பிரான்சில் மரபணு வரிசை நிலையை மருத்துவ காரணங்களுக்காக மட்டும் ஆய்வு செய்ய மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இது குறித்து பிரான்ஸ் தேசிய முறை கவுன்சில் உறுப்பினர் பாட்ரிக் கவுட்ரே கூறுகையில்,"குறிப்பிட்ட தொழில்நுட்பம் மக்களிடம் தேவையற்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும்" என்றார்.மேலும் டி.என்.ஏ வில் பெறப்பட்ட விவரங்கள் எப்போதும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என கருத முடியாது. மருத்துவ செயல்பாடுகளை இது கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது என அவர் எச்சரித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF