Monday, February 7, 2011

ஏழ்மையான குழந்தைகளை விட நடுத்தர வர்க்க குழந்தைகளே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்: ஆய்வுத் தகவல்.


நடுத்த வர்க்க குழந்தைகள் ஏழைக்குழந்தைகளை விட பயறு வகைகளினால் உண்டாகும் ஒவ்வாமையினால் அதிக அளவு பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பணக்கார வீட்டுக்குழந்தைகளே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கதிகமான சுத்தம் மற்றும் சுகாதார சூழ்நிலை, ஆஸ்துமா மற்றும் பிற ஒவ்வாமை நோய்களை உருவாக்குகிறது என நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.
முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் அதிக அழுக்கு, சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் வாழ்ந்த போதும் கூட அதிகளவான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்தனர். கடந்த இருபதாண்டுகளில் இவ்வாறான ஒவ்வாமை நோய்களுக்குப் பலியான பிரிட்டன் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது.
ஸ்கொட்டிஷ் மற்றும் டச்சு ஆராய்ச்சியாளர்கள் பாதிக்கப்பட்ட  குழந்தைகளின் நிலவரங்களையும், விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. எவ்வாறாயினும் தற்போதைக்கு இருபத்தி ஐயாயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் இருபது வயதிற்குட்பட்ட ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒவ்வாமை நோய் சுவாசப் பிரச்சினைகளையும், சில நேரங்களில் அனபியாக்டிக் ஷொக் என்ற ஹைபர் சென்சிட்டிவ் அக்யூட் ஷொக் பிரச்சினையையும் உண்டு பண்ணுகின்றது.
2001 தொடக்கம் 2005 வரையான காலப்பகுதிக்குள் இந்நோயால் பாதிக்கப்பட்ட 400 ஜி.பி களை ஆய்வு செய்தனர். எத்தனை நோயாளிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டனர் என்பதை எடின்பர்க், மாஸ்ட்ரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது பணக்காரர்களில் ஆயிரத்துக்கு 0.76 என்ற விகிதத்திலும், ஏழைகள் 0.36 விகிதத்திலும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒவ்வாமை பற்றிய நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF