மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 40 வீடுகள் சேதம் அடைந்தன. 19 வீடுகளில் பகுதி அளவில் சேதம் அடைந்தன.
மேற்கு அவுஸ்திரேலியாவில் தலைநகர் பெர்த்திற்கு வெளியே ஏற்பட்ட இந்த காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாத அளவில் கொழுந்து விட்டு எரிந்தது. கடந்த 2009-ம் ஆண்டு விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 173 பேர் இறந்தனர்.
இந்த துயரநாளை அனுசரிக்கும் போது, பெர்த்திற்கு தென் கிழக்கே ராயல் ஸ்டோன் பகுதியில் காட்டுத் தீ பரவியது. இரவில் ஏற்பட்ட தீயால் சேதம் அதிகமானது. மேலும் பல சொத்துக்கள் சேதம் அடையும் அபாயத்தில் இருப்பதாக தீயணைப்பு துறையினர் எச்சரித்தனர்.
கோடை கால காற்றால் இந்த தீ தீவிரம் அடைந்தது. இந்த தீ விபத்து உயிர்களுக்கும், வீடுகளுக்கும் அச்சுறுத்தல் தருவதாகவே இருந்தது. எனவே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என தீயணைப்பு துறைக்கு, அவசரநிலை ஆணையக சேவை எச்சரிக்கை விடுத்திருந்தது.
குயின்ஸ்லாந்து பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்ட சில நாட்களில் இந்த காட்டுத் தீ பரவல் நிகழ்ந்துள்ளது.