இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது.
புதிய தொடர்கள் ரூ.20 , ரூ.50, ரூ.100 , ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 பெறுமதி கொண்ட நாணயத்தாள்களாக உள்ளடக்கின்றன . ஒவ்வொரு தாளும் முன்பக்கம் நாட்டின் சுபீட்சத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளத்தைச் சித்தரிக்கிறது.
இரண்டு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன: வீடுகளும் மரங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இரண்டு குளங்கள் அதிகளவான வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்துள்ளதுடன், வீடுகளும் மரங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அநுராதபுர மாவட்டத்தின் கெபிதிகொல்லாவ பிரதேசத்திலுள்ள குளம் ஒன்று உடைப்பெடுத்ததில் ஐம்பத்தி ஐயாயிரம் ஏக்கர் கன அடி நீர் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தென்னை மரங்கள் கூட நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அப்பகுதியில் வெள்ளத்தின் மத்தியில் தற்போதைக்கு சுமார் நானூறு பொதுமக்கள் சிக்குண்டுள்ளனர் எனவும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
அதற்கடுத்ததாக திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தை அண்மித்த ஆரியமங்கேணி குளத்தின் பாதுகாப்பு அணை உடைப்பெடுத்துள்ளதால் அப்பிரதேசமும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. அதற்கு முன்பே அப்பிரதேசத்தில் கடும் வெள்ளம் காரணமாக அப்பிரதேசத்தை அண்டிய மூதூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்குமான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது ஆரியமங்கேணி குளத்தின் வெள்ள நீரும் மூதூரை அண்மித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் காரணமாக மூதூர் நகரம் முற்றாக நீரில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
என்மீது குறைகூறினாலும் நாட்டை காட்டிக் கொடுக்காதீர்கள்: ஜனாதிபதி மஹிந்த.
எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் கூறுங்கள், ஆனால் தாங்கள் பிறந்த நாட்டுக்கு துரோகம் இழைக்காதீர்கள். எமது நாட்டை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுக்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
மொனராகலை புத்தலவில் 5 ஆவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் ஆரம்ப விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:
'சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த வரலாறு இந்த ஊவா வெல்லஸ்ஸ பிரதேச மக்களுக்கு உண்டு. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இம்மண்ணில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது.
இப்பகுதிக்கு அருகில் கிழக்கில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை மாகம்புரை துறைமுகத்திற்கு முதலாவது கப்பல் அண்மையில் வந்தது.
இப்பகுதிக்கு அருகில் கிழக்கில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை மாகம்புரை துறைமுகத்திற்கு முதலாவது கப்பல் அண்மையில் வந்தது.
இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் மூலம் கிராமங்கள் நாட்டிலும் உலகிலும் பிரபல்யமாகி வருகின்றன. கொழும்பிலுள்ள சிலருக்கு இக்கிராமங்களின் பெயராவது தெரியுமா என்பதும் சந்தேகமே.
முன்னர் கிராம மக்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வேண்டுமானால் கொழும்புக்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்னும் சில நாட்களில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் இங்கு வந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இப்போட்டிகளை பார்வையிட்டால் மாத்திரம் போதாது. இங்கிருந்தும் அத்தகைய வீரர்கள் உருவாக வேண்டும்.
முன்னரும் இதுபோன்ற சில 'உதா கம்' விழாக்கள், களியாட்ட விழாக்கள் இடம்பெற்றன. ஆனால் அவ்விழா நடைபெற்ற ஓரிரு இடங்களைத் தவிர ஏனைய இடங்கள் காடாகிவிட்டன. ஆனால் நாம் வெறுமனே கண்காட்சியை மாத்திரம் நடத்தவில்லை. தேசத்திற்கு மகுடம் நிகழ்வை நடத்துவதன் மூலம் அந்த பிரதேசத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம்.
ஊவா வெல்லஸ்ஸ பகுதியை கட்டியெழுப்புவது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும். அப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எதிர்வரும் தசாப்த காலத்தில் இம்மண்ணிலிருந்து செய்மதி ஏவப்பட்டால் ஆச்சரியமில்லை. அதுதான் எமது இலக்காக இருக்க வேண்டு;ம்.
இலங்கையை வர்த்தக கேந்திர நிலையமாக கட்டியெழுப்ப வேண்டும். பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன. நாம் நாட்டை பொறுப்பேற்றபோது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்ல, சுற்றுலா பயணிகள்கூட இங்கு வரவில்லை.
உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு உரத்தை விநியோகிப்பது ஊவா வெல்லஸ்ஸ விவசாயிகள் போன்றோர் மீதான நம்பிக்கையினால்தான்.
மரக்கறி விலைகள் அதிகரித்திருந்தன. தற்போது சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளன. பம்பாய் வெங்காயத்தின் விலை குறைவடைந்தாலும் சின்ன வெங்காயத்தின் விலை குறையவில்லை தானே. விவசாயிகளுக்கும் தமது பொருட்களுக்கு சிறந்த விலையொன்று கிடைக்க வேண்டும். அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
திருகோணமலையில் மழைகாரணமாக மக்கள் பெரும்அவதிஉணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றார்கள்.
திருகோணமலையில் பெய்யும் மழைகாரணமாக மக்கள் பெரும் அவதி அந்த மக்களின் அழுகுரல்களை நீங்களும் கேளுங்கள்.
எகிப்து துணை அதிபரை கொலை செய்ய முயற்சி.
எகிப்து துணை அதிபர் ஒமர் சுலைமானை கொலை செய்ய நடந்த சதியில் அவரது மெய்காப்பாளர்கள் 2 பேர் இறந்தனர்.
எகிப்து அதிபர் முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் 12 வது நாளை எட்டியுள்ளது. அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரி போராட்டக்காரர்கள் விடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் வன்முறை அதிகரித்துள்ளது. துணை அதிபர் உமர் சுலைமானை கொல்ல முயற்சி நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் துணை அதிபர் மீதான தாக்குதல் குறித்து செய்தி வெளியிட எகிப்து அரசு மறுத்துவிட்டது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் : OMCT.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சித்திரவதைகளுக்கு எதிரான உலக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிற்கு எதிராக சுவிட்சர்லாந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பு சுவிட்சர்லாந்து அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
உள்நாட்டு சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் புஷ்ஷிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புஷ்ஷின் ஆட்சியின் கீழ் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக்கை வெளியேற்றி விட்டு சுலைமானை இடைக்கால அதிபராக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக்கை வெளியேற்றி விட்டு சுலைமானை இடைக்கால அதிபராக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
எகிப்து அதிபராக ஹோஸ்னி முபாரக். கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நோபல் பரிசு பெற்ற மொகமது எல்பராடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. போராட்டத்தில் இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, அதிபர் முபாரக் பதவி விலக போராட்டக்காரர்கள் நேற்று இறுதி கட்ட கெடு விதித்து இருந்தனர்.
போராட்டம் தீவிரம் இருந்தும் பதவி விலக முபாரக் மறுத்து விட்டார். எனவே, நேற்று மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடைபெறும் தஹ்ரிர் சதுக்கத்தில் திரண்டனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
எகிப்தில் நடைபெறும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனுமதி ஏற்படுத்த வலியுறுத்தி வருகின்றன.
பல நாடுகளில் முபாராக்குக்கு எதிராக எகிப்து தூதரகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதற்கிடையே, எகிப்தில் அமைதியை நிலை நாட்ட அதிபர் முபாராக் உடனடியாக பதவி விலக வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
அதற்கு முன்னதாக முபாராக் அரசு போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டக்காரர்களை அடக்குவதில் இருந்து ராணுவம் விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் ஒபாமா அரசு எகிப்து தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் எகிப்து ராணுவ மந்திரியை டெலி போனில் அழைத்து பேசினார். முபாரக் வெளியேறும் பட்சத்தில் தற்போது துணை அதிபராக இருக்கும் ஒமர் சுலைமான் தலைமையில் இடைக்கால அரசு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இது குறித்து கருத்து கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமா, எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் கேம்பிரிஜ் உலக சாதனை நிலைநாட்டி உள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் கேம்பிரிஜ் சாதாரண தரப் பரீட்சையில் 23 ஏ சித்திகளை பெற்று உலக சாதனை நிலைநாட்டி உள்ளார்.
இவரது பெயர் இப்ராஹிம் சஹீத். 24 பாடங்களில் 23 பாடங்களுக்கு ஏ சித்திகளைப் பெற்று உள்ளார்.
இவரது தந்தை ஒரு மின்னியல் பேராசிரியர். இப்ராஹிம் ஒரு சராசரி மாணவன் மாத்திரமே என்று சாதனைகள் நிலைநாட்டும் அளவுக்கு அபார திறமை உடையவர் அல்லர் என்றும் இப்ராஹிமின் ஆசிரியர் ஒருவர் தகப்பனுக்கு சொல்லி இருக்கின்றார். இந்நிலையில் சொந்தத் திறமையை நிரூபிக்க விரும்பினார் இப்ராஹிம். மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் படிப்பில் கவனம் செலுத்தினார்.தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும், தனித்துவமாக இருக்க வேண்டும் என்கிறார் இந்த இளம் சாதனையாளர். பாகிஸ்தானின் அணு குண்டு தந்தையான விஞ்ஞானி அப்துல் காதிர் ஹான்தான் இவரின் ஹீரோ.