Wednesday, February 2, 2011

இன்றய செய்திகள்02/02/2011


ஆரோக்கியமான நிலையில் இருந்த 100 நாய்களைக் கொலை செய்த கனேடியக் கம்பனி! அதிர்ச்சித் தகவல் அம்பலம்.

பனிப் பிரதேசங்கள் ஊடாக பொருட்களை இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான நிலையில் உள்ள 100 நாய்களை பிரிட்டிஷ் கொலம்பியா கம்பனியொன்று கொலை செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா அதிகாரிகளும் சமஷ்டிப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்தக் கம்பனியின் வர்த்தகத்தில் மந்த நிலை ஏற்பட்டதாலும்,இந்த நாய்களைப் பராமரிக்க வேறு இடங்கள் கிடைக்காமல் போனதுமே இந்த நாய்கள் கொல்லப்படுவதற்குக் காரணங்கள் என்று தெரியவந்துள்ளது. 

இது சம்பந்தமாக விசாரணைக் கோவையொன்று தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊர்ஜிதம் செய்தனர். இந்தக் கம்பனியின் உத்தரவின் பேரில் பல நாய்களைக் கொன்ற ஒரு ஊழியர் அதனால் தனக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டதாகக் கூறி முறைப்பாடு செய்துள்ளார். 

அதனைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏப்பிரல் மாதத்தில் மூன்று தினங்களில் இந்த நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. பல நாய்கள் சுட்டுக் 
துப்பாக்கித் தோட்டாக்கள் தீர்ந்து போன நிலையில் கத்தியால் குத்தப்பட்டும் இன்னும் பல கொடிய முறைகளைக் கையாண்டும் இவை கொல்லப்பட்டுள்ளன. 

இந்த நாய்களுள் பல புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாரிய புதைகுழிகளும் தோண்டப்படவுள்ளன. இந்த சம்பவம் பற்றிய முழு அளவிலான விசாரணைகளுக்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்கொல்லப்பட்டுள்ளன.


பெருவெடிப்புச் சோதனைக் இயந்திர விரிவாக்கல் நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு.
கேர்ன் பெருவெடிப்புச் சோதனை இயந்திர விரிவாக்கல் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டால் இந்த பிரபஞ்ச உருவாக்கம் தொடர்பில் பல கேள்விகளுக்கு விடை காண முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரு வெடிப்புச் சோதனை இயந்திரத்தை நீண்ட காலத்திற்கு இயங்காமல் இருக்கச் செய்து பின்னர் முழு வீச்சில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் இந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் 2013ம் ஆண்டு இயந்திரத்தின் மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

கிருமி நாசினிகளாக எறும்புகளை பயன்படுத்த முடியும் : ஆய்வு.
கிருமி நாசினியாக எறும்புகளை பயன்படுத்த முடியும் என அண்மைய ஆய்வுத் தகவல் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகளினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்;கப்படுகிறது.
பயிர்ச் செய்கையை அதிகமாகத் தாக்கும் கிருமி நாசினிகளை குறித்த வகை எரும்புகள் இல்லாதொழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென் அமெரிக்காவில் காணப்படும் விசேட சிகப்பு எறும்புகளை கிருமி நாசினிகளாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐவரி கோஸ்டிலிருந்து கொக்கோவை இறக்குமதி செய்யாவிட்டால் விவசாயிகளே பாதிக்கப்படுவர் : நெஸ்ட்லே.
சர்ச்சைக்குரிய ஐவரி கோஸ்ட் நாட்டிலிருந்து கொக்கோவை இறக்குமதி செய்யாவிட்டால் விவசாயிகளே பாதிக்கப்படுவர் என உலக உணவுப் பொருள் உற்பத்தி ஜாம்பவான்களாக நெஸ்ட்லே தெரிவித்துள்ளது.
ஐவரி கோஸ்ட் நாட்டிலிருந்து தமது நிறுவனம் கொக்கோவை இறக்குமதி செய்வதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி கபாக்பூவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் கொக்கோ இறக்குமதியை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொக்கோவை இறக்குமதி செய்யாமல் நிறுத்துவதன் மூலம் ஜனாதிபதி கபாக்பூவை விடவும், அப்பாவி ஆபிரிக்க விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துனிசியாவிற்கு கண்ணீர் புகை குண்டு ஏற்றுமதி: பிரான்ஸ் ஒப்புதல்.
பென் அலியின் ஆட்சி கவிழ்வதற்கு 2 நாட்கள் முன்பாக துனிஷியாவிற்கு கண்ணீர் புகை குண்டுகள் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததாக பிரான்ஸ் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
துனிஷியாவில் அதிபர் பென் அலியின் ஆட்சி அணுகு முறையால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ம் திகதியன்று, ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை துவக்கினார்கள். மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, பென் அலி ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டார்.
அரசு மேற்கொண்ட படை பிரயோகத்தில் 147 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 500 பேர் காயம் அடைந்தததாகவும் துனிஷியாவில் உள்ள ஐ.நா மனித உரிமைக் குழுவின் தலைவர் பாக்ரே வாலி நியாயே தெரிவித்தார்.
துனிஷியாவின் முந்தய காலனி ஆட்சியாளரான பிரான்ஸ், பென் அலி ஆட்சி கவிழ்வதற்கு 2 நாட்கள் முன்பாக அந்நாட்டிற்கு கண்ணீர் புகை குண்டுகளை ஏற்றுமதி செய்தது என பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலியான் ஒப்புக் கொண்டார்.
துனிஷிய நிலவரத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டதாக, கடந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி தெரிவித்திருந்தார். துனிஷியாவின் மக்கள் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து அந்நாட்டில் இருந்த தனது தூதரை பிரான்ஸ் திரும்ப அழைத்தது. மக்களின் போராட்டத்தை எதிர் கொள்ள முடியாத பென் அலி சவுதி அரேபியாவில் அடைக்கலம் தேடியுள்ளார்.
அலி நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து துனிஷியா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. செவ்வாய் கிழமையன்று பாரிஸ் அருகே, அலிக்கு சொந்தமான குண்டு எறியும் ஜெட்டை பிரான்ஸ் பறிமுதல் செய்தது.
27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், பென் அலியின் சொத்துகளை முடக்க முடிவு எடுத்த திகத்திற்கு மறுநாள் இந்நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொண்டது.

இருதய ஆராய்ச்சிக்கு மீன்: பிரிட்டன் ஆய்வாளர்கள் சாதனை.
பிரிட்டனில் 750, 000 பேரைப் பாதிக்கும் இருதய நோயைக் குணப்படுத்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
இருதயத் தசைகளில் ஏற்படும் பிரச்சினையே இருதயக் கோளாருக்கும், மாரடைப்புக்கும் பெரும்பாலும் காரணமாக அமைகின்றது. பிரிட்டனிலும் இதே நிலை தான்.
செப்ராபிஷ் எனப்படும் ஒரு வகை நன்னீர் மீன் இனத்தைப் பயன்படுத்தி இருதய நோயைக் குணப்படுத்துவது பற்றியே தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. தனது இருதய தசைகளை தானாகவே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் இந்த மீன் இனத்துக்கு உண்டு.

மனிதர்களையும் இதே நிலைக்குக் கொண்டு வருவது தான் இந்த ஆராய்ச்சியின் இறுதி நோக்கம். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கடந்த 50 வருடங்களாக இருதய நோய்களை கண்டுபிடிப்பதிலும், குணப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் பழுதடைந்தால் அதை எப்படி குணப்படுத்துவது என்பது தான் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது, என்று இந்த நிறுவனத்தின் மருத்துவப் பணிப்பாளர் பேராசிரியர் பீட்டர் வெஸ்பேர்க் கூறினார்.

விஞ்ஞான ரீதியாக பழுதடைந்த இருதயத்தைத் திருத்துவதென்பது முடியாத ஒரு காரியமல்ல. கை, கால்கள் உடைந்தால் திருத்துவது போல் தான் இதுவும். ஆனால் அடுத்த 10 வருடத்துக்குள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள 50 மில்லியன் பவுண் தேவைப்படும் இதுதான் பிரச்சினை என்று விளக்கமளிக்கின்றார் பேராசிரியர் பீட்டர் வெஸ்பேர்க்.

செப்ராபிஷ் மீன் இனம் முழு அளவில் செயற்படும் சிறிய இதயத்தைக் கொண்டது. எனவே பழுதடைந்த இதயங்களைச் சீர் செய்யும் ஆய்வுகளுக்கு இவை பெரும் துணையாக இருக்கும் என்று இவர் மேலும் கூறினார்.

அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அதிபர் முபாரக்.
கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி செய்து வரும் ஹோஸ்னி முபாரக்கின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தலைநகர் கொய்ரோவில் உள்ள சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டதை தொடர்ந்து, அதிபர் முபாரக் மக்களின் போராட்டத்திற்கு பணிந்தார். தற்போதைய ஆட்சி காலம் வரை இருப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் நாடு வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் கொந்தளிப்பு தீவிரமடைந்தது.
சர்வதேச அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரான முகமது எல்பராடே மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். அல் அரேபியா டெலிவிஷனுக்கு அவர் அளித்த பேட்டியில், முபாரக் பதவி விலகாமல் நீடிப்பது நாட்டின் நிலைமையை குலைக்கும் என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், முபாரக்கிற்கு தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், எகிப்தில் உரிய மாற்றம் மேற்கொள்வதே அர்த்தம் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தேன் என்றார்.

அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் காணப்படாத மனித இனம்!

உடம்பெல்லாம் ஏதோ வர்ணம் பூசிய நிலையில் பிறேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இன்னும் அடையாளம் காணப்படாத மனித குலத்தின் ஒரு இனம் வாழ்வது தெரியவந்துள்ளது. 

பராகுவே, பபுவாநியுகினி, அந்தமான் தீவுகள் என்பனவற்றில் இதற்கு முன் அடையாளம் காணப்பட்டது போலவே இவர்களும் இந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மனித வர்க்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 

இவர்கள் வாழும் காட்டுப்பகுதி ஈரழிப்பான ஒரு பிரதேசமாகும். இவர்கள் கத்தி மற்றும் உலோகத்தினாலான 
செவ்விந்தியர்கள் என நம்பப்படும் 50 முதல் 100 பேர் கொண்ட ஒரு கூட்டம் இங்கு வாழுகின்றது. பெரு நாட்டுக்கும் பிறேஸில் நாட்டுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியிலேயே இவர்கள் வாழும் இடம் அமைந்துள்ளது. 

இவர்களின் வழித் தோன்றல்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்திருக்கலாம் என்றும்,வெளி உலகோடு தொடர்பற்ற நிலையில் இவர்கள் வாழ்ந்து வருவதால் பலர் நோய்களால் மரணித்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கூரிய ஆயுதங்களை வைத்துள்ளனர்.

இவர்கள் பற்றிய விவரணமொன்று வியாழக்கிழமை பிபிஸி யில் ஒளிபரப்பாகவுள்ளது. இவர்கள் வாழும் சூழல் இயற்கை வளம் கொண்டதாகவும், பழங்கள் மற்றும் மரக்கறி வகைககள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF