எட்டாம் திகதியுடன் பொன்சேகாவின் சிறைவாசத்துக்கு ஒரு வருடம்!
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டு எதிர்வரும் 08 ஆம் திகதியுடன் ஓராண்டு பூர்த்தி ஆகின்றது.
அன்றைய தினம் பாரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக நடத்த உள்ளது ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் என்கிற அமைப்பு.
ஜே.வி.பி கட்சியின் ஆசிர்வாதம், பக்க பலம் ஆகியவற்றுடன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சிறைச்சாலை வாசலுக்கு முன்னால் உட்கார்ந்து இருந்து போராட்டம் நடத்துவார்கள் என்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மன்னாரின் தம்பனைக் குளம் கிராமம் முற்றாக வெள்ள நீருக்குள்!
மன்னார் மாவட்டத்தில் மடு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனைக் குளம் கிராமம் இன்று காலை வெள்ள நீரில் முற்றாக மூழ்கி விட்டது.
நாட்டின் தென்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளம் அறுவி ஆற்றை வந்து அடைந்தது.
கிராமத்தில் அனைத்து வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. வெள்ளத்தில் அகப்பட்ட மக்களை மீட்கும் பணியில் காப்பாற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தம்பனைக்குளம் பிரதான வீதியில் படகுகள் மூலம் மக்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 330 குடும்பங்களைச் சேர்ந்த 2704 பேர் இடம்பெயர்ந்து சின்னப் பண்டி விரிச்சான் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.
தம்பனைக் குளம் பிரதான வீதியில் மட்டும் அன்றி மடு பிரதான வீதியிலும் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் முற்றாக தடைப்பட்டு விட்டன.

கைது அச்சத்தால் சுவிஸ் பயணத்தை இரத்துச் செய்த புஷ்!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாநகரில் ஒரு அறக்கட்டளை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஜார்ஜ்டபிள்யூ புஷ் தயாராக இருந்தார்.
ஆனால், அவர் மீது ஜெனீவா கோர்ட்டில் மனித உரிமைகள் அமைப்பு ஒரு வழக்கு தொடர்ந்தது. அவர் அமெரிக்க அதிபராக இருந்த போது குவான்ட்னமோ வளைகுடா பகுதியில் தீவிரவாதிகள் என சந்தேகப்பட்ட நபர்களை சித்ரவதை செய்து மனித உரிமை மீறியுள்ளார்.
எனவே அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவரை கைது செய்யும்படி சுவிட்சர்லாந்து அரசுக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அங்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் சுவிட்சர்லாந்து பயணத்தை அவர் திடீரென ரத்து செய்தார்.
ஆனால், சுவிட்சர்லாந்து வந்தால் அவர் கைது செய்யப்பட மாட்டார். விருந்து விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மகிழலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிகளை வாடகைக்குப் பெறும் கனடா! அமெரிக்கா கண்டனம்.
ஆப்கானிஸ்தானில் நான்கு வருட காலத்தில் துப்பாக்கிகளை வாடகைக்குப் பெற்றுக்கொள்ள கனடா 41 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.
இதில் பெருந்தொகை பாதுகாப்புத்துறைக் கம்பனிகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க செனட் சபையின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.
கனடாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரத் திணைக்களங்கள் இரண்டுமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 2006 முதல் இந்தப் பிரிவுகளால் காபூலிலும், கந்தஹாரிலும் 11 பாதுகாப்புக் கம்பனிகள் ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அமர்த்தப்பட்டன.
ஆனால் இந்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. தற்போது இது சம்பந்தமான ஆவணங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தனியார் ஒப்பந்தக்காரர்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கும் முதலாவது அறிக்கையாக இது உள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமைகள் மோசமடைய இதுவும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்றது.
வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் வெளியுறவு அமைச்சு ஆர்மர்குறூப் என்ற நிறுவனத்துக்கு 8 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் முழுக்கமுழுக்க ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்திவரும் பிரிவினரோடு தொடர்புடைய ஒரு அமைப்பாகும்.
அமெரிக்க செனட் நடத்தியுள்ள விசாரணைகளின் பிரகாரம் இந்த நிறுவனம் 2007ல் கொலை, ஆள்கடத்தல், இலஞ்சம், மற்றும் அங்குள்ள கூட்டுப்படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுவினரோடு தொடர்புடைய ஒரு அமைப்பாகும்.
இந்த நிறுவனம் பின்னர் G 4S றிஸ்க் மெனேஜ்மென்ட் என்ற அமைப்பால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின் இந்த நிறுவனம் காபூலிலுள்ள கனடாத் தூதரகத்துக்குப் பாதுகாப்பளித்தல் மற்றும் ராஜதந்திரிகளுக்குப் பாதுகாப்பளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானிலுள்ள பாதுகாப்புக் கம்பனிகளுடனான கனடாவின் கொடுக்கல் வாங்கல்கள் பல பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இன்னமும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
கனடா ஆப்கானிஸ்தானிலுள்ள பல பாதுகாப்புக் கம்பனிகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

மட்டக்களப்பு நகருக்கு வரும் பாலத்தில் பாரிய உடைவு.
மட்டக்களப்பு நகருக்கு வரும் பிரதான பாலமான கோட்டைமுனை பாலத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதவாறு திருத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தனம் காரணமாக வெள்ள நீர் முகத்துவாரத்தின் ஊடாக அகற்றப்பட்டுக்கொண்டிருக்கையில் குறித்த வாவியின் ஊடாக நீரோட்டம் கடுமையாக இருக்கின்றது.
இதன்காரணமாக மட்டக்களப்பு நகருக்குச்செல்லும் பிரதான பாலமான கோட்டைமுனைப்பாலத்தின் இரு முனைகளில் பாரிய உடைவு ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்த உடைவுகள் சிறந்தமுறையில் திருத்தப்பட்டுள்ளதாகவும் அந்த உடைவினால் பாலத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
பாலத்தின் இரு மருங்கிலும் சிறிய உடைப்பு காணப்பட்டபோதிலும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் உள்ள மக்கள் தமக்கு இதுவரை எதுவித உணவுப்பொருட்களும் வழங்கப்படவில்லையென தெரிவித்தனர்.
ஐ.நா. நிபுணர் குழு வீடியோ கொன்பரன்சிங் முறையில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க உத்தேசம்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஐ.நா. நிபுணர் குழுவானது வீடியோ கொன்பரன்சிங் முறையிலான விசாரணைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில் நிபுணர் குழுவானது இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போதிலும், அதில் ஏற்பட்ட சில தடங்கல்களை அடுத்தே மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளது.
செய்மதி மூலமான நோ்காணல் முறையில் வீடீயோ கொன்பரன்சிங் முறையில் மற்றும் எழுத்து வடிவிலான விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலம் பலரையும் நோ்காணலுக்கு உட்படுத்த முடியும் என்று நிபுணர் குழு கருதுகின்றதாக தெரிய வருகின்றது.
அவ்வாறான நிலையில் செய்மதி மூலமான விசாரணையின் மூலம் போதுமான சாட்சியங்களை முன்வைப்பதற்கோ, சாட்சிகளின் பரந்தளவிலான சாட்சியங்களை விசாரணைக்குட்படுத்தவோ போதுமான அவகாசம் கிடைக்கப் போவதில்லை என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
அந்த வகையில் ஐ.நா. நிபுணர் குழுவின் விசாரணையானது வெறுமனே கண்துடைப்பாக மட்டும் அமைந்து விடப்போவதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விசனத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர்.
போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உலங்குவானூர்தி மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம்.
போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் படுவான்கரைக்கு உலங்குவானூர்தி மூலம் உணவு விநியோகம் இடம்பெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு விமானப்படைத்தளத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி பொண்டுகள்சேனைகித்துள் போன்ற பகுதிகளுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
படுவான்ரைக்கான தரைவழி போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்படிப்பிரதேசத்தில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
இதனையடுத்து அப்பகுதிக்கான உணவு விநியோகங்கள் இயந்திரப்படகு மூலமும் உலங்குவானூர்தி மூலமும் இடம்பெற்றுவருகின்றன.
மீள்குடியேற்ற அமைச்சு மூலம் பிரதியமைச்சர் முரளிதரன் உணவுப்பொருட்களை உலங்குவானூர்தி மூலம் விநியோகத்துவருகின்றார்.

தீவிரவாதி கசாப்பை தூக்கிலிடும் தேதி நாளை அறிவிப்பு.
மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பை தூக்கிலிடும் தேதியை மும்பை ஐகோர்ட்டு நாளை அறிவிக்கிறது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் அப்பாவி மக்கள் பலர் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். |
அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டான். அவன் மீது மும்பை தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட பகீம் அன்சாரி, சபாயுதீன் அகமத் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் இரு வரும் விடுதலை செய்யப்பட்டனர். கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து மும்பை தாக்குதல் வழக்கு ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தீர்ப்பை எதிர்த்து கசாப் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். மராட்டிய அரசும் 2 பேர் விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளது. இதில் வக்கீல்கள் வாதம் கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி நடந்தது. இதையடுத்து நீதிபதிகள் ரஞ்சனாதேசாய், ஆர்.வி. மோரே ஆகியோர் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படுகிறது. அப்போது கசாப்பை தூக்கிலிடும் தேதியை நீதிபதிகள் அறிவிக்கிறார்கள். ரத்த பரிசோதனைக்கு புதிய முறை: கனடா ஆய்வாளர்களின் சாதனை. கால்கேரி பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் ரத்த பரிசோதனைக்கு புதிய முறை ஒன்றினை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த முறை மூலம் சுகாதார துறையில் ஆயிரக்கணக்கான டொலர் நிதியை சேமிக்க முடியும். இந்த புதிய முறை குறித்து ஸ்குலிச் ஸ்கூல் ஆப் இன்சினியரிங்கில் உள்ள பயோ சிஸ்டம்ஸ் ரிசர்ச் அண்ட் அப்ளிகேஷன்ஸ் குரூப் இயக்குனர் டாக்டர் கரண் கூறுகையில், தாமும் தம் குழுவினரும் இணைந்து மைக்ரோசிப் மூலம் ரத்த பரிசோதனை மேற்கொள்ளும் முறையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். தொடு உணர் வசதிகளுடன் கூடிய மைக்ரோசிப்பில் ரத்தத்துளிகள் வைக்கப்பட்டதும், அவை விவரங்களை சேகரித்து வயர்லெஸ் வழியாக கணனிக்கு தகவல்களை அனுப்பும். இந்த புதிய முறையால் கூடுதல் ரத்தத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. புதிய மைக்ரோசிப் சோதனை முறை, மிக துல்லியமான மற்றும் மிக விரைவான ஆய்வக சோதனைகளை அளிப்பதாக இருக்கும். அதே நேரத்தில் செலவினம் மிக குறைவாக இருக்கும். சோதனைக்கான நேரமும் குறைவாக இருக்கும். மைக்ரோசிப்பில் ரத்த பரிசோதனை செய்வதற்கு 25 டொலர் மட்டுமே செலவாகும். தற்போதைய ரத்த பரிசோதனை செலவினத்தை விட பல மடங்கு இது குறைவாகும். இந்த பயன்பாட்டின் மூலம் மருத்துவமனைகள் இல்லாத கிராமப்புறங்களிலும் சேவை அளிக்க முடியும். மலேரியா தாக்கம் உள்ளவர்களுக்கு நோய் குறித்து கண்டறிய இந்த மைக்ரோசிப் சோதனை வெகுவாக உதவும். |