ஆபிரிக்க கறுப்பினத்தர்களில் மசாய் என்னும் இனக்குழு கென்யாவின் தெற்குப் பகுதியிலும் தன்சானியாவின் வடக்குப் பகுதியிலும் வாழ்கிறார்கள். இவர்களுடைய வண்ணமயமான உடைகள், காடுகளுக்குள் இயற்கையோடு ஒன்றித்த அரைநாடோடித்தனமான வாழ்க்கை, விசித்திரமான பழக்க வழக்கங்கள் போன்றவை காரணமாக, மசாய் இனத்தவர்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். அவர்களைப் பார்த்து, அவர்களுடன் ஒருசில நாட்களைக் கழிப்பதற்காக உல்லாசப் பயணிகள் மசாய் லான்ட் வெளிப் பகுதிக்குச் செல்கின்றனர்.
யார் இவர்கள்?
ஈட்டி வீசுவதில் வல்லவர்களாகிய இவர்கள், சிறந்த போர் வீரர்களாவர். மந்தைகளின் பாலும் இறைச்சியும் இரத்தமும் இவர்களின் முக்கிய உணவாகும். மந்தைகளுடனே வாழ்ந்து கொண்டு அவற்றையே உணவாக உண்ணும் வழக்கம் இவர்களிடம் உண்டு.
காட்டு விலங்குகளிடம் இருந்து மந்தைகளைப் பாதுகாப்பதுடன் போர்ப் பயிற்சிஅளிப்பதும் பெறுவதும் ஆண்களின் கடமை.வீடு கட்டுதல், நீர்சேகரித்தல், விறகு தேடுதல், பால் கறத்தல், ஆடை தயாரித்தல் போன்றவை பெண்களின் பொறுப்புகள்.
நாடோடிக் காலத்தைச் சேர்ந்த மசாய்களின் மூதாதையர்கள் சூடானின் தென்பகுதியில் உள்ள நையில் நதிப்பள்ளத்தாக்கில் இருந்து தெற்கு நோக்கி 15 ஆம் நூற்றாண்டில் இடம்பெயர ஆரம்பித்தவர்கள், 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளின் கடைசிப் பகுதியிலேயே தற்போதுள்ள பகுதிகளில் குடியேறினார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மசாய் இன மக்களின் நிலப்பகுதி பரந்த பிரதேசங்களைக் கொண்டிருந்தது. 1891 முதல் 1893 வரை மசாய்லான்டில் ஆய்வுப்பயணம் செய்த ஒஸ்கார் பாமன் என்ற அறிஞரின் குறிப்பின்படி, ""பட்டினியாலும், வயிற்றோட்ட நோயினாலும் மசாய் இன மக்களின் மொத்த சனத்தொ�கயில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இறந்ததாக'' தெரிவித்துள்ளார்.
மரணத்திலிருந்து தப்பிப்பிழைத்தோர் பட்டினிக்கெதிராக போராட வேண்டிருந்ததாகவும் அவர்கள் மிருகங்களையும் பறவைகளையும் உண்டதாகவும் தமது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். இதனாலும் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களினாலும் தமது நிலப்பகுதியின் பெரும்பகுதியை இழந்தார்கள்.
இடத்துக்கிடம் முடிச்சுக்களுடன் இடம்பெயரும் இவர்கள், நிலம், தண்ணீர் உட்பட உணவுப் பொருட்களை தமக்கிடையே போட்டியின்றி பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கிடையே சொத்துப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. யாருக்கும் எந்தச் சொத்தும் கிடையாது.
மசாய் இன ஆண்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் போர்ப்பயிற்சி பெற வேண்டும். பயிற்சியின்போது ஒரு வீரன் தனது வல்லமையை நிரூபிக்கும் பொருட்டு சிங்கத்துடன் போராடி அதனை கொல்ல வேண்டும். போர்வீரர்கள் அதிக உத்வேகம் கொள்ளும் முகமாக போதையூட்டக்கூடிய ஒருவகை மதுபானம் கொடுக்கப்படுகின்றது. கிழக்கு ஆபிரிக்கா சிங்கத்தை கொல்வதை தடைசெய்துள்ள போதும், மாசாய் போர் வீரர்கள் தங்களது கால்நடைகளைப் பாதுகாக்கும் �நாக்கில் இப்போதும் சிங்கங்களைக் �கால்வதை பாரம்பரியமாக மேற்கொண்டு வருகிறார்கள். சிங்கத்தைக் கொல்லும் தனிப்பட்டவருக்கோ அல்லது குழுவுக்கோ மரியாதையும் அந்தஸ்தும் கிடைக்கும்.
பணம், ஆபரணங்களை விட பிள்ளைச் செல்வங்கள், மந்தைகள் மற்றும் பசுக்களின் தொகையை வைத்தே செல்வந்தன் என சமூக அந்தஸ்து தீர்மானிக்கப்படுகின்றது. 50 மந்தைகள் கொண்டவன் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரியவனன். இவன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ளமுடியும். மசாய் இன மக்களின் கலாசார பண்பாடு யாவும் மந்தைகளை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றன.
இயற்கையில் இலகுவாககக் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டே மசாய்க்கள் தமது வீடுகளை அமைக்கிறார்கள். வட்டவடிவிலான இந்த வீடுகளை பெண்களே கட்டுகிறார்கள். கிளைகள் உள்ள தடிகளை வட்டவடிவில் நிலத்தில் ஊன்றி சேறு, மாட்டுச் சாணம், மாட்டின் சிறுநீர், சாம்பல் ஆகியவற்றைக் கலந்து குழைத்து, நட்டுவைத்த தடிகளில் அப்புவார்கள். இவ்வாறு பல படைகள் அப்பி வீடு எழுப்பப்படும்.
சராசரியாக வீட்டின் உயரம் 1.5 மீற். உம் 3 மீற். ஙீ 5 மீற். உள்விஸ்தீரணமும் கொண்டிருக்கும். இந்தளவு சிறிய வீட்டினுள் ஒரு குடும்பம் சமைப்பதும் சாப்பிடுவதும் தூங்குவதும் உணவு, தண்ணீர் பொருள்களை சேமித்து வைப்பதும் போன்ற காரியங்கள் நடந்தேறுகின்றன. சிலசமயம் மந்தைக் குட்டிகளும் வீட்டிற்குள்ளே தங்கவைக்கப்டும். இரவுநேரங்களில் குடியிருப்பின் மையப்பகுதி மற்றும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு வீரர்கள் காவல் கடமையில் ஈடுபடுவார்கள்.
போர்வீரர்களில் அதிகமானோர் தமது நேரத்தை தலை முடியை அழகுபடுத்துவதிலேயே செலவுசெய்கின்றனர். சிலர் தமது துணிச்சலை வெளிப்படுத்தும் முகமாக, தமது உடலில் ஈட்டி, கத்தி போன்ற ஆயுதங்களைச் சூடேற்றி உடலில் குறியிட்டும் கொள்கின்றனர்.
மசாய்களில் அநேகர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியபோதிலும், இன்னும் பூர்வீக கடவுளாக நம்பும் என்கை என்ற கடவுள் புனித கென்ய மலையில் வாழ்வதாக நம்புகின்றார்கள். என்கை கடவுள் சூரிய கடவுளின் மைந்தன் என்கின்றார்கள். உலகத்திற்கு இன்பத்தை பிரவாகிப்பவர் இவரே. மந்தைகளை பராமரித்துக் கொள்ளும் பொறுப்பை கடவுள் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக இவர்கள் நம்புகின்றனர்
மசாய்களின் குடியிருப்புக்கு விஜயம் செய்த உல்லாசப்பயணி ஒருவர் தனது அனுபவங்கள் குறித்து பகிரும்போது, தம்மை நடனமாடி வரவேற்ற மசாய்கள் தமது கூட்டத்தின் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். அங்கு தலைவனுடன் எல்லா மசாய்களும் சேர்ந்து எம்மை மகிழ்விக்கும் நோக்கத்துடன் நடனமாடி, பாட்டுப்பாடினார்கள்.
சிறிது நேரத்தின்பின் மந்தைக்கூட்டம் ஒன்றைக் காட்டிய தலைவன், பிடித்தமான மந்தை ஒன்றைத் காட்டும்படி கேட்டான். அழகான மந்தை ஒன்றைக் காட்டிய அப்பெண்மணியின் முன்னாலேயே மந்தையின் கழுத்தில் இரத்தோட்ட நாடியைப் பார்த்து கூரிய சிறிய குழாயைச் செருகி இரத்தத்தை சிறிய மரப்பாத்திரம் ஒன்றில் எடுக்கும் போது, மந்தை நிலத்தில் சாய்ந்தது. மரப்பாத்திரத்தில் இருந்த இரத்தத்தை இரண்டு கைகளிலும் எடுத்து குடிக்கும்படி கேட்டான். மந்தையின் கணைச்சூடு ஆறாத இரத்தத்தை எனது வாய்க்குள் சிறிது வார்த்தான்.
அதனுடைய சரியான சுவையை உணரமுடியாமல் அப்படியே விழுங்கி விட்டேன். முகம், கழுத்து, அணிந்திருந்த ஆடைகளிலும் ஒரே இரத்தம். விருந்தினர்களுக்காக அவர்களால் தரப்பட்ட சிறப்பு உணவு இந்த இரத்தம்தான். இரவு முழுவதும் பட்டினிதான். அன்றிரவு மூன்று மணிவரை பாட்டுப்பாடி நடனமாடினார்கள். காலை ஏழு மணியளவில் எழுந்து விட்டார்கள். நாள் முழுவதும் உற்சாகத்துடன் அலுவல்களில் ஈடுபட்டார்கள்.
இந்தச் சக்தி எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கிறது என்ற சந்தேகத்திற்கான பதிலை பின்னர் அறிந்து கொண்டேன். அதாவது இந்த மந்தை இரத்தமே காரணமாம், என்றார் அந்த உல்லாசப்பிரயாணி. குழந்தைகளுக்கு ஏழு வயது நடக்கும்போது வேட்டைப் பற்களை பிடுங்கி விடுகின்றனர். இப்படிச் செய்வதன்மூலம் வயிற்றோட்டம், வாந்தி நோய்கள் வராது என நம்புகின்றார்கள். இளம் வயதிலேயே திருமணம் முடிக்கும் பழக்கம் காணப்படுகின்றது.
மசாய் இனப் பெண்கள் மோட்டார் சைக்கிள் டயரில் வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளை பாதஅணிகளாக அணிகிறார்கள். ஆணும் பெண்ணும் மரத்தினாலான காப்புகளையும் குறிப்பாக பெண்கள் பாசிமணிகளினாலான ஆபரணங்களை அணிகின்றார்கள். கைத்தறியில் நெய்யப்பட்ட ஆடைகளை அணியும் இவர்கள் சிவப்பு நிறத்திற்கு முக்கியம் அளிக்கிறார்கள். சிவப்பு நிறத்தை வீடுகளில் தயாரித்துக் கொள்வார்கள்.
களிமண், சொலன் கனிசாறு அல்லது மந்தை இரத்தம் ஆகியவற்றைக் கலந்து சிவப்பு சாயம் தயாராகிறது. சக்தியின் உறைவிடம் சிவப்பு என்ற நம்பிக்கை இவர்களிடம் வெகுவாக உண்டு. மசாய் பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையே திருமணம் செய்ய முடியும்.
மசாய்கள் மழை காலம், பயணம் மற்றும் திருமணம் போன்ற முக்கிய சடங்கு, விழாக்களின் போதும் இசை இசைத்து நடனமாடி மகிழ்கின்றனர். பொதுவாக வாயசைவினால் இசை இசைக்கப்படுகிறது.
நடனமாடும் போது, வட்டமாக சுற்றி நின்று ஒருவர் பின் ஒருவராக வட்டத்தின் மையப்பகுதிக்கு வந்து மேலே துள்ளித் துள்ளி ஆடுவார்கள். சாதாரணமாக ஒருவர் மூன்றடி உயரத்திற்கு மேல் எழும்பி துள்ளுகிறார். சுற்றி நிற்பவர்கள் தமது உடலை அசைத்த வண்ணம் கால்களை முன்னும்பின்னும் வைத்து ஆடுவார்கள். இது இவர்களது பாரம்பரிய நடனம் ஆகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF