Monday, February 28, 2011

இன்றைய செய்திகள்.

ஆபத்தான விபத்துக்கள்….



துப்பாக்கி நீட்டிய கொள்ளையனை வெளியே தூக்கி வீசிய துணிச்சலான நகைக்கடைக்காரர்! 
ஒரு நகைக் கடையைக் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை கடை முதலாளி தனது கடைக் கவுண்டரிலிருந்து தூக்கி வீசும் காட்சிகள் பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளன.

பொலிஸார் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். முதலில் கடைக்குள் வந்த நபர் தனது காதலிக்கு ஒரு மோதிரம் வாங்க வேண்டும் எனக் கூறி நகைகளைப் பார்வையிட ஆரம்பித்துள்ளார். அப்போது உள்ளே வந்த இரண்டாவது நபர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்ட ஆரமபித்ததும் முதலாவது வந்த நபர் நகைகள் அனைத்தையும் சுருட்ட ஆரம்பித்துள்ளார்.

கையில் இருப்பது நிஜத் துப்பாக்கியல்ல என்பதையும், இருவரும் நண்பர்கள் என்றும் தெரிந்து கொண்ட உரிமையாளர் துணிச்சலோடு இருவரையும் அடுத்தடுத்து தாக்கி தூக்கி வெளியே வீசியுள்ளார். இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் திருடர்களை இனம் காண பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.






பெற்றோரின் கொடுமை தாங்காமல் புகலிடம் தேடி இலங்கை வந்திருக்கும் பாக். சிறுமிகள்!

பாகிஸ்தானிய சிறுமிகள் இருவர் பெற்றோரின் கொடுமைகளை தாங்காமல் தப்பி ஓடி வந்து இலங்கையில் புகலிடம் கோரி உள்ளார்கள். 

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் மூலம் இலங்கை வந்து உள்ளனர். ஆயினும் சித்திரவதைக் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றனர் சிறுமிகளின் பெற்றோர். சிறுமிகள் இருவரையும் நாட்டுக்கு உடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரி கொழும்பில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்து உள்ளனர். 

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பத்தரமுல்லையில் அமைந்து இருக்கும் சிறுவர் நீதிமன்றம் இச்சிறுமிகள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கின்றது.

வாடகை செலுத்தாமலும் வசிக்கலாம்: பிரிட்டன் நீதிமன்றம்.
நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டு நகர சபை வீடுகளில் வசித்து வரும் ஒரு பெண் வாடகைச் செலுத்தத் தவறினார் என்பதற்காக அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அவரை வெளியேற்ற முடியாது.
அவ்வாறு செய்வது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறுவதாகும் என்று ஐரோப்பிய மனித உரிமை மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரெபேக்கா பவல் என்ற பெண் நகர சபைக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். ஆயிரக்கணக்காக பவுண்களை இவர் நலன்புரி கொடுப்பனவாகவும் பெற்று வருகின்றார்.
ஆனால் இவர் வசிக்கும் வீட்டுக்கு பல மாதங்களாக வாடகைச் செலுத்தாமல் நிலுவைத் தொகை 3500 பவுண்களைத் தாண்டிவிட்டது. இவரை இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற நகர சபை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி இப்போது சட்டரீதியான தடையை எதிர்நோக்கியுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் சர்ச்சைக்குரிய மனித உரிமை சாசனத்தின் பிரகாரம் வாடகை செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஒருவரை அவர் வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என்று உச்ச நிதிமன்றம் அறிவித்துள்ளது.
இது ஏனையவர்களும் வாடகைச் செலுத்தாமல் இருப்பதற்கான ஒரு மோசமான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும் என்று நகரசபை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நேற்று இந்தத் தீர்ப்பு வெளியானது முதல் ஏற்கனவே வாடகைச் செலுத்தாத பலர் உஷார் அடைந்துள்ளனர். அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
லிபியா மீது கனடா ஆயுதத்தடை: சொத்துக்களும் முடக்கம்.
லிபியாவில் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச சமூகம் கண்டித்ததுடன் பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் லிபியா மீது விதித்துள்ள தடையை தொடர்ந்து கனடாவும் லிபியா மீது தடைவிதித்துள்ளது. இந்த தடையால் ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்படுவதுடன் சொத்து முடக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் இந்த தடை அறிவிப்பை பிரதமர் ஹார்ப்பர் வெளியிட்டார். இந்த அறிவிப்பின் போது லிபிய அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஹார்ப்பர் தொலைக்காட்சியில் விடுத்த அறிக்கையில்,"லிபியாவில் ரத்தம் சிந்தும் நடவடிக்கையை நிறுத்துவதுடன் கடாபி ஆட்சியை விட்டு விலக வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் லிபியா மீது பொருளாதார தடை விதித்தது. உறுப்பினர் நாடுகளும் கடாபி, அவரது 4 மகன்கள் மற்றும் மகளின் சொத்துகளை முடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
கடாபி குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ளவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. கடாபியின் முக்கிய உதவியாளர்கள் சொத்துகளை முடக்கவும் முடிவு செய்யப்பட்டது. லிபிய அரசுக்கு இடையேயான நிதித்தடை மற்றும் லிபியா சென்ட்ரல் வங்கி பரிவர்த்தனை தடை ஆகியவற்றை கனடா அறிவித்தள்ளது.
இந்த தடைகள் மூலம் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவியை பெற முடியாது. 192 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஐ.நா சபை, லிபியாவை உலக மனித உரிமை அமைப்பில் இருந்து நீக்கவும் முடிவு எடுத்துள்ளது.தமது சொந்த நாட்டு மக்களுக்கே கடாபி துரோகம் செய்துள்ளார் என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கூறினார்.
லிபியா மீதான தடை: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்.
லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் முமர் கடாபியை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெப்ரவரி 17 ஆம் திகதி துவங்கிய இந்த மகத்தான போராட்டத்தை ஒடுக்குவதற்கு கடாபி ராணுவத்தின் இரும்புக்கரத்தை முடுக்கிவிட்டுள்ளார். கர்னல் கடாபியின் அதிகார ஆட்சியில் ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சி நடத்தும் கடாபி பதவியை விட்டு விலக வேண்டும் மற்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தினார். மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் கடாபி ஆட்சிக்கு எதிராக தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஏகோபித்த தீர்மானம் நிறைவேறியது.
கடாபியின் சொத்துக்களை முடக்குவதுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கவுன்சிலில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மனித இனத்திற்கு எதிரான குற்றவியல் நிகழ்வுகளை கடாபி மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து லிபியா ஆட்சியாளர்கள் மீது சர்வதேச நாடுகள் தடைவிதித்துள்ளன.
லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெறுவதைக் கண்டித்து லிபியா நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்டெல் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். லிபியாவில் 3 மாதத்தில் பொதுத் தோ்தலை நடத்தும் வகையில் மக்கள் மற்றும் ராணுவத்தினரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் கூறியதாக லிபியாவில் வரும் கியூர்யனா நாளிதழில் செய்தி வெளியானது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் கூறுகையில்,"வடக்கு ஆப்பிரிக்க தேசத்தில் உணவு விநியோகம் சீர்குலைந்து போகும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தது. இறக்குமதியையே உணவு விநியோகத் திட்டம் பெரிதும் சார்ந்துள்ளது" என்றார்.
லிபியாவின் துணை ஐ.நா தூதர் இப்ராகிம் தாபஷி கூறுகையில்,"இந்த பொருளாதாரத்தடை கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அளிக்கும் தார்மீக ஆதரவு" என்றார். கர்னல் கடாபியின் அடக்குமுறைக்கு இவர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
லிபியா மக்கள் மீது, ஆயுதத் தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லிபியகுழு ஐ.நா வுக்கு கடிதம் அனுப்பியது. லிபியா மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்த தனது தூதரகத்தையும் அமெரிக்கா மூடியது.
கர்னல் கடாபியின் வட்டத்தில் உள்ள 22 தனிநபர்கள் மீது தடை விதிப்பதாக அவுஸ்திரேலியா கூறியது. அவுஸ்திரேலியாவில் நுழையவும் அது தடைவிதித்துள்ளது. அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் கெவின் ரூட்,"லிபிய மக்களுக்கு உதவும் உறுதியான ஆதரவு நடவடிக்கை இதுவாகும்"என்றார்.

நாட்டை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் கடாபி!

பதவி விலக மறுக்கும் லிபியா தலைவர் மும்மர் கடாபி மீதான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் விதத்தில், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் வெளிநாடு செல்லத் தடை, சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. தொடர்ந்து, கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். 

நாளுக்கு நாள் மோசமாகி வரும் லிபியா நிலவரம் குறித்து, நேற்று முன்தினம் ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மீண்டும் கூடியது. அதில் லிபியா மீதான பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

அத்தீர்மானம் எதிர்ப்பு இன்றி, 15 உறுப்பு நாடுகளாலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் படி, தனது அண்டை நாடுகள் அல்லது வெளிநாடுகளுடன் லிபியா ஆயுதப் பரிமாற்றம் செய்யத் தடை கடாபி, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருக்கமான உதவியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரது சொத்துக்கள் முடக்கம்; கடாபி மற்றும் அவரைச் சார்ந்தோர் லிபியாவை விட்டு வெளியே செல்லத் தடை; மனிதப் படுகொலையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, லிபியா அரசை சர்வதேச குற்றவியல் கோர்ட் (ஐ.சி.சி.,) விசாரிக்க சிபாரிசு உள்ளிட்டவை உடனடியாக அமலுக்கு வருகின்றன. 

ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி இது பற்றிக் கூறுகையில், "மக்களுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப்படுவது இந்தியாவுக்கு வருத்தம் அளிக்கிறது. அதோடு, லிபியாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா கவலைப்படுகிறது. ஐ.சி.சி.,யில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றாலும், இந்த நடவடிக்கையால் லிபியாவில் வன்முறை கட்டுப்படும் என்ற பிற நாடுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டது' என்றார். 

"உடனே வெளியேறுங்கள்' : அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி அதிபர் மார்க்கெல் ஏஞ்சலாவுடன் தொலைபேசியில் பேசிய போது,"தனது சொந்த மக்களை வன்முறையால் கொன்று குவித்துத் தான் அவர் பதவியில் இருக்கிறார் என்றால், அப்பதவியில் இருப்பதற்கான சட்டப்பூர்வ அந்தஸ்தை அவர் இழந்து விட்டார் என்று தான் அர்த்தம். அதனால் அவர் உடனடியாக லிபியாவை விட்டு வெளியேற வேண்டும்' என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தூதரகங்கள் மூடல்: ஜெர்மனி நாட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில், லிபியா அதிகாரிகளின் அனுமதியை எதிர் பார்க்க வேண்டாம் என்று ஜெர்மனி அதிபர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, லிபியாவில் இயங்கி வந்த அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டுத் தூதரகங்கள் நேற்று இழுத்து மூடப்பட்டன. 

தங்களது தூதர்கள் மற்றும் குடும்பங்களை லிபியாவில் இருந்து வெளியேற்றுவதில் அந்நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கைவிட்டார் கடாபியின் நர்ஸ் : கடாபியின் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இப்போது அவரை கைவிட்டு விட்டனர். அந்த வரிசையில் அவருக்கு மிகவும் "நெருக்கமான' பெண் நண்பரான உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த நர்சும் இப்போது சேர்ந்துள்ளார்.

கலினா கலோட்னிட்ஸ்கா (38), கடந்த ஒன்பது ஆண்டுகளாக லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ளார். அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலையில் சேர்ந்த அவரைப் பார்த்த கடாபி, தனது சிறப்பு உதவியாளராக நியமித்துக் கொண்டார்.கடாபி தற்போது பெரும் பிரச்னையில் மாட்டிக் கொண்டுள்ள சூழலில், கலினாவும் விரைவில் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பி விடப் போவதாக அவரது மகள் தெரிவித்தா
ர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF