Thursday, February 3, 2011

இன்றய செய்திகள் 03/02/2011

ஹெய்ட்டியின் முன்னாள் ஜனாதிபதி டுவாலியுரின் சொத்துக்கள் முடக்கம்.

ஹெய்ட்டியின் முன்னாள் ஜனாதிபதி டுவாலியுரின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டுவாலியுரின் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுவிட்சர்லாந்து அமைச்சரவை, அந்நாட்டு நிதி அமைச்சரிடம் கோரியுள்ளது.
சட்டவிரோத ஆட்சியாளர்களின் சொத்துக்களை முடக்குவது குறித்த புதிய சட்டம் நேற்றைய தினம் முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டுவாலியுர் ஆறு மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமான சொத்துக்களை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சொத்துக்கள் நியாயமான உழைக்கப்பட்டது என்பதனை டுவாலியுரின் குடும்பத்தார் நிரூபிப்பதற்கு முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எகிப்திய போராட்டத்தில் புதிய திருப்பம்: முபாரக் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பு.
<p>A scene of unprecedented violence against protesters, Tahrir Square, Cairo, February 2, 2011. Reportedly, violence erupted in Tahrir Square as protesters continued massive demonstrations against ruling regime and President Mubarak. Thugs in all shapes poured into Cairo central square, on horses and camels (!), fully armed, wading through a mix of panicked and angered masses.</p>
எகிப்தில் தொடர்ந்து வரும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் புதிய திருப்பமாக ஜனாதிபதி முபாரக் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 
இதனால் அரச எதிர்ப்பு மற்றும் ஆதரவான அணிகளுக்கிடையே பயங்கர மோதல் மூண்டுள்ளது.
மேலும் இப் புதிய மோதல் சம்பவத்தில் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் போராட்டங்களில் உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அதிபர் ஒஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்துக்கு சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் முன்னாள் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான மொஹமட் எல்பராடி தலைமை தாங்கியுள்ளார்.
போராட்டங்கள் உக்கிரமடைந்து வரும் நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹொஸ்னி முபாரக் நேற்று முன் தினம் அறிவித்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதி முபாரக்கின் ஆதரவாளர்கள் நேற்று திடீர் எனப் போராட்டத்தில் குதித்தனர்.
எதிர்ப்பு அணியைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியாக அவர்களும் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஏற்கனவே, எகிப்து கலவரத்துக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் நிலையால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நீதியான இலங்கை வேண்டும் என்கிறார் ஹிலாரி!

நீதியானதும், ஜனநாயக விழுமியங்கள் நிறையப் பெற்றதுமான இலங்கை விரைவில் மலரும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்து உள்ளார். 

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே இவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

இவர் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்து உள்ளவை வருமாறு:-

"இலங்கைக்குள் அமெரிக்காவுக்கு இடையில் வரலாற்று ரீதியாக நீண்டதும், நெருக்கமானதும் ஆன தொடர்புகள் உள்ளன. இத்தொடர்புகளை வலுப்படுத்த திடசங்கற்பம் பூண்டு உள்ளோம்.போருக்கு பிந்திய இலங்கைக்கு தேவையான மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றோம். நீதி, அமைதி, ஜனநாயக விழுமியங்கள் , செழிப்பு ஆகியன நிறைந்த இலங்கையே ஒவ்வொரு இலங்கையரின் தேவையாக உள்ளது.

மஹிந்தவுக்கு புற்றுநோய். மங்கல சமரவீரவுக்கு அரச ஊடகம் எச்சரிக்கை.


மஹிந்தவுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதன் மருத்துவ சிகிச்சைக்காகவே அவர் அமெரிக்கா சென்றிருந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவே போலியான தகவலை பரப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்க சார்பு ஊடகமான லங்கா புவத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அதனை அரசியல் மயப்படுத்தும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான போலியான கருத்தை வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அந்த பத்திரிகை எச்சரித்துள்ளது.



பொம்மை வடிவிலான இரண்டு வயது குழந்தை.

அபி கிங், பிரிட்டனில் தாய் தந்தையுடன் வசிக்கும் குழந்தை. இவரின் ஆடை அலங்காரங்கள் அனைத்தும் பொம்மை போடக்கூடிய அளவிலே உள்ளன அல்லது அதைவிட சிறிது பெரிய அளவிலானவை.
இவரின் கிறிஸ்துமஸ் விருந்துக்காக வாங்கப்பட்ட வெள்ளை நிற ஆடை அதுவும் அப்படியே பொம்மை தேவதை போன்றே உள்ளது. அபிக்காக வாங்கப்படும் உடைகள் அனைத்தும் 0 - 3 மாதக் குழந்தைகளுக்கு போடப்படும் உடைகள் தான்.
அபி பிறந்த போது, ருஸ்ஸல் - சில்வர் சிண்ட்ரோம் என்ற ஒரு வகையான மரபணுக் குறைபாடு உண்டாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வகை குறைபாட்டினால் குழந்தைகள் எத்தனை வயதானாலும் சிறியதாகவே தோற்றமளிப்பார்கள்.
பொதுவாக 100,000 ஒரு குழந்தைக்கு இது போன்று நேரலாம் என மருத்துவ உலகம் கூறுகிறது. இரண்டு அடிகள் மட்டுமே இருந்தாலும் அவள் வயதுடைய குழந்தைகளை போல அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.
முதலில் அபி வளராமல் இருப்பது கொண்டு அச்சமுற்றதாகவும் பின்னர் அவள் வயதை ஒத்த குணநலண்கள் இருந்ததால் நிம்மதிப் பெரு மூச்சு விட்டதாகவும் கூறுகிறார் அபியின் தாய்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1500 கைதிகள் விடுதலை: புலிச்சந்தேக நபர்களும் 500 வரையானோர் விடுதலையாவர்.
இலங்கையின் அறுபத்தி மூன்றாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 1500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது வெலிக்கடை மற்றும் போகம்பரை மற்றும் மஹரை சிறைச்சாலைகளிலிருந்து பெருந்தொகையான கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படும் அனைத்துக் கைதிகளும் மதவழிபாடுகளில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட பின் பாற்சோறு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவ்வாறாக கைதிகள் விடுதலை செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் பெண் கைதிகளும் பெருமளவில் உள்ளடங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக் காவல் நிலையங்களிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதன்போது முன்னை நாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐநூறு போ் வரையானோர் விடுதலை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


டவர் இல்லாமல் செயல்படும் செல்போன்கள் கண்டுபிடிப்பு.

செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் செல்போன்கள் இயங்காது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும்.
ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக்ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும்.

தியத்தலாவையில் கிராமமொன்று முற்றாக நிலத்தில் புதையுண்டு போகும் அபாயம்: மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.
மத்திய மலைநாட்டின் தியத்தலாவை பிரதேசத்தில் கிராமமொன்று முற்றாக நிலத்தில் புதையுண்டு போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக எமது பண்டாரவளைச் செய்தியாளர் அறிவிக்கின்றார்.

ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவின் தியத்தலாவை கொஸ்கஹகும்புர எனும் கிராமமே நிலத்துள் முற்றாகப் புதையுண்டு போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள கிராமமாகும்.
அக்கிராமத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் நிலத்தில் வெடிப்புகளும் தோன்றியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கிருக்கும் ஐம்பது வீடுகள் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளன.
அவ்வீடுகளின் சுவர்கள் மற்றும் அத்திவாரம் என்பன வெடிப்புக்குள்ளாகியிருப்பதுடன்,  தற்போதைய நிலையில் அவற்றில் எட்டு வீடுகள் கடுமையான சேதத்துக்குள்ளாகியிருக்கின்றன.
பெரும் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள அப்பிரதேச மக்கள் தற்போது அரசாங்கத்தினால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாசமான முறையில் மந்திர ஜால வித்தை.
யப்பான் நாட்டைச் சேர்ந்த மாயா ஜால வித்தைக்காரன் ஒருவர் ஐ-பாட் ஐ பயன்படுத்தி ஏராளமான மாயா ஜாலங்களை தலைநகர் டோக்கியோவில் கடந்த முதலாம் திகதி மேற்கொண்டார்.
இவை மிகவும் புதுமையானவையாகவும், வித்தியாசமானவையாகவும் பார்வையாளர்களுக்கு பட்டன.

தெருக்களில் திரண்ட மக்கள்: எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்.

எகிப்து நாட்டில் அதிபர் ஹேஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டம் கலவரமாக மாறி கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த உமர் சுலைமான் என்பவரை துணை அதிபராக முபாரக் நியமித்தார். 

இருந்தும் கலவரம் ஓய்ந்த பாடில்லை. நேற்று தலைநகர் கெய்ரோவின் மையப் பகுதியில் உள்ள தரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். 

இதில் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் திரண்டதால் போராட்டம் வலுவடைந்துள்ளது. இதற்கிடையே ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே சாவு எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. 

3 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். கலவரம் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு உயர் கமிஷனர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார்.இதற்கிடையே எகிப்து மனித உரிமை குழுவைச் சேர்ந்த 50 உறுப்பினர்கள் நேற்று அதிபர் ஹோஸ்னி முபாரக்கை சந்தித்தனர். 

மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். பாராளுமன்றத்துக்கும் அதிபர் பதவிக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதற்கு அதிபர் முபாரக் மறுத்து விட்டார். இதுகுறித்து எகிப்து அரசின் டெலிவிஷனில் அவர் பேசினார். அப்போது நான் உடனடியாக பதவி விலகி விட்டு நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். நான் எனது எகிப்து மண்ணில் தான் உயிரை விடுவேன் என்றார். 

ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும். அதில் நான் போட்டியிட மாட்டேன். தேர்தலுக்கு பிறகு நான் பதவியில் நீடிக்க மாட்டேன். பதவி விலகுவேன். 

அமைதியான முறையில் அதிகாரத்தை அடுத்தவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன் எனது மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அவரது பேச்சு போராட்டக்காரர்கள் திரண்டிருந்த கெய்ரோவின் தரிர் சதுக்கத்தில் டெலிவிஷன் மூலம் ஒளிபரப்பப்பட்டது. 

அவரது வேண்டுகோளை ஏற்க பொதுமக்கள் மறுத்து விட்டனர். நீங்கள் (அதிபர் முபாரக்) பதவியை விட்டு விலகும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கோஷம் எழுப்பினர். அவர்கள் தங்கள் கால்களில் அணிந்திருந்த ஷூக்கள் மற்றும் செருப்புகளை ஆவேசத்துடன் காட்டினர். 

இதனால் இன்றும் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இதற்கிடையே, எகிப்து தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக எகிப்துக்கான முன்னாள் தூதர் பிராங்ன் ஒய்ரை தனது சிறப்பு தூதராக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF