Thursday, February 3, 2011

12 வயதுச் சிறுமியின் கவிதைப் போராட்டம்.

சிறுவர்கள் மீது பாடசாலைக் கல்வியை திணிக்கின்றனர் பெற்றோர்.

விளையாடவோ, ஓய்வு எடுக்கவோ அனுமதிக்கின்றமை கிடையாது. 

பாடசாலை, தனியார் கல்வி நிறுவனம், வீட்டுப் படிப்பு என்று சிறுவர்களின் பொழுதுகளை கரைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். 

படி ... படி .. என்று உறுக்குகின்றார்கள்... நச்சரிக்கின்றார்கள்.... தண்டிக்கின்றார்கள்.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த தரம் -05 இல் பயிலும் 12 வயதுச் சிறுமி தாயின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் போன நிலையில் கவிதை ஒன்றை எழுதி ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

அதுவும் வெறும் மூன்று நிமிடங்களுக்கு இடையில் மிகவும் அழகான கவிதையை வடித்து இருக்கின்றார்.

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் உயிர்த் துடிப்போடு நகர்கின்றன.


இணையத் தளங்களில் இக்கவிதை மிகவும் பிரபலம் ஆகி உள்ளது.



இக்கவிதையை  தமிழில் மொழிபெயர்த்து.


"அம்மா நான் பெரும் அழுத்தத்தில்
சிக்கி உள்ளேன்....
குளிரோ, கோடையோ 
வீட்டில்தான் இருக்கின்றேன்....

பொம்மைகளுடன் விளையாடவில்லை....
ஒன் லைனில் விளையாடவில்லை...
ஆனால்
ஒலிம்பிக்ஸ் மத்ஸ் கேள்விகளுக்காக
என்னை தயார் செய்கின்றேன்...

எப்போது ஓய்வெடுக்கின்றேனோ
அப்போது எல்லாம்...
புல்லின் கீற்றுகளையும்
மலரின் இதழ்களையும்
ஆராய விரும்புகின்றேன்.
நான் என் நண்பர்களுடன்
விளையாட விரும்புகின்றேன்.

அம்மா நான் வளர்ந்த பின்பு
கூட உன்னை ஆதரிப்பேன்...
அதை நான் உறுதி செய்கின்றேன்...
இயற்கையிடம் இருந்து என்னை
பிரித்து விடாதே அம்மா...
தயை கூர்ந்து பிரித்து விடாதே
தயவு செய்து எனக்கு ஓய்வு தா..
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF