Thursday, February 17, 2011

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை.



கூகிள் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு முறையை அமைத்துள்ளது. இதற்கு 2 step verification என்று பெயர்.
குறித்த கூகிள் கணக்கினை லொகின்(Login) செய்யும் நபரின் உரிமைத்துவத்தை உறுதிப்படுத்தும் முறை தான் இது. குறித்த சேவையினை செயற்படுத்தும் போது உங்கள் தொலைபேசிக்கு ஒரு இரகசிய இலக்கம் அனுப்பப்படும்(SMS மூலம் அல்லது நேரடி தொலைபேசி அழைப்பு மூலம்).
இந்த இரகசிய இலக்கத்தினை தெரிந்தால் மட்டுமே குறித்த கூகிள் கணக்கினை திறக்க முடியும். தொலைபேசி என்பது எமது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள காரணத்தினாலேயே கூகிள் இந்த முறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. 2 step verification னை செயற்படுத்த
1. முதலில் உங்கள் கூகிள் கணக்கின் settings பக்கத்திற்கு செல்லவும்.
2. பின்னர் security பகுதியில் புதிதாக காணப்படும் இணைப்பை க்ளிக் செய்யவும்.
3. பின்னர் உங்கள் கடவுச் சொல்லினை மீண்டும் ஒரு டைப் செய்து உள்நுழைக.
இவ்வாறு செய்தால் இந்த புதிய முறைமையினை செயற்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதி உங்கள் கணக்கில் செயற்படுத்தப்பட்ட பின்னர், புதியதொரு விண்டோ(Window) கூகிள் கணக்கினை லொகின் செய்யும் போது தோற்றுவிக்கப்படும்.
அந்தப் பகுதியில் உங்கள் இரகசிய இலக்கத்தை வழங்கி உள்நுழைய வேண்டும். ஒவ்வொரு லொகின் செயற்பாட்டிலும் கூகிள் SMS மூலமோ அல்லது நேரடி அழைப்பு மூலமோ இரகசிய குறியீட்டினை அனுப்பிவைக்கும்.
நீங்கள் விரும்பினால் அந்த இரகசிய இலக்கத்தை குறித்த கணணியில் 30 நாட்களுக்கு ஞாபகம்(Remember) வைத்துக்கொள்ள முடியும்(இது தனிப்பட்ட கணணியை பாவிப்பவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்).
இங்கு நீங்கள் இரண்டு தொலைபேசி இலக்கங்களை உபயோகிக்கும் வசதியும் காணப்படுகிறது. அதாவது முதலாவது தொலைபேசி தொலைந்து போகுமிடத்து Backup தொலைபேசியாக அடுத்த தொலைபேசியை பாவிக்க முடியும். இந்த Backup இலக்கத்தினை தேர்வு செய்யும் போது உங்களுக்கு நெருக்கமான இன்னொருவரின் இலக்கத்தை வழங்குவது மிகச் சிறந்தது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF