மட்டு.-அம்பாறை மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்-போக்குவரத்துக்கள் துண்டிப்பு - 48 மணித்தியாலங்களில் 253.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அம்பாறை மாவட்டத்துக்கான அனைத்துப்பிரதேசங்களின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் அடைமழை சில நாட்கள் ஓய்திருந்திருந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு சில நாட்களில் மீண்டும் கனமழை பெய்துவருகின்றது.
இலங்கையின் 63வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று கதிர்காமத்தில்.
யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான புதுப் பறவை.
யாழ்.நீர்வேலிப்பகுதியில் ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படும் அதிசயமான பறவை ஒன்றை பொதுமக்கள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். காகங்கள் கொத்தியதால் வானத்திலிருந்து நிலத்தில் விழுந்திருக்கின்றது இப்பறவை. இப்பறவை வெளிநாட்டில் இருந்து பருவகால மாற்றத்தால் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
தாலிபானில்சரண் அடையும் விழா.
தாலிபான் போராளிகள் 25 பேர் நேற்று ஆப்கானிஸ்தானிய அரசிடம் சரண் அடைந்தனர்.இப்போராளிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டனர். இந்நிகழ்வு ஒரு விழாவைப் போல நடத்தப்பட்டது.
சரண் அடையும் விழா என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அம்பாறை மாவட்டத்துக்கான அனைத்துப்பிரதேசங்களின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் அடைமழை சில நாட்கள் ஓய்திருந்திருந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு சில நாட்களில் மீண்டும் கனமழை பெய்துவருகின்றது.
இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்துப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் நீரின் அளவு மட்டம் உயர்ந்துவரும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக படுவான்கரைப்பகுதியின் அனைத்துப்பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைக்கு செல்லும் அனைத்துப்பாதைகளும் வெள்ள நீர் நிரம்பியதால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் அவர்களுக்கான உணவுப்பொருட்களை இயந்திரப்படகுகள் மூலம் கொண்டுசெல்லும் பணிகளை படையினருடன் இணைந்து பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
படுவான்கரைக்குச்செலும் மண்டூர் –வெள்ளாவெளி வீதிபட்டிருப்புவீதி வவுனதீவுப்பாலம் போன்றனவற்றால் வெள்ள நீர் ஆறு அடிக்கும் மேல் பாய்ந்துசெல்கின்றது.
இதேபோன்று மட்டக்களப்பு –கொழும்பு பாதையில் பிள்ளையாரடி மற்றும் ஊறணி போன்றவற்றின் வீதிகளிலும் தன்னாமுனை வந்தாறுமூலைசந்திவெளி கிராண்போன்ற பிரதேசங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு கல்முனை காரைதீவு வீரமுனை மல்வத்தை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்றுதம்பிலுவில் திருக்கோவில் போன்ற பகுதிகளிலும் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இதேநேரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்றுவேளையும் சமைத்த உணவு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகளை அழைத்து தற்போதை நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள நிலைமையினை தொடர்ந்து மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள நிலைமையினை எதிர்கொள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் சமைத்த உணவு மற்றும் குழந்தைகளுக்குரிய பொருட்கள் போர்வைகள் குடி நீர்கள் என்பனவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்தார்.
மட்டக்களப்பில் 48 மணித்தியாலங்களில் 253.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் தொடர் மழை பெய்து வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சில தினங்களாக கடும் மடை பெய்து வருவதால் மாவட்டத்தின் பெரும்பக்லான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை 187.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 48 மணித்தியாலங்களில் 253.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எ.எம்.சாலிதின் தெரிவித்தார்.
மழை காரணமாக நேற்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் இன்று பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை.
ஏற்கெனவே வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலையிலுள்ளனர்.
ஓரளவு அறுவடை செய்யக்கூடிய வயல்களும் தொடர்ந்து வெள்ளம் ஏற்படுவதனால் அழிவடையும் நிலையேற்பட்டுள்ளது.
இலங்கையின் 63வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று கதிர்காமத்தில்.
இலங்கையின் 63வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கதிர்காமத்தில் நடைபெறவுள்ளது.
இன்று காலை 8.50 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தேசியக் கொடி ஏற்றுதலுடன் தேசிய தின வைபவங்கள் ஆரம்பமாகும். இம்முறை தேசிய தின வைபவங்களுக்கான கருப்பொருளாக "கட்டியெழுப்பிய தேசத்தைப்பாதுகாப்போம்" எனும் கருப்பொருள் முன் வைக்கப்பட்டுள்ளது.
சரியாக மு.ப.9.15 மணியளவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான உரையை ஆரம்பிக்கவுள்ளார். தேசிய தின வைபவங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இன்று மாலை 4.30 மணியளவில் புத்தல பிரதேசத்தில் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படும்.
கொழும்புக்கு வெளியே சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது இது தான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான புதுப் பறவை.
யாழ்.நீர்வேலிப்பகுதியில் ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படும் அதிசயமான பறவை ஒன்றை பொதுமக்கள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். காகங்கள் கொத்தியதால் வானத்திலிருந்து நிலத்தில் விழுந்திருக்கின்றது இப்பறவை. இப்பறவை வெளிநாட்டில் இருந்து பருவகால மாற்றத்தால் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
தாலிபானில்சரண் அடையும் விழா.
தாலிபான் போராளிகள் 25 பேர் நேற்று ஆப்கானிஸ்தானிய அரசிடம் சரண் அடைந்தனர்.இப்போராளிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டனர். இந்நிகழ்வு ஒரு விழாவைப் போல நடத்தப்பட்டது.
சரண் அடையும் விழா என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
பிரிட்டனில் தங்குவதற்காக ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது.
பிரிட்டனில் தங்குவதற்காக, அந்நாட்டு பெண்ணை போலியாக திருமணம் செய்ய முயன்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் தங்கி வேலை பார்ப்பதற்காகவும், அந்நாட்டு குடியுரிமையை பெறுவதற்காகவும் அங்குள்ள பெண்களை போலியாக திருமணம் செய்யும் வழக்கம் மறைமுகமாக நடந்து வருகிறது. இது போன்ற திருமணங்களை தடுப்பதற்காக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக சர்ச் மற்றும் திருமண பதிவு அலுவலகங்களை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர் ஒருவர் அந்நாட்டு பெண்ணை போலியாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
அந்த நபரை கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிரிட்டன் குடியுரிமை சட்டத்தை மீறிய இந்தியருக்கு 16 மாத சிறை தண்டனையும் இந்தியரை போலியாக திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட லண்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு 14 மாத சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
யாசி புயலின் தாக்கம்: ஒரே இரவில் குவின்ஸ்லாந்து அழிவின் விழிம்பில்.
குயின்ஸ்லாந்தின் ஆயிரக்கணக்கான நகர்வாசிகள் விழித்தெழுந்த போது, இத்தாலியின் பரப்பளவு கொண்ட யாஸி புயல் தங்கள் நகரை துடைத்தெறிந்து விட்டு சென்றதை கண்டனர்.
புயல் பதுங்கு குழிகளிலும், வெளியேற்றப் பகுதிகளிலும் பதுங்கியிருந்தவர்கள் வெளிவந்த போது, எங்கும் அழிவின் எச்சங்களையே கண்டனர். குறிப்பாக டுல்லி, மிஷன் பீச், கார்ட்வெல் கடற்கரைப் பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு இருந்தது.
காலையில் பயங்கரமான புயல்காற்று 180 மீற்றர் வேகத்தில் மரங்களை தரையோடு சாயும் அளவுக்கு வீசியது. தாழ்வான நிலப்பகுதியுடைய நகர்ப்பகுதிகளிலும், கெய்ர்ன்ஸ் மற்றும் டவுன்ஸ்வில் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் மக்களை வீட்டினுள் இருக்குமாறு உத்தரவிட்டனர். முக்கிய சுற்றுலா தளமான கெய்ர்ன்ஸ் பெருமளவு பாதிக்கப்படவில்லை. மேலும் இறப்புகள் பற்றியோ, காயமடைந்தவர்கள் பற்றியோ எந்தவித தகவல்களும் தெரியவில்லை.
அமெரிக்க கரன்சிக்கு எதிராக கனடா டாலர் மதிப்பு அதிகரிப்பு.
கனடிய டாலர் மதிப்பு அமெரிக்க கரன்சிக்கு எதிராக 2- வது நாளாக அதிகரித்து காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டது.
எகிப்தில் அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் போரரட்டம் வலுத்துள்ள நிலையில் மார்ச் மாத கச்சா எண்ணெய் ஒப்பந்தம் நியூயார்க் மெர்கன்டைல் பரிவர்த்தனையில் 9 சென்ட்கள் அதிகரித்து ஒரு பீப்பாய் 90.86 டாலராக ஆனது.
மார்ச் மாதம் ஒப்பந்தம் கடந்த 4 சீசன்களை காட்டிலும் 6 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் கனேடிய டாலரின் மதிப்பு அதிகரித்தது.
வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் வேலை செய்யத் தடை: பிரிட்டன் குடிவரவு அமைச்சர் அதிரடி.
பிரிட்டனுக்கு கல்விக்காக வரும் மாணவர்கள் கல்வி நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலை செய்ய மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்குள் வரும் ஜரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளின் மாணவர்களுக்கு கல்வி நேரம் போக ஏனைய நேரங்களில் தொழில் செய்வதற்காக நடமாடுவது நிறுத்தப்படும் என்று பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான விசாவில் வருபவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்கள் அநாவசியமான நெருக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதைத் தடுப்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதைத் தடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க விவகார அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மொழிக் கொள்ளைக்கேற்ப சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் அரச கரும மொழிகள் என்ற வகையில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்குத் தடையும் இல்லை.
நேற்று அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜாதிக ஹெல உறுமயவினர் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் அவர்களின் கருத்தை யாரும் பொருட்படுத்த வேண்டாம். தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கான உரிமையை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றது.
ஒரு சில பிரதேசங்களில் சில அதிகாரிகள் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தடை விதிப்பதாக கேள்விப்படுகின்றோம். அரசாங்கத்தின் மொழிக் கொள்கையின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய முட்டையால் இலங்கைக்கு பிரச்சினை.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றால் இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட குறித்த பண்டங்களின் தரம் மிகவும் குறைவாக காணப்படுவதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வீ.கே.எஸ் பார்ம்ஸில் இருந்து 5 லட்சம் கிலோகிராம் எடைகொண்ட கோழி இறைச்சியை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே 3 லட்சம் கிலோ எடை கொண்ட கோழி இறைச்சி 1.1 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இறைச்சி கிலோ 350 ரூபா வீதம் விற்பனை செய்வதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் சந்தையில் அதனைவிட குறைந்த விலையில் கோழி இறைச்சி விற்பனையாவதால், அதனை சந்தைப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகளில் 30 தொடக்கம் 40 சதவீதமானவை பழுதடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு படை விட்டோடிகள் அனைவருக்கும் இராணுவம் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு படை விட்டோடிகள் அனைவருக்கும் இராணுவம் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளது. சுமார் 50,000 பேர் இப்பொதுமன்னிப்பை பெறுகின்றனர்.
முன்பு கடமையாற்றி இருந்த படைப் பிரிவுக்கு அறிவித்த பிற்பாடு இவர்கள் ஒவ்வொருவரும் சட்ட ரீதியான முறையில் சேவையில் இருந்து விலக முடியும் என்றும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெல நேற்று அறிவித்தார்.
ஆயினும் நாளை 04 ஆம் திகதிக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கும் இடையில் படை விட்டோடிகள் முன்பு கடமையாற்றி இருந்த படைப் பிரிவுக்கு தவறாமல் அறிவிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
முன்பு கடமையாற்றி இருந்த படைப் பிரிவுக்கு அறிவித்த பிற்பாடு இவர்கள் ஒவ்வொருவரும் சட்ட ரீதியான முறையில் சேவையில் இருந்து விலக முடியும் என்றும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெல நேற்று அறிவித்தார்.
ஆயினும் நாளை 04 ஆம் திகதிக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கும் இடையில் படை விட்டோடிகள் முன்பு கடமையாற்றி இருந்த படைப் பிரிவுக்கு தவறாமல் அறிவிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.