ஒரே சூலில் பிறந்த குழந்தைகள் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டு இருக்கின்றமை வழமையான விடயமே. ஆனால் ஒரே சூலில் பிறந்த குழந்தைகள் ஒரே மாதிரியான திறமைகளை கொண்டு இருக்கின்றமை பேரதிசயமே.
அமெரிக்காவை சேர்ந்த மொரியா, அலன்னா, தோமஸ், பற்றிக் ஆகிய நால்வரும் ஓரே சூலில் பிறந்த ஒரே மாதிரியான திறமைகளை கொண்ட சகோதரர்கள். இவர்களது வயது 17.
மிகவும் புத்திக் கூர்மையும் உடையவர்கள். இவர்கள் அமெரிக்காவின் மென்சா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார்கள்.
இந்நிறுவனத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில் குறைந்த வயதில் மிகுந்த நுண்ணறிவுடன் பணியாற்றுபவர்கள் இவர்களே என கூறப்படுகிறது.