உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
அதற்கு இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தும் நிரல்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக இருக்கும்.
2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.
இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில்(menu) File தேர்ந்தெடுத்து, பின் Add a Password என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்.