Monday, February 21, 2011

மகளுக்கு ‘பேஸ்புக்’ எனப் பெயரிட்ட எகிப்தியர்.



எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மகளுக்கு பேஸ்புக் எனப் பெயரிட்டுள்ளார்.
ஜமால் இப்ராஹிம் (20) என்ற அந் நபர்அங்கு அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டங்களை நினைவு கூறும் முகமாகவே இப்பெயரினை தனது மகளுக்கு சூட்டியுள்ளார்.அப்பெண் குழந்தையின் முழுப்பெயர் பேஸ்புக் ஜமால் இப்ராஹிம் ஆகும்.
அந் நாட்டு முன்னாள் அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பேஸ்புக் வலையமைப்பானது முக்கியமானதோர் பங்கை வகித்திருந்தது.ஆர்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டுவதிலும், செய்திகளை பரிமாறிக்கொள்வதிலும் அதன் சேவைகள் அளப்பரியதாக இருந்தன.
மத்திய கிழக்கில் உள்ள மற்றைய நாடுகளை விட எகிப்திலேயே அதிக பேஸ்புக் பாவனையாளர்கள் உள்ளனர்.அங்கு சுமார் 5 மில்லியன் பேர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளதுடன் அவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கெகை வேகமாக அதிகரித்தும் வருகின்றது.
பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேக்கினை எகிப்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பங்கிற்காக எகிப்தியர் நன்றி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF