Friday, October 7, 2011

பிரச்னைகளுக்கு தீர்வு தரும் விண்டோஸ்7...


விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் உள்ள கணணியில் இயங்கும் புரோகிராம் ஒன்று சரியாக இயங்காமல் முடங்குகிறதா?இதற்கான தீர்வு தரும் வழியினை விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் தன்னுள்ளே கொண்டுள்ளது. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில் Troubleshoot என டைப் செய்து என்டர் அழுத்தவும்.
அதன் பின்னர் கிடைக்கும் பட்டியலில் Troubleshooting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள Troubleshooter என்னும் பிரிவினை இயக்கும். இதில் பலவகையான பிரச்னைகள் குறித்த பட்டியல் கிடைக்கும்.இங்கு உங்கள் பிரச்னையே பட்டியலிடப்பட்டிருக்கலாம் அல்லது சார்ந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து மேலும் உள்ளாகச் சென்று உங்களுடைய பிரச்னை குறிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.
சில புரோகிராம்கள் தரும் பிரச்னை எனில் அவை இதற்கு முந்தைய ஓபரேட்டிங் சிஸ்டத்தில் நன்றாக இயங்கி தற்போது சரியாக இயங்கவில்லை என்றால் இங்கு கிடைக்கும் Program Compatibility என்ற விண்டோவில் அதற்கான தீர்வினைப் பெறலாம்.இந்த விண்டோ சென்றவுடன் நம் கணணியில் நிறுவியுள்ள  அனைத்து புரோகிராம்களின் பட்டியல் காட்டப்பட்டு எந்த புரோகிராமில் பிரச்னை உள்ளது என நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் Troubleshoot program என்ற பிரிவில் அந்த புரோகிராமில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்னைகளும் பட்டியலிடப்படும். நம் பிரச்னையைத் தேர்ந்தெடுத்தால் தீர்வு காட்டப்படும்.இதற்கு முந்தைய ஓபரேட்டிங் சிஸ்டங்களிலும் இந்த வசதி இருந்தாலும் பெரும்பாலும் “This device is working properly” என்ற விடையே கிடைத்து வந்தது. ஆனாலும் பிரச்னை தீர்க்கப்படவில்லை. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த வசதி நன்றாகவே இயங்குகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF