பிரித்தானியாவில் பத்தாயிரக்கணக்கான குடிவரவாளர்கள் நிரந்தரமாகவே குடியமரலாம் என்ற சட்டம் உள்துறை அமைச்சினால் அகற்றப்படுகின்றது.
241,000 வெளிநாட்டவர்களைக் கடந்த வருடம் மட்டும் இருக்க அனுமதித்த சட்டத்தினை அமைச்சர்கள் நீக்கவுள்ளனர்.தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த போது 51,000 ஆக இருந்த இத் தொகை தற்போது உயர்ந்துள்ளது.5 வருடங்கள் ஒருவர் பிரித்தானியாவில் தொழில் புரிந்தால் மட்டுமே அவருக்கு அங்கு நிரந்தரமாக இருக்க முடியுமென்ற சட்டத்தினை நீக்குவதற்கு அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதில் குடியேற்றவாசிகள் தமது துணைகளுக்கு பிரித்தானியக் கடவுச்சீட்டை வழங்குவதற்கான உரிமையையும் தடைசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வருட முடிவில் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.இத்திட்டங்களின் படி பிரித்தானியாவிற்கு வேலை அனுமதி பெற்றுவரும் வெளிநாட்டவர்கள் 5 வருடம் சட்டபூர்வமாக தங்கி வேலை செய்தாலும் தொடர்ந்தும் அவர்களால் அங்கு தங்கமுடியாதெனக் கூறப்படுகின்றது.
பிரித்தானிய அரசு அங்கு வரும் மக்களுக்கு எதிராக இல்லை என்றாலும் அவர்களை அங்கு தற்காலிகமாகத் தங்கவிடுவது நிரந்தரமாகத் தங்கும் நிலையை ஏற்படுத்தாது என பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதனால் தமது தகுதியையும் தரத்தினையும் பொறுத்து அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்புபவர்களுக்காகப் புதியதொரு சட்டம் உருவாக்கப்படவுள்ளது.உயர் வருமானங்களைப் பெறும் வர்த்தகர்கள், லட்சாதிபதிகள் போன்றவர்கள் இதில் விதிவிலக்காவர். காரணம் இவர்கள் ஏனையவர்களுக்கும் வேலைகளை உருவாக்குகின்றார்கள் என்பது தான்.அது போலவே ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் வசிக்க உரிமையுள்ளது. இவர்களால் பிரித்தானியா பாதிக்கப்படாது என கூறுகின்றனர்.
மீண்டும் கோமாளி அமைச்சரின் அராஜகம்! பெற்றோரை அறைந்த மேர்வின்!!
களனி தர்மலோக பாடசாலைக்கு இன்று விஜயம் செய்த பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா பாடசாலைக்கு வெளியில் வைத்து பெற்றோர் ஒருவரை கடுமையாக ஏசியதுடன் கன்னத்திலும் அறைந்துள்ளார்.களனிப் பிரதேசத்தில் சண்டியனும் நானே, அரசியல்வாதியும் நானே இங்கே எவருக்கும் விளையாட்டு போட முடியாது என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பாடசாலை அபிவிருத்தி தொடர்பான நலன்புரி லொத்தர் சீட்டிலுப்பில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் ஊடகங்களில் குரல் கொடுத்த நபர் ஒருவரே இவ்வாறு அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளவராவார்.அமைச்சர் மேர்வின் சில்வா குறித்த நபரை மிகவும் திட்டித் தீர்க்கும் காட்சிகளும் கன்னத்தில் அறைகின்ற காட்சியும் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.குறித்த பாடசாலையில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தப்பட்டு லொத்தர் டிக்கற் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பணம் கொடுக்காத மாணவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட நபர் தெரிவித்தார்.தர்மலோக பாடசாலைக்கு நீச்சல் தடாகம் ஒன்று அவசியம் எனவும் இங்குள்ள மாணவர்கள் எல்லாம் தனது பிள்ளைளைப் போன்றவர்கள் எனவும் பாடசலையின் அபிவிருத்திக்கு பெற்றோர்கள் உதவி செய்யவேண்டும் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா அங்கு கருத்து தெரிவித்துள்ளார்.
த.தே.கூட்டமைப்பு நாட்டுக்கு எதிராக ஒருபோதும் தகவல் வழங்கியிருக்காது : அரசு நம்பிக்கை.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் இதயசுத்தியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறானதொரு நிலையில் நாட்டுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் மூவரடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.
இந்த நிபுணர் குழு பல்வேறு கோணங்களில் பல்வேறு தரப்பினர்களிடம் எழுத்துமூலம் சாட்சியங்களைத் திரட்டி அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.தருஸ்மன் தலைமையிலான இந்த நிபுணர் குழுவிற்கு வன்னியில் நடந்த அவலங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரகசியமாகத் தகவல்களை வழங்கியுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.சிங்கள பேரினவாதிகள் ஐ.நா. அறிக்கைக்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தவர்கள். இதனால் கொதிப்படைந்தனர். பல்வேறு கோணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கத் தொடங்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஐ.நா. அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றதே. இந்த விடயம் இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டபோதே, அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுகளில் அரசுத் தரப்புக்குத் தலைமை வகிப்பவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிபுணர் குழு பல்வேறு கோணங்களில் பல்வேறு தரப்பினர்களிடம் எழுத்துமூலம் சாட்சியங்களைத் திரட்டி அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.தருஸ்மன் தலைமையிலான இந்த நிபுணர் குழுவிற்கு வன்னியில் நடந்த அவலங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரகசியமாகத் தகவல்களை வழங்கியுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.சிங்கள பேரினவாதிகள் ஐ.நா. அறிக்கைக்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தவர்கள். இதனால் கொதிப்படைந்தனர். பல்வேறு கோணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கத் தொடங்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஐ.நா. அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றதே. இந்த விடயம் இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டபோதே, அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுகளில் அரசுத் தரப்புக்குத் தலைமை வகிப்பவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நாட்டுக்கு எதிராக முக்கியமான தருணங்களில் செயற்படமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.அதேபோன்றுதான் ஐ.நா.நிபுணர் குழுவுக்கும் அவர்கள் சாட்சியம் வழங்கியிருக்கமாட்டார்கள் என நாம் நம்புகின்றோம். ஊடகங்களில்தான் இவ்வாறான தகவல்கள் வெளிவருகின்றன. ஊடகங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வுடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இது அவர்களுக்கும் தெரியுமென நினைக்கின்றோம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எதிராகக் கூட்டமைப்பு செயற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நாட்டுக்கு எதிராக முக்கியமான தருணங்களில் செயற்படமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.அதேபோன்றுதான் ஐ.நா.நிபுணர் குழுவுக்கும் அவர்கள் சாட்சியம் வழங்கியிருக்கமாட்டார்கள் என நாம் நம்புகின்றோம். ஊடகங்களில்தான் இவ்வாறான தகவல்கள் வெளிவருகின்றன. ஊடகங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வுடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இது அவர்களுக்கும் தெரியுமென நினைக்கின்றோம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எதிராகக் கூட்டமைப்பு செயற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
அதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை அரசு அடியோடு நிராகரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அறிக்கையை ஏற்றுள்ளதுடன் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துமாறும் அரசை வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கிறீன் கார்ட் விசா!- விண்ணப்பங்கள் இன்று முதல் இணையம் ஊடாக ஏற்கப்படும்! கொழும்பு தூதரகம்.
அமெரிக்காவில் சட்ட ரீதியாக குடியேறுவதற்காக கிறீன் கார்ட் விசா வருடந்தோறும் குலுக்கல் முறையில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமையவே இம்முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆங்கிலம், சிங்களம், தமிழ்மொழி மூலமான அறிவுறுத்தல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளத்தில் http://srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html என்ற முகவரியினூடாக பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான பதிவுக் கட்டணம் முற்றிலும் இலவசமாகும். பதிவுகளை மேற்கொள்வதற்கான இறுதித் திகதி 05/11/2011 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந் நடைமுறையில், குறைந்த அளவில் அமெரிக்காவிற்கான குடியேற்ற எண்ணிக்கையைக் கொண்ட நாடுகளுக்கே வருடாந்தம் இது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நவம்பர் மாதத்தில் சூறாவளி ஏற்படும்? வளிமண்டலவியல் திணைக்களம்.
தற்போது நிலவுகின்ற அதிவெப்பமான காலநிலையே வங்காள விரிகுடாவில் சூறாவளி உருவாகக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தினங்களில் மேல், தென், மத்திய, வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் மாலை வேளைகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
காலி, மாத்தறை மாவட்டப்பகுதிகள் மற்றும் மேல்மாகாணத்தில் காலை வேளை மழையும் பலத்த காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்களை பாதுகாப்பாக இருந்து தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பினை குறைக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மின்னல் தாக்கியதில் இவ்வருடத்தில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 30 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலை மையப்படுத்தியே எரிவாயு வளம் இருப்பதாக மஹிந்த அறிவிப்பு?
எதிர்வரும் 08 ஆம் திகதி நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலை மையப்படுத்தியே இலங்கையின் மன்னார் கடல் படுகையில் எரிவாயு வளம் இருப்பதாக ஜனாதிபதி நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
மன்னார் கடல் படுகையில் எரிவாயு வளம் இருப்பதாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் இரு வாரங்களுக்கு முன்னரே ஜனாதிபதிக்கு அறியக் கொடுத்துள்ளது. எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பிரசாரப் பணிகள் உச்சக் கட்டத்தை அடையும் வரை இந்த அறிவிப்பை வெளியிடுவதில்லை என அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்ததாக தெரியவருகிறது.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த 1974ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கூறி, அதிலிருந்து எடுக்கப்பட்டதெனக் கூறி ஒரு போத்தல் எண்ணெயையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு எடுத்து வந்து மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சித்த சம்பவமும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டத்தக்கது.
தோ்தல் ஆணையாளருக்கு அனுப்ப முன் அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்ட ஐனாதிபதி தேர்தல் முடிவுகள் : வீக்கிலீக்ஸ்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அம்பாறை, அனுராதபுரம், பொலனறுவை உட்பட முக்கியமான எட்டு மாவட்டங்களின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளையே இவ்வாறு தோ்தல் ஆணையாளருக்கு அனுப்பமுன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றினிஸ், யுஎஸ்எய்ட் பணிப்பாளர் ஆகியோர் சேம்பர் ஒவ் கொமேர்ஸைச் சேர்ந்த பத்து வர்த்தகப் பிரதிநிதிகளுடனும், அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவுடனும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள குறிப்பிலேயே மேற்சொன்ன விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்தோடு கருணாவின் இரண்டாம் நிலைத் தளபதியும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரான இனியபாரதி 600 அல்லது 700 ஆயுதந்தாங்கிய ஆதரவாளர்களுடன் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வர்த்தகப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறியுள்ளனர் எனவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் சில தினங்களில் எல்மோ பெரேரா என்ற சட்டத்தரணி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கா 2010 ஜனவரி 26ஆம் திகதி 3.30 மணியிலிருந்து 2010 ஜனவரி 27ஆம் திகதி மாலை 4.45மணிக்கிடையில் எங்கிருந்தார் என்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
காவல்துறை சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.
அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக காவல்துறைத் திணைக்களத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வலுவிழந்துள்ளது.நாட்டின் பல அரசாங்க நிறுவனங்களை மக்கள் சந்தேகமாகவே பார்க்கின்றனர்.
மொரட்டுவையில் காவல்துறை உத்தியோகத்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை, தொம்பே பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்மை போன்ற சம்பவங்கள் காவல்துறை சேவை அபாயகரமான நிலையை நோக்கி நகர்வதனை பறைசாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில செல்வாக்கானவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டிய நிர்பந்தம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.அடக்குமுறைச் சம்பவங்களின் போது காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றனர்.சுயாதீனமான காவல்துறை சேவையொன்று அமைக்கப்பட வேண்டியது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவின் கோட்டையாக இருந்த மாநகரசபைகள் கைமாறும் நிலை!- ஜனாதிபதி.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கண்டி வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போதைய அரசு, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் ஆற்றிவரும் சேவைகளை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். கொழும்பு நகரை பசுமைமிகு நகரமாக மாற்றப்பட்டுள்ளது.வாகன நெரிசலை கட்டுப்படுத்த திட்டங்கள் பல முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான பிரதி பலன் தற்போது தெரிய வந்துள்ளது.எனவே கண்டி, கொழும்பு மாநாகர சபை அதிகாரங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றும் என்றார்.
ஈராக்கில் காவல் துறை தலைமையகத்தின் மீது தாக்குதல்: 7 பேர் பலி.
ஈராக்கில் காவல் துறை தலைமையகத்தின் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், உயர் அதிகாரி மற்றும் மேயரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடமேற்குப் பகுதியில் 150 கி.மீ தூரத்தில் உள்ள அல்-பாக்தாதி நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. தாக்குதலின் போது அப்பகுதியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாகவும், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸ் உயரதிகாரி மற்றும் அந்த வளாகத்தில் உள்ள மேயர் அலுவலகத்தில் இருந்த மேயரையும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் பொலிசார் பலர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். இதனிடையே அல்-நிபாயே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
தொழில் வயது வரம்பை ரத்து செய்த பிரிட்டன் அரசு.
பிரிட்டனில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஒருவர் தொழிலொன்றிலிருந்து ஓய்வு பெற வேண்டிய சட்ட ரீதியான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுவிட்டது.
ஒருவர் 65 வயதை அடைந்தவுடன் வயதைக் காரணம் காட்டி அவரை தொழிலிருந்து நீக்குவதற்கு தொழில் வழங்குநருக்கு இருந்த அதிகாரத்தை இந்தப் புதிய சட்டம் இத்துடன் ஒழித்துவிட்டது.ஆனாலும் பிரிட்டனில் உள்ள தொழில் ஸ்தாபனங்களில் பத்தில் ஒரு நிறுவனம், ஊழியர்களை குறித்த ஒரு வயதில் ஓய்வு பெறச் செய்வதற்காக ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதாக நோர்ட்டன் ரோஸ் என்ற சட்ட நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ள ஏஜ் யூகே என்ற தன்னார்வ நிறுவனமொன்று ஆனாலும் வேலைத்தளங்களில் வயதை மையமாகக்கொண்ட பாரபட்சங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஊழியர்களுக்கு ஓய்வு பெறுமாறு வழங்கும் நோட்டிசுகளை ஆறு மாதத்துக்கு குறைந்த காலத்துக்குள் வழங்க முடியாது, ஒருவரை ஓய்வு பெறச் செய்வதானால் அது நிறுவனத்திற்கு நியாயமாக அவசியப்படுகிறது என்பதை உறுதிப்படு்த்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் 6 மாதங்களுக்கு முன்னர் பிரிட்டனில் அமுலுக்கு வந்தன.எவரையும் வயதைக் காரணங்காட்டி ஓய்வு பெறுமாறு வற்புறுத்துவது இனி பிரிட்டனில் வயது ரீதியான பாரபட்சம் என்ற சட்டப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
பாகிஸ்தானில் இருவரை கொன்ற குற்றச்சாட்டில் சிஐஏ ஏஜெண்ட் கைது.
சிஐஏ ஏஜென்ட் ரேமண்ட் டேவிஸ், கார் பார்க்கிங் தகராறில் ஒருவரை அடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் உளவு நிறுவனம் சிஐஏ ஏஜென்ட் ரேமண்ட் டேவிஸ். இவர் பாகிஸ்தானில் தங்கியிருந்தார்.கடந்த ஜனவரி மாதம் லாகூர் சாலையில் நடந்த தகராறில் 2 பேரை ரேமண்ட் சுட்டுக் கொன்றார். இவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இருநாட்டு உறவில் சிக்கல் எழுந்தது. அதன்பின், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு பெரும் தொகை நஷ்டஈடாக வழங்க முடிவானது.ஏழு வாரங்களுக்கு பின் சிறையில் இருந்து ரேமண்ட் விடுவிக்கப்பட்டார். அதன்பின் இவர் அமெரிக்கா திரும்பினார். கொலராடோவில் உள்ள டென்வர் பகுதியில் நேற்று ஷாப்பிங் சென்ற போது கார் பார்க்கிங் ஏரியாவில் ஜெப்ரி மேஸ்(50) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.
திடீரென ஜெப்ரியை அடித்துவிட்டார் ரேமண்ட். இதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக ரேமண்டை பொலிசார் கைது செய்தனர்.இவருக்கு 1750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதை செலுத்திய பின் விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவிலேயே சிஐஏ ஏஜென்ட் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து.
ஈரானை சேர்ந்த பாரம்பரிய இமாம் குடும்பத்தினருக்கு “அகா கான்” என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்டத்தில் இருப்பவர் ஷா கரீம் அல் உசேனி(74).
49வது அகா கான். சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். பல தொழில்கள் செய்து வருபவர். ரூ.46 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்.
எல்லா கண்டங்களிலும் பங்களா வைத்திருக்கிறார். 600 ரேஸ்கோர்ஸ் மைதானங்கள் வைத்துள்ளார். பிரபல மொடல் அழகி சாரா சலியை 1969ல் திருமணம் செய்தார்.
25 ஆண்டுகளில் 3 பிள்ளைகள் பிறந்தன. 1995ல் அவரை டைவர்ஸ் செய்துவிட்டு ஜேர்மனியை சேர்ந்த பொப் பாடகி பேகம் இனாராவை(52) 1998ல் பிரான்சில் உள்ள தனது எய்ஜில்மன்ட் எஸ்டேட்டில் இரண்டாவது திருமணம் செய்தார். டைவர்ஸ் பெறப்போவதாக இருவரும் 2004ல் அறிவித்தனர்.
பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இனாராவுக்கு ரூ.80 கோடி ஜீவனாம்சம் கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இனாரா அப்பீல் செய்தார். மேல் கோர்ட் விசாரித்து ரூ.416 கோடி கொடுக்க தற்போது உத்தரவிட்டுள்ளது. இது பிரான்சின் காஸ்ட்லி விவாகரத்து என கூறப்படுகிறது.
லிபியாவில் சிர்ட் நகரின் மீது எதிர்ப்பாளர்கள் கடும் தாக்குதல்.
லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் உள்ள சிர்ட் நகரின் மீது எதிர்ப்பாளர்கள் நேற்று கடும் தாக்குதல் தொடுத்துள்ளனர்.இந்நிலையில் தென் பகுதி நகரான சபாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கடாபியின் மகன் அல் சாடி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம், பானி வாலித், சிர்ட், சபா மற்றும் ஜுப்ரா ஆகிய நகரங்கள் உள்ளன. இவற்றில் முதல் இரு நகரங்களின் மீது எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் சிர்ட் நகரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முதல் சிர்ட் நகர் மீதான தாக்குதலை எதிர்ப்பாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேற இயலாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் தென்பகுதி நகரான சபாவில் இருந்து 1,200 ஆப்ரிக்கர்கள் “சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பின்” மூலம் சாட் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிழைப்புக்காக சபா நகருக்கு வந்தவர்கள்.இதற்கிடையில் நைஜரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கடாபியின் மகன் அல் சாடி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் லிபிய கால்பந்தாட்டக் குழுவின் தலைவராக இருந்த போது ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்திப் பணம் பறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இக்குற்றங்களின் அடிப்படையில் அவரை தேடப்படும் அரசியல்வாதிகள் பட்டியலில் சேர்க்கப் போவதாக சர்வதேச பொலிசான இன்டர்போல் அறிவித்துள்ளது.
2040ல் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறும்: அமெரிக்கா.
உலகம் முழுவதும் பேப்பரின் பயன்பாடு குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் மயமாக மாறும் என அமெரிக்காவின் இன்டலக்சுவல் பிரபார்ட்டி அமைப்பின் தலைவர் பிரான்சிஸ் கரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: வரும் 2040ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயம் ஆக்கிரமித்திருக்கும்.
அமெரிக்காவில் வரும் 2017ம் ஆண்டிற்கு பின்னர் பேப்பரின் பயன்பாடு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதற்கு முன்னோடியாக தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படும் புத்தகங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன.இதனால் ஆசிரியர் மற்றும் பதிப்பகங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை. காரணம் பதி்ப்புரிமை பெறுவதன் மூலம் வருமானத்தை ஈடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: கிலானி.
எவ்வித முன் நிபந்தனைகளும் இன்றி தலிபான்களுடன் பேச்சு நடத்த தமது அரசு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் அலசப்பட்டது. அதில் இறுதி முடிவாக நமது மக்களுடன் (பயங்கரவாதிகள்) பேச்சு நடத்துவதன் மூலம் நாட்டில் அமைதியைக் கொண்டு வர முடியும் என தீர்மானிக்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் விதத்தில் நேற்று முன்தினம் பேட்டியளித்த கிலானி கூறியதாவது: எனது அரசு தலிபான்களை நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று பார்க்கவில்லை.அவர்களை தலிபான்களாகவே பார்க்கிறது. அமெரிக்க அரசு அவர்களுடன் ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளது. மவுல்வி பஸ்லுல்லாவுடன் அரசு ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் பேச்சு நடத்தி வந்தது.ஆனால் பஸ்லுல்லா ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அதனால் தான் ஸ்வாட் பழங்குடியினர் அவரை எதிர்த்து வருகின்றனர்.
தலிபான்களுடன் அமைதிப் பேச்சுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு வேளை பேச்சு தோல்வியடையும்பட்சத்தில் பழங்குடியினப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் துவக்கப்படும்.தலிபான்களை ஆயுதங்களைப் போட்டு விட்டு வரும்படி நிபந்தனைகள் எதுவும் நாங்கள் விதிக்கவில்லை. ஏனெனில் ஆயுதங்களுடன் இருப்பது தான் பழங்குடியினர் பண்பாடு. இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும், பார்லிமென்ட் குழு ஒன்றால் கண்காணிக்கப்படும். இந்தக் குழு விரைவில் அமைக்கப்படும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஹக்கானி குழுவும் கலந்து கொள்ளுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத கிலானி,“பார்லிமென்ட் குழுவின் பரிந்துரைகளின்படி பேச்சு நடக்கும்” என்றார்.இதற்கு முன் தலிபான்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு,“அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வந்தால் தான் அது சாத்தியம்” என்று கூறி வந்த கிலானி தற்போது முதன் முறையாக அந்த நிபந்தனையைக் கைவிட்டுள்ளார்.
ஜப்பானில் புதிய பிரதமரின் செல்வாக்கு சரிந்தது: கருத்துக்கணிப்பில் தகவல்.
ஜப்பானின் புதிய அமைச்சரவை மீதான மக்கள் ஆதரவு, கணிசமான அளவில் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் திகதி நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி அதைத் தொடர்ந்த புகுஷிமா அணுமின் நிலையப் பேரிடர் ஆகியவற்றில் அப்போதைய பிரதமர் நவோட்டோ கான் தலைமையிலான அமைச்சரவை சரியாகச் செயல்படவில்லை என மக்கள் கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.இதையடுத்து கடந்த செப்டம்பர் 2ம் திகதி புதிய பிரதமர் யோஷிஹிக்கோ நோடா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது.
பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை பற்றி கடந்த வார இறுதியில் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தொலைபேசி மூலம் ஆயிரத்து 12 வீடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் அமைச்சரவைக்கு 54.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனால் இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆதரவு 62.8 சதவீதமாக இருந்தது. அதேபோல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வரி உயர்த்தப்பட வேண்டும் என அரசு கூறி வருவதற்கு 50.5 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 46.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆப்கன் அதிபர் ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை: ஹக்கானி குழு மறுப்பு.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என ஹக்கானி குழுவின் முக்கிய தலைவரான சிராஜூதின் ஹக்கானி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் முன்னாள் அதிபர் பர்ஹனுதீன் ரப்பானியின் படுகொலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹக்கானி குழுவிற்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூறி வந்தது.அதேபோல் பாகிஸ்தானி ஒருவர் தான் ரப்பானியைக் கொலை செய்தார் என சமீபத்தில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் குற்றம்சாட்டினார்.
ஹக்கானி குழுவிற்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் இடையிலான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளால் சமீபத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கன், பாகிஸ்தான் உறவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஹக்கானி குழுவின் முக்கிய தலைவரான சிராஜூதின் ஹக்கானி நேற்று பி.பி.சி செய்தி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கூறியதாவது: ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை. இதை எங்கள் செய்தித் தொடர்பாளர்கள் பல முறை உறுதி செய்துள்ளனர்.
அதேபோல் அமெரிக்கா குற்றம்சாட்டுவது போல எங்களுக்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவை அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் விளையாட்டு. விரைவில் இது முடிவுக்கு கொண்டு வரப்படும்.கடந்த 1980களில் சோவியத் படைகள் ஆப்கனுக்குள் ஊடுருவிய போது நாங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருந்தோம்.ஆனால் அமெரிக்கப் படைகள் வந்த பின் அந்தத் தொடர்பை தொடரவில்லை. ஆப்கனில் பெற்ற தோல்வியை மறைக்கத்தான் அமெரிக்கா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது.
மருத்துவ துறையில் மூன்று நபருக்கு நோபல் பரிசு.
இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக மருத்துவத்திற்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மனித உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை பற்றிய மர்ம முடிச்சுகளை அவிழ்த்ததற்காக மூன்று பேருக்கு இப்பரிசு வழங்கப்பட உள்ளது.சுவீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எழுதி வைத்த உயிலின் படி 1901ம் ஆண்டு முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என்ற வரிசையில் இந்தப் பரிசுகள் அறிவிக்கப்படும்.இதில் முதற்படியாக மருத்துவத் துறையில் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்திய மூன்று பேருக்கு இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அமெரிக்கரான ப்ரூஸ் பட்லர், பிரான்ஸ் நாட்டவரான ஜூல்ஸ் ஹாப்மேன் மற்றும் கனடா நாட்டவரான ரால்ப் ஸ்டெயின்மென் ஆகியோர் இப்பரிசை பெறுகின்றனர். பரிசுத் தொகையான 1.5 மில்லியன் டொலர் இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.இத்தகவல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு குழுவால் அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு புரட்சிகரமான ஆண்டாக இருப்பதால் துனிஷியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த புரட்சிகளில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க துணை அதிபரின் சகோதரரருக்கு மர்ம பார்சல்.
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் சகோதரருக்கு வந்த பார்சலில் ஆந்த்ராக்ஸ் உயிர்கொல்லி பவுடர் இருந்ததாக பீதி ஏற்பட்டது.அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன். இவரது இளைய சகோதரர் பிரான்சிஸ் பிடன்(57). புளோரிடாவில் வசிக்கிறார். இவருக்கு இந்தியாவில் இருந்து ஒரு பார்சல் வந்திருந்தது.
அதை பிரித்து பார்த்த போது வெள்ளை நிறத்தில் பவுடர் கொட்டியது. பிரான்சிஸ் உடலில் பவுடர் கொட்டியதால் அவர் பரபரப்பு அடைந்தார். ஆந்த்ராக்ஸ் உயிர் கொல்லி பவுடராக இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதிகாரிகள் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரை உடனடியாக வெளியேற்றினர். பிரான்சிஸ் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
வெள்ளை நிற பவுடரை டாக்டர்கள் தீவிர ஆய்வு செய்தனர். அதில் பயப்படும்படி எந்த ரசாயனமும் இல்லை என்று உறுதிப்படுத்திய பின் பிரான்சிசை அங்கிருந்து அனுப்பினர்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது தோழி மிண்டி ஒரு பார்சலுடன் சனிக்கிழமை பிற்பகல் வந்தார். இந்தியாவில் இருந்து எனக்கு பார்சல் வந்திருப்பதாக கூறி கொடுத்தார்.
அதை பிரித்தபோது வெள்ளை பவுடர் கொட்டியது. ஆந்த்ராக்சாக இருக்குமோ என்ற பயம் ஏற்பட்டது. அதிகாரிகள் என்னையும் மிண்டியையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.தீவிர பரிசோதனைக்கு பின் தோழியை அனுப்பி விட்டனர். என் மீது பவுடர் கொட்டியதால் மருத்துவமனையில் என்னை தீவிரமாக பரிசோதித்தனர். இரவு முழுக்க மருத்துவமனையிலேயே கழித்தேன்.பவுடரில் எந்த ரசாயனமும் இல்லை என்று உறுதிப்படுத்தினாலும் இந்தியாவில் இருந்து பார்ச்சல் அனுப்பியது யார் என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
லிபியாவின் ஆயுத கிடங்கில் 10 ஆயிரம் ஏவுகணைகள் மாயம்.
லிபியாவில் மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி வீழ்ந்தது. தற்போது அங்கு புரட்சி படையின் தலைமையிலான இடைக்கால அரசு அழைக்கப்பட்டுள்ளது.இருந்தும் கடாபியின் ராணுவம் சிந்த், பானிவாலிட் உள்ளிட்ட ஒரு சில நகரங்களை தங்கள் வசம் வைத்துள்ளது. அவற்றையும் கைப்பற்ற ராணுவத்துடன் புரட்சி படை தீவிரமாக போரிட்டு வருகிறது.
லிபியாவை தற்போது ஆளும் இடைக்கால அரசு ஷின்பான் நகரில் உள்ள ஆயுத கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது அங்கு இருந்த 10 ஆயிரம் ஏவுகணைகளை காணவில்லை. கடாபியின் ஆட்சியின் போது சோவியத் ரஷியா மற்றும் பல்கேரியாவில் இருந்து 20 ஆயிரம் சாம்-7 என்ற ஏவுகணை வாங்கப்பட்டன.அவை தவிர மேலும் ஏவுகணைகள் இருந்தன. அதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தி அழிக்கப்பட்டு விட்டன.
அவை தவிர மீதம் இருந்த 10 ஆயிரத்தக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மாயமாகி விட்டன. அவை தீவிரவாதிகள் போன்ற தவறானவர்கள் கையில் கிடைத்திருக்கலாம் என கடாபியின் முன்னாள் ஆயுத கிடங்கு பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆயுதங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இடைக்கால அரசு நிர்வாகிகளுடன் சேர்ந்து அவற்றை கவனமுடன் பாதுகாத்து வருவதாக உறுதி அளித்துள்ளது.
டென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கொழுப்பு சத்துமிக்க பால், இறைச்சி, வெண்ணை, பீஷா மற்றும் எண்ணெய் வகைகளை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகி நலன் பாதிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் தங்கள் நாட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்ற உடல் நலத்துடன் வாழ வைக்க டென்மார்க் அரசு புதுவிதமான அதிரடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது கொழுப்பு சத்து மிகுந்த திரவ வடிவிலான பால், வெண்ணை, எண்ணெய் வகைகள் மற்றும் இறைச்சி, பீஷா உள்ளிட்ட உணவுபொருட்களுக்கு புதிதாக வரி விதித்துள்ளது.இதனால் அவற்றின் விலை முன்பைவிட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொழுப்பு உணவு பொருட்கள் மீதான வரி அடுத்த வாரத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.
இதனால் அவற்றை இப்போதே வாங்கி “ஸ்டாக்” வைத்து கொள்ள மக்கள் தயாராகி விட்டனர். டென்மார்க் தலைநகரம் கோபன்கேகனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் கடுமையாக விற்பனை ஆகின்றன.எனவே அவற்றை வியாபாரிகள் வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக கொழுப்பு சத்து பொருட்களுக்கு விசேஷமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நலனில் அக்கறை கொண்ட மற்ற நாடுகள் பின்பற்றினாலும் ஆச்சரியமில்லை.
ஏமனில் விமானத் தாக்குதல்: 30 வீரர்கள் பலி.
ஏமன் ராணுவம் சனிக்கிழமை மாலை தவறுதலாக நடத்திய விமானத் தாக்குதலில் 30 வீரர்கள் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.ஏமன் நாட்டில் அதிபருக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தெற்கு அபியான் மாகாணத்தில் உள்ள பள்ளிக் கட்டடம் ஒன்றில் ராணுவத்தின் 119வது படைப்பிரிவினர் தங்கியிருந்தனர்.
அபியான் மாகாணத்தின் தலைநகரான ஜின்ஜிபாருக்கு கிழக்கே இப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து இப்பகுதி முழுவதும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக ராணுவம் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இதுகுறித்து ஏமன் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“விமானத் தாக்குதல் நடைபெற்றதும், அந்தப் பள்ளிக்கு வந்த தீவிரவாதிகள் காயமடைந்த ராணுவ வீரர்களைத் துப்பாக்கியால் சுட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றார்.