Sunday, February 27, 2011

நிறம் மாறும் அதிசய பேனா தயாரிப்பு.


இவ்வுலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு இந்த பேனா ஒரு உதாரணம்.இதன் பெயர் கலர் பிக்கர். இதனை வடிவமைத்தவர் கொரியாவைச் சேர்ந்த ஜின்சன் பார்க். இந்த பேனாவின் சிறப்பம்சம் கலர் சென்சார் தான். அதை இயக்கும் பட்டன், தேர்ந்தெடுத்த கலரை காட்டும் பகுதி, பேனா முனை, ஆர்.ஜி.பி மையை சேமிக்கும் இடம், ஆர்.ஜி.பி சென்சார் என வியக்கத்தக்க தொழில்நுட்ப பகுதிகள் உள்ளன.
விரும்பிய கலரைப் பெற அதற்கான பொருளின் முன், கலர் சென்சாரைக் காட்டி ஸ்கேன் பட்டனை அழுத்த வேண்டும். உதரணமாக ஆப்பிள் அருகே சென்சாரை காட்டியபடி ஸ்கேன் பட்டனை அழுத்தினால் விநாடியில் ஆப்பிளின் நிறம் ஸ்கேன் ஆகி விடும்.
கலர் டிஸ்பிளே பகுதியில் அந்த கலர் தெரியும். அதன் பிறகு பேனா முனையில் எழுதினாலோ அல்லது வரைந்தாலோ ஆப்பிள் கலரில் மை வெளிவரும். ஸ்கேன் செய்யப்பட்ட கலரை ஆர்.ஜி.பி கலர் சென்சார் கிரகித்து அதே நிறத்தில் மையை மிக்ஸ் செய்து விடும்.இதனால் விரும்பும் கலரை துல்லியமாக பெற முடியும். இனி ஓவியத்தில் தேவையான கலரைப் பெற வாட்டர் கலர்களை கலந்து கொண்டிருக்க தேவையில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF