மட்டக்களப்பில் பெய்யும் அடைமழை தொடருமானால் சுனாமி நிலையே உருவாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் மழையினால் மட்டக்களப்பில் அமைந்துள்ள 8 குளங்களும் உடைப்பெடுத்தால் முழு மட்டக்களப்புமே நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக உள்ளுர் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்தும் இந்தக்குளங்களுக்கு வரும் அதிகளவான நீர் காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக்காரணமாக தற்போது இந்த குளங்களின் நீர்மட்டம் மேவிப்பாய்கிறது.
இந்த மழை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு தொடருமானால் பாரிய பாதிப்புகளுக்கு இடமுள்ளதாகவும், இது 2004 ஆம் ஆண்டின் சுனாமிக்கு ஒத்தநிலைமையை தோற்றுவிக்கும் என்றும் பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே மட்டக்களப்பில் பிரதான நிலப்பகுதியில் இருந்து வாகரைப்பிரதேசம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, மழை தொடருமானால் ஏனைய கிராமங்களின் நிலைமையும் மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கு பகுதிகளுக்கான உணவு விநியோகங்கள், ஹெலிகொப்டர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர் ஹிஸ்புல்லாவின் தகவல்படி, கிழக்கில் தற்போது 166 அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சித்தாண்டி, கிரான், வாழைச்சேனை, போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது அங்கு 4 ஆயிரத்து 64 அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களுக்கு உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கிவருகின்றன.
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் முபாரக்.
எகிப்து ஆளும் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து அதிபர் ஹோஸ்னி முபாரக், அவரது மகன் கமால் ஆகியோர் நேற்று விலகினர்.
ஆளும் கட்சியின் அதிகாரம் மிக்க வழிகாட்டும் குழுவிலிருந்து முபாரக், கமால் உள்பட 6 பேர் பதவி விலகியதாக அரசு டிவி அறிவித்தது. இதன் காரணமாக கொய்ரோவில் முபாரக்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
30 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்துவரும் முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என 12 நாள்களாக எகிப்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனிடையே, சில நாள்களுக்கு முன் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையுடன் அதிபர் முபாரக் ஆலோசனை நடத்தினார்.
இந்த சூழலில், அதிபர் முபாரக் தான் வகித்து வந்த தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எகிப்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ராஜினாமா நடந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் புதிய பிரதமர் அகமது ஷாபிக், அமைச்சர்கள், சென்ட்ரல் வங்கி கவர்னர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எகிப்துக்கு ஆயுதம் விற்பனை: பிரான்ஸ் நிறுத்தியது.
எகிப்துக்கு ஆயுதம் விற்பனை செய்வதை பிரான்ஸ் நிறுத்தி வைத்தது. பிரதமர் அலுவலக கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் ஜனாதிபதி முபாரக்கை பதவி விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எகிப்தில் மக்களுக்கு விரோதமான அரசை நீக்க வேண்டும் என்று கூறி தலைநகர் பாரிஸில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். கிழக்கு பகுதியில் ஸ்டிராஸ்போர்க்கிலும், நாட்டின் தென்கிழக்கு பகுதியான கிரனோபிஸ் பகுதியிலும் எகிப்து ஆட்சியை தூக்கி எறிய மக்கள் போராட்டம் நடந்தன.
எகிப்தை போல பதட்டம் நீடிக்கும் துனிஷியாவுக்கும் ஆயுதம் அனுப்பியது தொடர்பாக ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. பிரான்ஸ் அயல்துறை அமைச்சர் மிச்லே அலியட் கடந்த மாதம் கூறுகையில், துனிஷியாவில் சட்ட உழுங்கு பராமரிப்புக்கு அந்நாட்டு பொலிசாருக்கும் பயிற்சி அளிக்கலாம் என தெரிவித்து இருந்தார். அவரது கருத்து பிரான்சில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இலங்கை அகதிகள் மேம்பாட்டிற்கு தமிழக அரசால் நூறு கோடி ஒதுக்கீடு: இலவச தொலைக்காட்சி, காப்பீட்டுத் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலன் பேணல் மற்றும் மேம்பாட்டிற்கு நூறு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையில் நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது மாநில நிதியமைச்சர் அன்பழகன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களின் வசதிகளை மேம்படுத்த நூறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக முப்பது கோடி ரூபா பெறுமதியான பணிகள் தற்போது முடியும் தறுவாயில் உள்ளன.
அதனையடுத்து தமிழக மக்களுக்கு மட்டும் இதுவரை செயற்படுத்தப்பட்ட இலவச தொலைக்காட்சி மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், திருமண உதவித்திட்டம் என்பனவும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
தற்போதைக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாற்பது கோடி ருபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது..
தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதே போன்று, ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிசோதனைக் கூடத்தில் இரத்த நாளங்களை உருவாக்கி சாதனை.
இருதய நோயாளிகளின் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்த நாளங்களை பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
இரத்த நாளங்கள் அதி நவீன சிகிச்சை மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடலில் உள்ள செல்கள் மூலம் உருவாக்குகின்றனர். இதற்கு சுமார் 9 மாதங்களாகின்றன.
இதுவரை நீண்ட நாட்களாக நோயாளிகளால் காத்திருக்க முடிவதில்லை. எனவே தற்போது பரிசோதனை கூடங்களில் செயற்கையான முறையில் ரத்த நாளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மற்றவர்களிடம் செல்களை தானமாக பெற்று அவற்றை இயற்கையாக பெறப்படும் புரோட்டீன்களுடன் சேர்த்து வளர்த்து உருவாக்கியுள்ளனர். இவற்றை ஒரு வருடத்துக்கும் மேலாக பத்திரமாக வைத்திருக்க முடியும்.
இந்த ரத்த நாளங்களை இருதய அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு பொருத்த முடியும். இது இருதய மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?
உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள். தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.
மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது.
மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

"மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்" என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.
சூரிய ஔி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன.

சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச் சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.
இருபது இலட்சம் ஒலிகளை ஒரே இடத்தில் கேட்டு இரசிக்க.
இவ்வுலகில் பல வகையான ஒலிகள் உள்ளன.
இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இவ் இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்க எமக்கு நேரமும் இல்லை.
எனினும் இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் அடக்கி வைத்துள்ள இணையத் தளமொன்று உள்ளது.
இத்தளத்தில் அவற்றை கேட்டு இரசிக்க முடிவதுடன் தரவிறக்கம் செய்து கொள்ளவதும் முடியும்.
இயற்கையின் ஒலிகளை உங்கள் காதுகளுக்கு எட்டச்செய்யும் இத்தளத்தில் உங்களுக்கு தேவையான ஒலி வடிவத்தினை தேடிப்பெற்றுக்கொள்ளவும் முடியும். சுமார் 20 இலட்சம் வித்தியாசமான ஒலிகள் இத்தளத்தில் உள்ளன. எந்த பார்மெட்டில் வேண்டுமே அந்த பார்மெட்டில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
அத் தளமுகவரி
http://www.findsounds.com/types.html